Saturday, September 13, 2014

அணடப் புளுகு, ஆகாசப் புளுகு பாஜக போஸ்டர் புளுகு

கொஞ்சம் கூட கூச்சநாச்சமில்லாமல் பொய் சொல்லுவதில் பாஜககாரர்களுக்கு நிகர் அவர்கள்தான். 

நரேந்திர மோடியின் நூறு நாள் ஆட்சிக்காலத்தில்  பெட்ரோல் விலை  ரூபாய் பத்து குறைந்துள்ளதாக போஸ்டர் ஒட்டி பெருமைப்பட்டுக் கொண்டுள்ளனர்.

அதே நேரம் பாஜக மாநிலத்தலைவர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் தங்கள் ஆட்சிக்காலத்தில் பெட்ரோல்  டீசல் விலை ரூபாய் 2.50 குறைந்ததாக பேட்டி கொடுத்து போஸ்டர் போட்ட திருச்சி மாவட்டத்தின் முகத்தில் கரி அள்ளி பூசி விட்டார்.

இதோ அந்த போஸ்டரும் பேட்டியும்


உண்மை நிலவரம் என்ன?

 பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளதா?

மோடிக்கு ஆட்சிக்கு வந்த போது 74.60 என்று இருந்தபெட்ரோல்  விலை 74.71, 74.76, 76.93,  75.78, 73.47  என்றெல்லாம் மாறி இப்போது 71.55  ஆக உள்ளது. ஆனால் இந்த நிலை நீடிக்காது என்பதுதான் யதார்த்தம்.

திருமதி தமிழிசை அவர்கள் போகிற போக்கில்  பெட்ரோல் , டீசல் விலையை குறைத்துள்ளோம் என்று டீசல் விலையும் குறைந்துள்ளது என்று சொல்லியுள்ளார்.

டீசல் விலை மோடி ஆட்சிக்கு வந்தபோது ரூபாய் 60.50 என்று இருந்தது 61.12, 61.70, 61.76, 62.30 என உயர்ந்து இப்போது 62.92 ஆக உயர்ந்துதான் உள்ளதே தவிர குறையவில்லை.

பொய்கள் சொல்வது பாஜகவிற்கு வாடிக்கைதான். ஆனால் அதையும் சிலர் நம்புகிறார்களே, அதுதான் கொடுமை. அந்த அப்பாவிகள்தான் பாஜகவின் மூலதனமும் கூட.

No comments:

Post a Comment