Saturday, February 7, 2026

ஏலம் போகுது A1 மாளிகை

 


மேலே உள்ள மாளிகை யாருடையது தெரியுமா?

கீழே உள்ள படத்தை பாருங்கள்

இப்போது தெரிந்ததா?

ஆம்.

A1 ஆட்சி செய்த சென்னை போயஸ் கார்டன் வேதா நிலையம் மாளிகைதான் அது.

ஜெ இறந்த பிறகு அந்த மாளிகை அவரது அண்ணன் மகன், மகள் ஆன தீபக், தீபா ஆகியோர் வசம் சென்றது.

1991-92 நிதியாண்டு தொடங்கி 2006-2007 நிதியாண்டு வரை கட்ட வேண்டிய வருமான வரி, 1992-93 நிதியாண்டு தொடங்கி 2015-2016 வரை கட்ட வேண்டிய சொத்து வரி ஆகியவற்றின் பாக்கி, அதற்கான அபராத வட்டி எல்லாமுமாக சேர்த்து 13.69 கோடி கட்ட வேண்டும்.

சொத்துக்களின் வாரிசுகளான தீபக்கையும் தீபாவையும் கட்டச் சொன்னார்கள்.

ஆளுக்கு பாதியாக பிரிக்க வேண்டும், தவணை முறையில் கட்ட வேண்டும் என்று தீபக் நீதிமன்றம் செல்ல, தீர்ப்பும் அப்படியே வந்தது.

தான் கட்ட வேண்டிய தொகையில் இரண்டு தவனைகளோடு தீபக் நிறுத்திக் கொள்ள, தீபாவோ ஒரு பைசா கூட கட்டவில்லை.

அதனால் நீதிமன்ற அனுமதியோடு போயஸ் கார்டன் மாளிகையை ஏலம் போடப் போகிறார்கள்.

ஜெ அதிகாரம் செய்த இடம், ஊழல் செய்து வாங்கிய நகைகள் முதற்கொண்டு செருப்புகள் வரை அடுக்கி வைத்திருந்த இடம். வெள்ளத்தில் சென்னை மிதக்கும் நிலை  வந்தது கூட தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்த இடம். ரஜினிகாந்தை நடந்து போகச் சொன்ன இடம்.

"ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள் போன கதை தெரியுமா?" என்று ஒரு சூர்யா பாட்டு உண்டு.

அதில் ஒரு கதை தான் ஜெ வின் கதை.

இப்போது ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் மோடி வகையறாக்களும் விஜய் வகையறாக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய அனுபவம். 



No comments:

Post a Comment