இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் இது நாள் வரை இவ்வளவு மோசமான அவைத்தலைவரை பார்த்ததில்லை.
அந்த பதவியில் இருந்தவர்கள் அனைவருமே தோழர் சோம்நாத் சட்டர்ஜி, திரு ஜி.எம்.சி.பாலயோகி, திரு மனோகர் ஜோஷி நீங்கலாக அனைவருமே எது ஆளும் கட்சியோ, அதைச் சேர்ந்தவர்கள்தான்.
ஆளும்கட்சி சார்பாகத்தான் அவர்கள் செயல்பட்டிருந்தாலும் கொஞ்சமாவது நடுநிலையோடு நடந்து கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துக்களை சொல்ல கொஞ்சமாவது வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால் ஓம் பிர்லா?
ஒரு சபாநாயகரின் முதல் கடமை - துணை சபாநாயகர் தேர்வு.
12 வருடங்களாக நடக்கவில்லை. இவருக்கு முன்பிருந்த சுமித்ரா மகாஜன் அம்மையாரும் சரி, இவரும் சரி, அதைப் பற்றி கவலைப்படவே இல்லை.
அமைச்சர்கள் சொல்ல வேண்டிய பதில்களை இவரே சொல்லி விடுகிறார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடை நீக்கம் செய்து அதில் மகிழ்ச்சி அடைபவர், அப்போதுதானே அவர்கள் அரசை விமர்சிக்க முடியாது.
இதில் மிக மிக மோசமான நடவடிக்கைதான் பெண் எம்.பி க்கள் மோடியை தாக்கவிருப்பதாக பழி போட்டது. மோடியை விட கற்பனை வளத்தில் சிறந்தவராக இருக்கிறார்.
அவரை பதவி நீக்கம் செய்ய கொண்டு வரப்பட்ட தீர்மானம் மிகவும் சரியானது. அது தோற்றுப் போகும். ஆனால் ஒரு சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்பது வரலாற்றில் பதிவாகிறதல்லவா! அது போதும்.
பிகு: எழுதி இரண்டு நாளான பதிவு இது. ஓம் பிர்லா பல்பு வாங்கிய ஒரு சம்பவம் சிரிப்பைத் தந்தது. அது கீழே . .


No comments:
Post a Comment