Sunday, January 11, 2026

பராசக்தியால் பாஜகவிற்கு ஏன் பதற்றம்?

 


"பராசக்தி" நேற்று மதியக் காட்சி பார்த்தேன். படம் நன்றாக இருந்தது. விபத்திற்குப் பிறகு அரங்கில் சென்று பார்த்த முதல் படம். அதுவும் முதல் நாளில் . .  பாதுகாப்பாக உன்னை அழைத்துச் செல்கிறேன் என்று மகன் உறுதியளித்து அதன் படியே செய்தான்.

 படத்தைப் பற்றி விரிவாக எழுத வேண்டுமென்றால் சில விஷயங்களை தெளிவு படுத்திக் கொள்ள இன்னொரு முறை பார்க்க வேண்டும். பாகுபலி பல்வாள் தேவன் இப்படத்தில் நடித்துள்ளதே என் மகன் சொல்லித்தான் தெரிந்தது. அதனால் படம் பற்றி விரிவாக பின்பு எழுதுவேன்.

படத்தைப் பற்றி யாரெல்லாம் மோசமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். 

தவெக தற்குறிகளும் சங்கிகளும்.

ஜனநாயகனுடன் போட்டியிட தயாராக இருந்ததால் விஜய் ரசிகர்கள் எதிர்ப்பது இயல்பானது.

காங்கிரஸ்காரர்கள் எதிர்த்தால் அது நியாயமானது. 

ஆமாம். தமிழ்நாட்டின் மோசமான முதலமைச்சர் என்று பெயர் பெற்ற பக்தவத்சலத்தின் கொடூரத்தையும் இந்திரா காந்தியின் தந்திரத்தையும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத மண்ணாந்தைகளாக காங்கிரஸார் இருந்ததையும் (இப்போதும் அப்படித்தான் இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்) படம் அம்பலப்படுத்துகிறது. 

தமிழ்நாட்டின் சசி தரூர் கதர் சங்கி மாணிக்கம் தாகூரைத் தவிர வேறு காங்கிரஸ் ஆட்கள் யாரும் எதிர்த்ததாக தெரியவில்லை. 

சங்கிகள் ஏன் எதிர்க்கிறார்கள்?

பராசக்தி சங்கிகளில் கருத்தியலான "ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்" என்பதற்கு எதிரானது.

பாஜக அரசு இன்று செய்து கொண்டிருக்கிற இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரானது.

இந்தியாவின் பன்முகத்தன்மையை உயர்த்திப் பிடிப்பது சங்கிகளுக்கு எரிச்சலூட்டுகிறது.

இந்தி திணிப்பை  எதிராக தமிழர்கள் மட்டுமல்ல, மலையாளம், தெலுங்கு, மராத்தி, கன்னடம், வங்க மொழி பேசுபவர்களும் எதிர்த்தார்கள் என்ற உண்மையை சொல்வதால் சங்கிகளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

சங்கிகள் ஒன்றை எதிர்த்தால் அதில் ஏதோ நல்லது இருக்கிறது என்று அர்த்தம். சங்கிகள் ஒன்றை அழிக்க நினைத்தால் அதை ஆதரிப்பது நம் கடமை. 

அதனால் 

பராசக்தி பார்ப்போம், 

அதுவும் திரை அரங்கில் பார்ப்போம்.


3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete