Tuesday, March 20, 2012

ஆபரேஷன் சக்ஸஸ், டாக்டர் டெட்

ரயில்வே மந்திரி ராஜினாமா  செய்து விட்டார். மம்தா பானர்ஜியின்
பிளாக் மெயில் அரசியலுக்கு  அவர் கட்சிக்காரரே பலியாகி விட்டார்.
புதிதாக பொறுப்பேற்க உள்ள முகுல் ராயின் பதவிக்காலம் எத்தனை
நாளோ?

இதிலே கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால் 

உயர்த்தப்பட்ட ரயில் கட்டணம் குறைக்கப்படுமா என்பது பற்றி 
இப்போது  பிரதமரும்  வாய் திறக்கவில்லை, மம்தாவும் வாய்
மூடி விட்டார். முகுல் ராயா, ஜனார்த்தன் திரிவேதியா, யார் 
பதில் சொல்லப் போகின்றார் என்பதும் இன்னும் தெளிவாகவில்லை.

இன்றுள்ள அரசியல் நிலை, மத்தியரசின் பொருளாதரக் கொள்கை
இவற்றையெல்லாம் பார்க்கிற போது உயர்த்தப் பட்ட கட்டணம்
குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. 

வீதியில் இறங்கிப் போராட மக்கள் வருவது குறைவு என்பது
மட்டுமல்ல, அப்படி போராடுகின்ற இடதுசாரிக் கட்சிகளைப்
பார்த்து " இவர்களுக்கு வேறு வேலை கிடையாது " என்று சொல்லி
வேடிக்கை பார்த்து விட்டுப் போவதுமாகவே உள்ளனர்.

எனவே மத்தியரசு உயர்த்தப் பட்ட கட்டணங்கள் நீடிக்கவே 
முயற்சிக்கும். கட்டண உயர்வு என்ற ஆபரேஷன் சக்ஸஸ்,
உயர்த்திய டாக்டர் திரிவேதி டெட் என்ற  புதிய சூழலை
இந்திய அரசியலில்  மம்தா உருவாக்கியுள்ளார்.

கட்டண உயர்வு இருக்கும், ஆனால் அதற்கு மம்தாவோ
அவர் கட்சியோ காரணமில்லை என்று விளக்கங்கள்
பின்னர் கொடுக்கப்படும். 

இப்படிப்பட்ட கீழ்த்தர அரசியல்  கண்டிப்பாக நல்லதல்ல.
 

2 comments:

  1. மம்தா நாடகம் போடுவதில் வல்லவர்.

    ReplyDelete
  2. கொஞ்சம் நியாயமாக சொல்லுங்க - 3ps./km, 10ps./km என்பதெல்லாம் ரொம்ப உயர்த்தப்பட்ட கட்டணங்களா? I AC gets maximum hike 30ps./km.
    நம்ம அம்மா உள்ளூர் / வெளியூர் பேருந்து கட்டணம் உயர்தினத்தை விட கண்டிப்பாக மோசமானது எதுவுமே இருக்க முடியாது.
    பாவம் ரயில்வே துறையில் நிறைய நல்ல விதமான மாற்றங்களை கொண்டுவர நினைத்த ஒரு அப்பாவி அமைச்சரை ஐயோ பாவம் ஆக்கிட்டாங்க MMS & Mamta Didi.

    ReplyDelete