Wednesday, September 17, 2014

இது பாலச்சந்தர் கதை போல இருக்கே…..


இன்று எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல். ஏற்கனவே சில வருடங்கள் முன்பு வந்து ரீசைக்ளிங் முறையில் எனக்கே வந்தது. (அரதப் பழசு என்று வேறு யாராவது சொல்வதற்கு முன்பே நானே சொல்லி விடுவது உத்தமம் அல்லவா?)

அதன் தமிழாக்கம் இங்கே.

அமெரிக்காவில் ஒரு பாரில் ஒரு இந்தியனும் அமெரிக்கனும் அமர்ந்து தண்ணியடித்துக் கொண்டிருந்தார்கள்.

ஏன் மிகவும் சோகமாய் இருக்கிறாய் என்ற அமெரிக்கனின் கேள்விக்கு இந்தியன் பதில் சொன்னான்.

“நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். ஆனால் என் பெற்றோர் ஒரு கிராமத்துப் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். பெற்றோர் சொல்லும் பெண்ணா இல்லை காதலிக்கும் பெண்ணா யாரை திருமணம் செய்து கொள்வது என்று புரியாமல் நான் குழப்பத்தில் உள்ளேன். விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாவிட்டால் என்ன வாழ்க்கை இது என்பதுதான் எனது பிரச்சினை. உனக்கு இது போல எந்த பிரச்சினையும் கிடையாது”

அதற்கு அந்த அமெரிக்கன் பதில் சொல்லத் தொடங்கினான்.

“காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும் என்பது உண்மைதான். வயது வித்தியாசம் கூட யாரும் பார்ப்பதில்லை.

கணவனை இழந்த ஒரு பெண்ணை நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அப்பெண்ணின் மகளை எனது தந்தை திருமணம் செய்து கொண்டார். அதனால் என் தந்தை எனது மருமகனாகி விட்டார். நான் அவரது மாமனாராகி விட்டார். அவர் திருமணம் செய்து கொண்ட பெண் எனது அம்மாவானதால் அவருடைய அம்மாவான என் மனைவி எனது பாட்டியாகி விட்டார். 

எனக்கு ஒரு மகன் பிறந்தான். அதன் பின் குழப்பம் அதிகமானது.

என் மகன் என் அப்பாவின் சகோதரனாகி விட்டான். அதனால் அவன் எனது சித்தப்பாவாகவும் மாறி விட்டான்.

என் அப்பாவிற்கும் ஒரு மகன் பிறந்தான். அதனால் சிக்கல் இன்னும் அதிகமாகி விட்டது.

என் அப்பாவின் மகன் எனக்கு சகோதரன். அதே நேரம் அவன் என்னுடைய பேரனும் கூட.

ஒரு விதத்தில் பார்த்தால் நானே எனக்கு தாத்தா, நானே எனக்கு பேரனும் கூட.

இந்த குழப்பத்தை விடவா உனது குழப்பம் பெரியது என்று அந்த அமெரிக்கன் சொன்னதும் இந்தியன் தலைசுற்றி மயங்கி விழுந்தான்.

இதுதான் எனக்கு வந்த மின்னஞ்சல்.

இதைப்படித்ததும் எனக்கு அபூர்வ ராகங்கள் படம்தான் நினைவிற்கு வந்தது. கமலஹாசன், ஸ்ரீவித்யா, மேஜர் சுந்தரராஜன், ஜெயசுதா எல்லோரும் கண் முன்னால் வந்து போனார்கள்.

என்ன அந்த திரைப்படத்தில் இவர்களெல்லாம் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதனால் குழப்பங்கள் இல்லை. ஒருவேளை திருமணம் செய்து கொண்டிருந்தால் அபூர்வ ராகங்கள் பார்ட் 2 எடுத்திருக்கலாம்.

அபூர்வ ராகங்கள் திரைப்படமே எனது கதைதான், அதை பாலச்சந்தர் திருடி விட்டார் என்று உயர்நீதி மன்றம் வரை ஒரு வழக்கு நடந்ததும் நான் விக்கிரமாதித்தன் கதையின் அடிப்படையில்தான் அந்த படத்தை எடுத்தேன் என்று பாலச்சந்தர் கூறியதும் கூட நினைவுக்கு வந்து போனது.

சரி, இந்த கதையைப் படித்து நீங்கள் தலை சுற்றி மயங்காமல் உள்ளீர்கள்தானே?8 comments:

 1. எப்படியோ ஒரு பதிவு தேத்தியாச்சு...

  ReplyDelete
  Replies
  1. இதில உங்களுக்கு என்ன பிரச்சினை? ஏன் உங்களுக்கு எதுவும் எழுத வராதா?

   Delete
 2. ரொம்ப நாள் கழித்து பயங்கரமாய் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது... ரொம்ப நன்றி ராமன் சார்...
  பத்ரிநாத்

  ReplyDelete
  Replies
  1. நன்றி பத்ரிநாத் சார்

   Delete
 3. ஒரே குழப்பமா போச்சுங்க!

  ReplyDelete
  Replies
  1. அப்பா, சந்தோஷம். நான் மட்டும்தான் குழம்பிப் போனேன்னு நினைச்சேன்

   Delete
 4. முழுக்க முழுக்க காப்பி அடிக்கப்பட்ட படம் ! த.மு எ.ச எழுத்தாளர் மோகன்தாஸ் எழுதிய ஓரங்க நாடகம் அது ! கண்ண தாசன் பத்திரிகையில் வந்தது ! த.மு.எ ச தலைவர் வக்கீல் செந்தில் நாதன் தான் வழக்கை நடத்தினார் ! உயர் நீதி மன்றத்தில வழக்கு நடந்தது ! பாலசந்தருக்கு எதிராக தீர்ப்பு வந்தது ! மேல் முறையீடு செய்தார் ! மறைந்த கோமல் சுவாமினாதன் தலையிட்டு சுமார் 8000 /- ரூ நட்டஈடு கொடுத்து சமரசமானது ! தகவலுக்காக ---காஸ்யபன்.

  ReplyDelete
 5. காஷ்யபன் தோழர், அபூர்வ ராகங்கள் வந்த போது நான் பள்ளி மாணவன். அதனால் வழக்கு ஒன்று நடந்தது எனு தெரியும். விபரங்களை உங்கள் மூலம் அறிந்து கொண்டேன். நன்றி தோழர்

  ReplyDelete