இரண்டு நாட்கள் முன்பு ஹிந்து நாளிதழில் பார்த்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பாலியல் வன்புணர்ச்சி வழக்குகளில் தண்டனை பெறும் குற்றவாளிகளின் சத்விகிதம் 1973 ல் 44.48 % என்று இருந்தது 2010 ல் 26.50 என குறைந்து விட்டது என்பது அந்த செய்தி.
1973 ஐ ஒப்பிடுகையில் 2010 ல் குற்றங்கள் பெருகி விட்டது. ஆனால் குற்றவாளிகள் தப்பித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் ?
அந்த அறிக்கை காவல்துறையை நோக்கி விரலை நீட்டுகின்றது. புலனாய்வில் செய்கின்ற குளறுபடிகளும் தடயங்களை பதிவு செய்வதிலும் காண்பிக்கிற அலட்சியத்தையும் குற்றவாளிகள் தப்பிக்க ஒரு முக்கியக் காரணமாக காண்பிக்கிறது.
வழக்கறிஞர்களின் சாதுர்யம் என்பதும் குற்றவாளிகளுக்கு மிகவும் உதவுகின்றது என அந்த அறிக்கை சொல்கின்றது.
பதிவு செய்யப்பட்ட வழக்குகளே மிக மிக குறைவு. மான அவமானத்திற்கு பயந்து, சமூகத்தின் வாய்க் குதறலுக்குப் பயந்து காவல்துறையில் புகார் கொடுக்க முன்வரும் பெண்களே மிகவும் குறைவு. அப்படி பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை என்றால் அது மோசமான விளைவுகளை சமூகத்தில் உருவாக்கும்.
காவல்துறை இதில் கவனம் செலுத்துமா? சிக்கிக் கொள்கிற குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருமா? அதற்கு முன்பாக பாலியல் குற்றசாட்டில் மாட்டிக் கொள்கிற காவலர்களை பாதுகாப்பதை காவல்துறை கைவிட வேண்டும்.
வழக்கரிஞர்களின் சாதூர்யம் என்று அவர்களை பாராட்டுவதை விட சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள் அவ்வளவு என்று எடுத்துக் கொள்வது சாலச் சிறந்தது
ReplyDeleteநான் எழுத நினைச்சது வேற. அதைப் படிச்சு அதுக்காக வக்கீல்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்தால் என்ன ஆவது என்றுதான், பத்திரிக்கையில் வந்ததை நேரடியாக எழுதவில்லை.
ReplyDelete