Friday, January 9, 2026

முருகரை இழிவுபடுத்தும் சங்கி ராம.சீனு

 


சங்கிகளுக்கு பக்தி என்பதோ கடவுள் மீது நம்பிக்கையோ ஏன் மரியாதை கூட கிடையாது என்பதற்கான உதாரணம் போலிப் பேராசிரியன் ராம.சீனுவாசன் போட்டுள்ள ட்விட்டர் பதிவு.


அந்த பதிவை நிறைய சங்கிகள் வேறு பகிர்ந்து குதூகலித்துக் கொண்டுள்ளனர். 



இந்த பதிவின் மூலமாக போலிப் பேராசிரியன் சொல்வது என்ன?

"முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற வாகனத்தின் டயர் வெடித்தமைக்கு முருகனே காரணம். "

அப்படியென்றால் விபத்தை ஏற்படுத்துவதுதான் முருகனின் வேலை. ஏதோ சினிமாக்களில் ஸ்கெட்ச் போடும் வில்லன் ரேஞ்சிற்கு முருகனை கொண்டு வந்துள்ளான் போலிப் பேராசிரியன்.

ஸ்டாலின் சென்ற வாகனத்திற்கு விபத்து ஏற்பட முருகன் காரணம் என்றால் பல்வேறு யாத்திரைகள் செல்லும் பக்தர்கள் வாகன விபத்துக்களில் சிக்கி மரணிக்கிறார்களே, அதற்கு யார் காரணம் என்று அந்த ட்விட்டர் பதிவிலேயே நிறைய பேர் கேட்டுள்ளனர்.

இப்படிப்பட்ட கேள்விகள் எழுவதற்கு வழி வகுத்துக் கொடுத்து சங்கிகளின் சுய ரூபத்தை அம்பலப்படுத்தியதுதான் முருகன் அருளோ?

No comments:

Post a Comment