சீனாவிலிருந்து காசு கொடுத்து வாங்கி வந்த ரோபோ நாயை, தங்கள் பல்கலைக்கழகத்தின் திறன் மையத்தில் கண்டுபிடித்தோம் என்று உத்திரப்பிரதேசத்தில் உள்ள கல்கோட்டியாஸ் பல்கலைகழகம், புதுடெல்லியில் நடைபெற்ற AI மாநாட்டில் பீற்றிக் கொள்ள அந்த பொய் மறு நாளே அம்பலமானது.
அந்த கல்கோட்டியாஸ் பல்கலைக்கழகம் மட்டும் அசிங்கப் படவில்லை. ஒட்டு மொத்த இந்தியாவும் அசிங்கப்பட்டது. இந்திய அறிவியல் திறன் அசிங்கப்பட்டது. இந்தியாவின் சுயசார்பு உற்பத்தித் துறை அசிங்கப்பட்டது.
இந்த அசிங்கத்தைத்தான் ஓவியர் தோழர் ரவி பாலேட் அட்டகாசமான கார்ட்டூனாக மாற்றி விட்டார்.
இப்படி ஒரு வேலையைச் செய்ய அந்த கல்கோட்டியாஸ் பல்கலைக் கழகத்திற்கு எப்படி தைரியம் வந்தது?
கீழே உள்ள படங்கள் உண்மையைச் சொல்லும்.
இந்த புகைப்படங்களை வைத்து மட்டும் அது ஒரு சங்கிப் பல்கலைக்கழகன் என்று சொல்லி விட முடியுமா?
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அந்த பல்கலைக்கழகம், தன் மாணவர்களை வைத்து பாஜகவிற்கு ஆதரவாகவும் இந்தியா கூட்டணிக்கு எதிராகவும் பிரச்சாரப் பேரணி நடத்தியுள்ளார்கள்.
அறிவியலோ, அறவியலோ, இந்தியாவிற்கு எப்போதும் இழிவு சங்கிகளால்தான்.






This comment has been removed by a blog administrator.
ReplyDelete