Wednesday, January 21, 2026

இன்றுதான் கடைசி நாள் என்பதால் . . .

 



நேற்று (20.01.2026) தான் சென்னை புத்தக விழாவிற்கு செல்ல முடிந்தது.  2006 முதல் ஒவ்வொரு வருடமும் தவறாமல் சென்று கொண்டிருக்கிறேன். முதல் வருடம் தமுஎகச வின் அன்றைய வேலூர் மாவட்டத் தலைவர் மறைந்த தோழர் பாவலர் முகில். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் தோழர் கே.கங்காதரன் ஆகியோருடன் வேறு ஒரு பணி நிமித்தம் சென்னை சென்ற போது அவர்களின் கட்டாயத்தால் சென்னை புத்தக விழாவிற்கு முதல் முறையாக சென்றேன். அப்போது பெரிதாக புத்தகங்கள் வாங்கவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் தமிழில் வரும் “கம்பன்” என்ற மென்பொருளை வாங்கி வந்தேன். அது என் சங்கப்பணிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருந்த்து. அடுத்த ஆண்டு முதல் தவறாமல் சென்று வருகிறேன். செகண்ட் ஹாண்டில்  சென்னையில் கார் வாங்கி விட்டு முதலில் சென்ற இடம் புத்தக விழாதான்.

 

நேற்று மதியம் உள்ளே நுழைந்ததும் முதலில் செய்த வேலை திருவள்ளுவர் சிலை முன்பாக புகைப்படம் எடுத்துக் கொண்டதுதான்.

 


வாங்க வேண்டிய நூல்களின் பட்டியலை ஸ்டால் எண் வரிசையில் போட்டு எடுத்துக் கொண்டு சென்றதால் வேலை சீக்கிரமே முடிந்தது. 31 நூல்கள் எனது பட்டியலில் இருந்த்து. அதிலே ஐந்து மட்டும் கிடைக்கவில்லை. பட்டியலில் இல்லாத நூல்களையும் வாங்கினேன்.  இன்று காலையில் நூல்களின் விபரங்களை கணிணியில் பட்டியலிட்ட போதுதான் இன்னும் மூன்று நூல்களை வாங்கியிருந்தால் அரை சதத்தை எட்டியிருக்கலாமே என்று தோன்றியது.

 

“நடந்த கதை” என்ற அற்புதமான குறும்படத்தை இயக்கியிருந்த தோழர் பொன்.சுதா “மதி மலர்” என்றொரு பதிப்பகத்தை துவக்கியுள்ளார். அவருடன் பேசிக் கொண்டிருந்த போது கரூவூலத்துறை ஊழியர் சங்கத்தில் மாநிலச் செயலாளராக இருந்த, என் வலைப்பக்கத்தில் அவ்வப்போது பின்னூட்டமிடுகிற தோழர் அவைநாயகன் அவர்களை சந்தித்தேன்.

 


இந்த முறை புறப்படும் முன்பே என் ஓட்டுனரிடம் என் சுமையை பகிர்ந்து கொள்ள நீங்கள் உள்ளே வர வேண்டும் என்று கூறியிருந்தேன். அதனால் கைகளில் வலி இல்லை. ஆனால் கால்கள் ஓய்வுக்காக கெஞ்சிய போது வெளியே வந்து விட்டேன். ஏற்கனவே நிலுவையில் உள்ள புத்தகங்கள், இப்போது வாங்கிய புத்தகங்கள் ஆகியவற்றை படித்து முடிக்கும் வரை புதிய புத்தகங்களை வாங்கக் கூடாது என்று நினைத்திருக்கிறேன். முடியுமா என்று தெரியவில்லை.   

 

சென்னை புத்தக விழா இன்று நிறைவுறுவதால் நான் வாங்கிய நூல்களின் விபரங்களை ஸ்டால் எண்ணுடன் அளித்துள்ளேன், இன்று செல்லும் யாருக்காவது உதவும் என்ற நம்பிக்கையோடு...

 

