Sunday, February 1, 2026

இந்த வருஷ பட்ஜெட்டிலும் . . .

 


நிர்மலா அம்மையாரின் பட்ஜெட் குறித்து இரண்டாண்டுகள் முன்பு போட்ட படம்தான்.

அது இன்றைக்கும் பொருந்தும்.

அடுத்த வருடமும் பொருந்தும்.

வீணாகிப் போன மோடி பிரதமராக இருக்கும் வரை தொடரும்

கோட்சேவுக்காக மறைக்கப்படுகிறதா காந்தியின் உடல்?

 


நேற்று முன் தினம் மகாத்மாவை மறவோம், கோட்சேவையும் . . .  என்ற பதிவில் போடுவதற்காக மகாத்மாவின் சடலத்தை வைத்திருக்கும் படத்தை கூகிளில் தேடினேன்.

என்ன பதில் கிடைத்தது பாருங்கள்.


மகாத்மா காந்தியின் பெயரை வேலை உறுதிச்சட்டத்திலிருந்து நீக்கியவர்கள், இப்போது அவரது சடலத்தின் படத்தையும் இருட்டடிப்பு செய்கிறார்கள்.

கோட்சேவின் புகழ் பாடும் மோடி வகையறாக்களுக்கு அவனால் கொல்லப் பட்ட மகாத்மாவின் சடலம் பொது வெளியில் இருப்பது உறுத்தலாகத்தானே இருக்கும்!

பிகு: பழைய பதிவொன்றை தேடிப்பிடித்து கிடைத்த படத்தை பகிர்ந்து கொண்டேன்.