Friday, March 2, 2012

பெண் என்றால் பேய்களும் இரங்கும், ஆனால் பெண் முதல்வர்கள் ?




பெண் என்றால் பேயும் இரங்கும் என்பது பழமொழி. பேய்கள் உள்ளனவா? பேய்கள் பெண்கள் என்றால் இரங்குமா என்பதல்ல இப்போது பிரச்சினை. பெண்களிடம் கருணையோடும் இரக்கத்தோடும் ஆண்கள் நடந்திட வேண்டும் என்பதை அழுத்தமாகச் சொல்வதுதான் இந்த பழமொழியின் நோக்கம்.

ஆனால் இந்த பழமொழி பெண் முதல்வர்களான ஜெயலலிதா, மாயாவதி, மம்தா பானர்ஜி  ஆகியோருக்கு மட்டும் பொருந்தாது.

எப்படி ?

பல உதாரணங்கள் இருப்பினும் பாலியல் வன் கொடுமைகளுக்கு பெண்கள் உள்ளாகும் போது அதைப் பற்றி அறியும் யாரும் ( மனசாட்சி உள்ளவராக இருந்தால் ) கொதித்துப் போவார்கள். பதைபதைப் போவார்கள், தாக்கப்பட்ட பெண்ணிற்கு ஆறுதலாக நடந்து கொள்வார்கள். முடிந்த உதவியைச் செய்வார்கள்.

ஆனால் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல நடந்து கொள்வதும் உண்மைகளை மறைக்க முயல்வதுமே  இவர்களின் நடைமுறையாக  உள்ளது.

நோய்டாவில் விவசாயிகள் போராட்டம் போது மாயாவதி இந்த வேலையைச் செய்தார். அவரது அமைச்சரவை சகாக்கள் தவறாக பெண்களிடம் நடந்து கொண்ட போது அமைச்சர்களை பாதுகாக்க முயன்றாரே தவிர நியாயம் கிடைக்கவோ, தவறு செய்தவர்களை தண்டிக்கவோ  முயற்சி செய்யவில்லை.

அம்மையாரை எடுத்துக் கொண்டால் சிதம்பரம் பத்மினி வழக்கிலும் சரி, வாச்சாத்தியிலும் சரி, காவல்துறையினர் மிகுந்த யோக்கியம் போலவும் பாதிக்கப் பட்ட பெண்கள்தான் தவறான நடத்தை உள்ளவர்கள்  என்று வாய் கூசாமல் பேசினார். செங்கொடி இயக்கத்தின் போராட்டம், இவ்விரு வழக்குக்குகளிலும் காவல்துறை ஆட்களுக்கு கடுமையான தண்டனை கிடைத்த பின்பும் அவர் தனது தவறுக்கு  வருந்தவில்லை. இப்போது திருக்கோயிலூரில் பழங்குடி இனப் பெண்களை உயர்நீதி மன்றம் கண்டித்த பின்பும் கைது செய்யாமல்  தாமதித்து வருகின்றது.

அதே போல கொல்கத்தா நகரில் ஒரு பெண் ஓடும் காரில் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளானபோது, அப்படி ஒரு சம்பவமே நடைபெற இல்லை  என்று சாதித்தார் மம்தா பானர்ஜி. தவறிழைத்த குற்றவாளி பிடிபட்ட பின்பும்  அவர்  தன் நிலையை மாற்றிக்கொள்ளவில்லை.

ஆக பேய்கள் இரங்கினாலும் இந்த பெண் முதல்வரின் இதயம் மட்டும் இளகாது போல.  

1 comment:

  1. பெண் புத்தி பின் புத்தி

    ReplyDelete