வேலூர் மாவட்டத்தில் அதிலும் குறிப்பாக வேலூர் நகரில் கொண்டாடப்படும் ஒரு விழா மயானக் கொள்ளை. சிவராத்திரி அன்று கொண்டாடப்படும் விழா அங்காள பரமேஸ்வரிக்கானது. மிகப் பெரிய தேர்கள் உருவாக்கப்பட்டு அதிலே அங்காளம்மன் சிலை வைக்கப்பட்டு ஊர்வலம் வரும். பல விதமான வேடங்களை பலரும் போட்டுக்கொண்டு வருவார்கள். அடிப்படையாக பார்த்தால் முன்னோருக்கு அஞ்சலி செய்யும் தினமாக பலரும் அனுசரிப்பார்கள்.
வேலூரைப் பொறுத்தவரை பெரும்பாலும் ஊர்வலங்கள் பதட்டத்தின் ஊற்றுக்களாகவே இருக்கும். பங்கேற்பவர்களில் பெரும்பகுதியினர் மதுவின் ஆக்கிரமிப்புக்கு உள்ளானவர்களாகவே இருப்பார்கள். இது போதாதா, கலாட்டாக்களை தோற்றுவிக்க !. இதற்கு பயந்தே அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும்.
மெல்லிசை நிகழ்ச்சிகள், நடனங்கள், ப்ளெக்ஸ் பிரம்மாணடங்கள் என எல்லாமே உண்டு. கடவுளை விட நிகழ்ச்சிக்கு வரும் தலைவர்களே பெரிதாக தெரிவார்கள். மண்ணின் கலைகளுக்கு எல்லாம் முக்கியத்துவம் மறைந்து போய் எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டது. சினிமா புகழ் துக்கடாக்கள்தான் எல்லாம்.
இந்த ஆண்டு நிகழ்வு இது நாள் வரை நடந்த நிகழ்வுகளை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டது. இரண்டு தினங்கள் முன்பு வேலூரின் பல பகுதிகளில் திடீரென்று மல்டி கலர் போஸ்டர்கள். மயானக் கொள்ளையை முன்னிட்டு ரஷ்ய நாட்டு அழகிகளின் பெல்லி நடனம் என. அங்காள பரமேஸ்வரிக்கும் ரஷ்ய நாட்டு அழகிகளின் பெல்லி நடனத்திற்கும் என்ன சம்பந்தம்?
ஏற்கனவே சீரழிந்து வரும் கலாச்சாரத்தை மேலும் சீரழிக்காதா?
இதற்கு செலவழிக்கும் தொகையை அப்பகுதி மக்களின் முன்னேற்றத்திற்காக, அடிப்படை வசதிகள் மிகவும் மோசமாகவுள்ள அப்பகுதியின் மேம்பாட்டுக்காக பயன்படுத்தியிருந்தாலாவது நன்றாக இருந்திருக்கும். அப்போதும் கூட இதற்காக ஏற்பாடு செய்த பெரிய மனிதர்கள் விரும்புகின்ற பாபுலாரிட்டி கிடைத்திருக்கலாம். ஒரு வேளை அங்காள பரமேஸ்வரியின் ஆசிர்வாதம் கூட கிடைத்திருக்கலாம்.
அது சரி, எனக்கொரு உண்மை தெரியணும். மயான கொள்ளை தான் போன அமாவாசையோட முடிஞ்சாச்சே.. இப்போ எதுக்கு இந்த பெல்லி டான்செல்லாம்?
ReplyDeleteஅது சரி, எனக்கொரு உண்மை தெரியணும். மயான கொள்ளை தான் போன அமாவாசையோட முடிஞ்சாச்சே.. இப்போ எதுக்கு இந்த பெல்லி டான்செல்லாம்?
ReplyDeleteபெல்லி டான்ஸ் ஏற்பாடு செய்தால் பெயர் மட்டுமல்ல, சில்லறையும் கணிசமாக கிடைக்கும். அதற்கு மயானக் கொள்ளை ஒரு சாக்கு. அவ்வளவுதான்.
ReplyDelete"நல்ல வேளை! இதுவரை நமீதாக்கள் அம்மனாக நடிக்கவில்லை!..." என்று சென்ற ஆண்டு ஒரு பதிவு வெளியிட்டேன். இப்போது நமீதாவை மிஞ்சும் அளவுக்கு போய்விட்டதா அம்மனின் வழிபாடு?
ReplyDeleteஅங்காள பரமேஸ்வரியும் மயானக் கொள்ளையும் பற்றிய மேலும் விவரங்களுக்கு
நல்ல வேளை! இதுவரை நமீதாக்கள் அம்மனாக நடிக்கவில்லை!...
http://hooraan.blogspot.com/2011/03/blog-post_05.html
There is nothing wrong in arranging Belly dance during Amman festival. Because worshiping God is a very tough thing. Our Mind will be concentrating in Amman worship or any other worship of Deities only for some minutes and then the Mind will be in its usual way. For an ordinary or common man both God and entertainment are necessary. But God accept prayers of Devotees with all misbehavior of human beings.
ReplyDelete