Saturday, March 24, 2012

பூட்டுக்களே சாட்சியாக . . .



மாற்றம் என்ற முழக்கத்தை முன் வைத்து பாரக் ஓபாமா அமெரிக்க குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரால் அமெரிக்கப் பொருளாதாரத்தில் மாற்றத்தைக் கொண்டு வர முடிந்ததா? அப்படி  அதிசயம் எதுவும்  அமெரிக்காவில் நிகழவில்லை என்பதற்கு ஒரு சோற்றுப் பதமாக வங்கிகள் திவாலைச் சொல்ல முடியும். 2012 ம் ஆண்டில் மட்டும் இது வரை 14 வங்கிகள் திவாகியுள்ளன. ஜனவரி மாதம் எட்டு வங்கிகளும் பிப்ரவரி மாதம் நான்கு வங்கிகளும் மார்ச்சில் இதுவரை இரண்டு வங்கிகளும் திவாலாகியுள்ளன. அமெரிக்கப் பொருளாதாரம் இன்னும் சீர்படவில்லை என்பதற்கு மூடப்பட்ட வங்கிகளின் பூட்டுக்களே மௌன சாட்சியாக உள்ளது.

1 comment: