Monday, September 8, 2014

சிக்கன் கோலாபூரி போல விஜிடபிள் கோலாபூரி - ஆணின் சமையல் குறிப்பு



கோட்டச்சங்க மாநாட்டுப் பணிகள் காரணமாக சமையலறை பக்கம் சென்று நீண்ட காலமாகி விட்டது. நேற்றுதான் கொஞ்சம் அவகாசம் கிடைத்தது.

ரீ என்ட்ரி சாதாரணமாக இருக்கக் கூடாதல்லவா? கொஞ்சம் மெனக்கெட்டு ஏதாவது செய்வோம் என்று யோசித்த போது குமுதம் இதழில் தொலைக்காட்சி நடிகை ப்ரீத்தி எழுதியிருந்த சிக்கன் கோலாபுரி நினைவுக்கு வந்தது. அதையே சைவமாக மாற்றி விட்டேன்.

இதோ உங்களுக்காக விஜிடபிள் கோலாபுரி

முதலில் மல்லி, மிளகு, கிராம்பு, மிளகாய் வற்றல், வெள்ளை எள், கசகசா, பிரிஞ்சி இலை, பெரும் சீரகம் இதை தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ளவும்.

பிறகு தேங்காய் துறுவலை வறுத்துக் கொள்ளவும்.


வறுத்த தேங்காயையும் மசாலாப் பொருட்களையும் ஒன்றாக தண்ணீர் விட்டு மிக்ஸியில் அறைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

பிறகு சிறிய உருளைக் கிழங்கி, காரெட், காலி ப்ளவர் ஆகியவற்றை தனித்தனியாக வேக வைத்துக் கொண்டு இந்த மசாலாவில் கொஞ்ச நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.


பிறகு ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு வெடித்ததும் கருவேப்பிலை போட்டு பிறகு பொடித்த வெங்காயம், தக்காளியை வதக்கவும். இப்போது உப்பு சேர்க்கவும். 


வெங்காயம், தக்காளி நன்கு வதங்கியதும் ஊற வைத்துள்ள உருலை, காரட், காலி ப்ளவரை மசாலாவோடு சேர்க்கவும். ஒரு பத்து நிமிடம் நன்றாக கொதித்தவுடன் இறக்கி வைத்து கொத்தமல்லி தழை தூவவும்.


நேற்று என் மனைவி செய்த ஸ்வீட் கார்ன் புலாவிற்கு சரியான சைட் டிஷ்ஷாக இது இருந்தது. 
  செய்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்

7 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. பெரியசாமி என்ற பொய்ப்பெயரில் உலா வருபவரே, சொந்த ஐ.டி யில் வ்ராத உங்கள் பின்னூட்டங்கள் இனி இப்படி பிரசுரிக்கப்பட்டு நீக்கப்படும்

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete