Thursday, September 18, 2014

வரலாற்றுப் பிழை மோடியின் வாடிக்கை

நேற்றைய தீக்கதிர் நாளிதழில் வந்த செய்தியை கீழே தந்துள்ளேன். வரலாற்றை மாற்றிப் பேசுவது என்பது மோடிக்கு ஒன்றும் புதிதல்லவே. அப்படி அபத்தமாக பேசினால்தானே அது மோடி.
 
தலித் போராட்டம் பற்றி உண்மைக்குப் புறம்பான உரை மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கேரள தலித் அமைப்புகள் கோரிக்கை
 
கொச்சி, செப்.16-1913ம் ஆண்டு கொச்சி காயல் மாநாடு தொடர்பாக புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றியது உண்மைக்குப் புறம்பானது என்றும் தவறைத்திருத்தி மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும் கேரள தலித் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.மகாத்மா அய்யன்காளியின் பிறந்தநாள் விழாவை புதுதில்லியில் பிஜேபியும் சில தலித் அமைப்புகளும் நடத்தின. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றும்போது கொச்சி காயல் மாநாடு பற்றியும் அதில் மகாத்மா அய்யன்காளி பற்றியும் பேசினார்.

காயல் (ஏரி) மாநாட்டை பண் டிட் கறுப்பன்தான் நடத்தினார் என்ற வரலாறு உள்ள போது பிரதமர் உண்மைக்கு மாறாகப் பேசியதை ஏற்க முடியாது என்றும் கவிதிலகர் பண்டிட் கறுப்பன் என்பவரை இழிவு செய்த பிரதமர் செயலைக் கண்டிப்பதென்றும் பிரதமரை வரலாறு உண்மையாகக் கூறாமல் யாரோ தடுத்துவிட்டார்கள் என்றும் விமர்சனம் எழுந் துள்ளது.விவசாயத் தொழிலாளர்களான தலித் சமுதாயத்தை சார்ந்தவர்கள் கொச்சியில் மாநாடு நடந்த 1913ல் முயன்றபோது கொச்சி மன்னர் அதற்கு அனுமதிக்காத நிலையில் மரக்கட்டைகளால் மிதவைகள் உருவாக்கி ஏரியில் தலித் விவசாயத் தொழிலாளிகளை அணிதிரட்டி பண்டிட் கறுப்பன் மாநாட்டை நடத்தினார் என்றுதீவர சபை தலைவர் வி.தினகரன் கூறினார்.

மகாத்மா அய்யன் காளி 1913ல் திருவிதாங்கூர் பகுதியில்தான் செயல்பட்டார். உண்மைக்கு மாறாக பிரதமர் பேசும் சூழ் நிலையை உருவாக்கியவர்களை கண்டிக்கிறோம் என்றார்.“பிரதமர் அய்யன்காளியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டாலும் வரலாறை திருப்பி பேசியது கேரள தலித் மக்களுக்கு அவமானமாகும்’ என்றுகேரள தலித் மகாசபை தலைவர் கூறினார். 

கே.பி.வள்ளோன், இஷ்ணாதிஆசான், சாஞ்சன் எம்எல்சி தலை மையில் பண்டிட் கறுப்பனின் ஆதரவில் நடைபெற்ற தலித்போராட்டத்தை உண்மைக்குமாறாக அய்யன் காளிதான் போராட்டம் நடத்தினார் என்றுபிரதமர் கூறியதை அய்யன் காளியையும் அவமானப்படுத்திய தாக கூறப்படுகிறதுதலித் வரலாற்றை மாற்றியும் அவர்களின் மறுமலர்ச்சி நாயகர்களை அவமானப்படுத்தவும் செய்த பிரதமர் மோடி மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று கேரள தலித் மகா சபா மாநிலக்குழு கோரியுள்ளது.நரேந்திர மோடியிடம் உண்மையை மறைத்தும் வரலாறை திருப்பியும் கூறியவர்கள் பண்டிட் கறுப் பனை மறந்ததோடு நன்றி மறந்துள் ளனர் என்று கொச்சியில் செப்டம் பர் 9ம் தேதிநடைபெற்ற தலித் அமைப்புகளின் கண்டனக்கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்தனர்.கேரள தீவர சபை தலைவர் சுவாமி கோரக்நாத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தை தேசிய துணைத்தலைவர் பி.வி.மோகனன் துவக்கி வைத்தார். 

சர்வீஸ் பொதுச் செயலாளர் பூயப்பிள்ளி ராகவன், டி.கே.ராஜன், ஜனார்த்தனன் மத்தங்களம், வழக்கறிஞர் சுபாஷ் நாயரம்பலம், கூனன் மாவு சுனில்குமார் ஆகியோர் பேசினர்.பிரதமரை உண்மைக்கு மாறாக பேச வைத்தவர்கள் கேரளா பிஜேபி கட்சி தலைமையா கேரள புலயர் மகா சபாவா (இச்சபை பிஜேபியின் கிளை அமைப்பாக உள்ளது) என்பதை தெளிவுபடுத்த வேண்டு மென எஸ்.சி., எஸ்.டி கூட்டமைப்பு பொதுச் செயலாளர் வி.கமலன் கூறியுள்ளார்.தகவல் - பொன்மனை வல்சகுமார்(ஆதாரம்: 10/9/2014- மாத்ருபூமி உள்ளிட்ட நாளேடுகள்)

3 comments:

 1. Comrate,

  Cool and take one eno for solve heart burning.

  enjoy Your Own country PM Visit in India and create the allegation instead of boring and narrate subject like this.

  Seshan/ Dubai

  ReplyDelete
  Replies
  1. சேஷன் சார் உங்கள் நையாண்டி புரிகிறது. நான் இந்தியன். எனக்கு பிடிக்காவிட்டாலும் மோடிதான் எனக்கு பிரதமர். அவரது அபத்தமான உரைகளை அம்பலப்படுத்தும் உரிமையும் எனக்குத்தான் இருக்கிறது. இப்படி உளறிக் கொட்டுபவருக்கு ஓட்டு போட்டு விட்டோமே என்று குற்ற உணர்ச்சியில் தவிப்பவர்கள் சாப்பிட ஏதாவது மருந்து இருக்கா?

   Delete
 2. Great Comrate.

  அபத்தமான உரைகளை அம்பலப்படுத்தும் உரிமையும் எனக்குத்தான் இருக்கிறது.

  Waiting.......1825 days to go

  Seshan / Dubai.

  ReplyDelete