எண்

நூல்

ஆசிரியர்

அரங்கம் பெயர்

ஸ்டால் எண்

1

ரகசிய விதிகள்

சுபா

சூரியன் பதிப்பகம்

13

2

ஆர்ட்டிக்கிள் 29

முஹமது யூசுப்

யாவரும்

42

3

நுழை வாயில்

முஹமது யூசுப்

யாவரும்

42

4

பறதி

அமிர்தம் சூர்யா

யாவரும்

42

5

நீதித்துறை சுதந்திரம்

நீதிபதி கே.சந்துரு

மணற்கேணி

86

6

பேச்சு சுதந்திரம்

நீதிபதி ஏ.பி.ஷா

மணற்கேணி

86

7

நீர்த்துப்போன தொழிலாளர்சட்டங்கள்

நீதிபதி கே.சந்துரு

மணற்கேணி

86

8

திரையில் மலர்ந்த சிறுகதைகள்

அவை நாயகன்

மதி மலர் பதிப்பகம்

197

9

மனைவியை விற்றவன்

ஆண்டன் செகாவ் தமிழில் அவைநாயகன்

மதி மலர் பதிப்பகம்

197

10

தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

பிரபஞ்சன்

மதி மலர் பதிப்பகம்

197

11

ஆகச்சிறந்த 50 மலையாள சினிமா கதைகள்

   பொன்.சுதா

மதி மலர் பதிப்பகம்

197

12

சிற்றகல்

டிகே.கலாபிரியா

சந்தியா பதிப்பகம்

205

13

கடவுளின் கனி

சா.கந்தசாமி

சந்தியா பதிப்பகம்

205

14

கனிவு

வண்ணதாசன்

சந்தியா பதிப்பகம்

205

15

நான் பிழை

ரவிசந்திரன் அரவிந்தன்

வம்சி

228

16

காற்றடிக்கும் திசையில் ஊர் இல்லை

பா.செயப்பிரகாசம்

வம்சி

228

17

இறுதி யாத்திரை

எம்.டி.வாசுதேவன் நாயர் தமிழில் கே.வி.ஷைலஜா

வம்சி

228

18

பண்பில் ஆண்மை

புதிய மாதவி

நாற்கரம்

408

19

விசில்

நிவேதிதா லூயிஸ்

ஹெர் ஸ்டோரிஸ்

512

20

ரசூலின் மனைவியாகிய நான்

புதிய மாதவி

ஹெர் ஸ்டோரிஸ்

512

21

அரசியல் அரசி சத்தியவாணி முத்து

நிவேதிதா லூயிஸ்

ஹெர் ஸ்டோரிஸ்

512

22

காலத்தின் மீது எரிகின்ற கல்

சு.வெங்கடேசன்

விகடன் பிரசுரம்

F  02

23

வேட்டை நாய்கள் பாகம் 1

நரன்

விகடன் பிரசுரம்

F  02

24

திரையெல்லாம் செண்பகப்பூ

ஜா.தீபா

விகடன் பிரசுரம்

F  02

25

சம்படி ஆட்டம்

மாரி செல்வராஜ்

விகடன் பிரசுரம்

F  02

26

நீதித்திரைக்குப் பின்னே

நீதிபதி கே.சந்துரு

விகடன் பிரசுரம்

F  02

27

கைதி எண் 968

சி.மகேந்திரன்

நக்கீரன்

F  05

28

மலங்காடு

பிரபாஹரன் கே மூணாறு

நியூ செஞ்சுரி புக்ஹவுஸ்

F  07

29

தோழர் பொதியவெற்பன் அரைநூற்றாண்டுப் பயணம்

வீ.அரசு

நியூ செஞ்சுரி புக்ஹவுஸ்

F  07

30

தஞ்சை மாவட்ட்த்தில் ரத்தம் சிந்திய கம்யூனிஸ்டுகள்

எஸ்.ஜி.முருகையன்

நியூ செஞ்சுரி புக்ஹவுஸ்

F  07

31

மாதர் திரையுலகு

ஜா.தீபா

ஸீரோ டிகிரி

F  19

32

பன்றி வேட்டை

லஷ்மி சரவணகுமார்

ஸீரோ டிகிரி

F  19

33

சொட்டாங்கல்

எஸ்.அர்ஷியா

எதிர் 

F  40

34

சைலன்ஸ்

அ.கரீம்

எதிர் 

F  40

35

கெரில்லா போர் முறை

எர்னஸ்டோ சே குவாரா

எதிர் 

F  40

36

மீதெழல்

சாத்திரி

பாரதி புத்தகாலயம்

F  43

37

திருப்பரங்குன்றம் - முழு வரலாற்று ஆய்வு

சூர்யா சேவியர்

பாரதி புத்தகாலயம்

F  43

38

தமிழ் சிறுகதையின் தடங்கள்

ச.தமிழ்ச்செல்வன்

பாரதி புத்தகாலயம்

F  43

39

அருகில் பயணிக்கும் நிழல்

மதிமகள்

பாரதி புத்தகாலயம்

F  43

40

இஸ்ரேலிய இந்துத்துவ சினிமா

இ.பா.சிந்தன்

பாரதி புத்தகாலயம்

F  43

41

தீ பரவட்டும்

அண்ணாதுரை

பனுவல்

F 13

42

கடலும் கிழவனும்

எர்னெஸ்ட் ஹெமிங்வே

பனுவல்

F 13

43

ஒற்றன்

அசோகமித்திரன்

பனுவல்

F 13

44

மூமின்

ஷோபா சக்தி

பனுவல்

F 13

45

உதடுகள் சொல்லும் கதை

ச.சுப்பாராவ்

உயிர்மை

F 46

46

மதிகெட்டான் சோலை

சரவணன் சந்திரன்

உயிர்மை

F 46

47

கடைசி தேநீர்

உமா ஷக்தி

உயிர்மை

F 46

 

 

 

No comments:

Post a Comment