Friday, June 23, 2023

இதை செய்து விட்டு உள்ளே போ

 



லண்டனில் அண்ணல் அம்பேத்கர் வாழ்ந்த வீட்டை மகாராஷ்டிர அரசு வாங்கி அதனை அருங்காட்சியகமாக நடத்தி வருகிறது.

அதன் கட்டுப்பாட்டை இப்போது ஒன்றிய அரசு கேட்கிறது. ED அரசும் கொடுக்கப்போகிறது,


அதற்கு என்னென்னமோ கம்பி கட்டும் கதைகள் சொல்லியுள்ளார்கள். அவற்றின் மீது நம்பிக்கையே வரவில்லை. 

வள்ளலாரை சனாதனத்தின் உச்ச நட்சத்திரம் என்று ரெவி கட்டுக்கதை கட்டியது போல,

அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு சங்கி அடியாள் அர்ஜுன் சம்பத் விபூதி குங்குமம் பூச முயற்சித்தது போல 

லண்டனில் அண்ணல் அம்பேத்கர் அருங்காட்சியகத்தில் திரிபு வேலைகள் செய்வார்களோ என்று அச்சம் வருகிறது.

அதனால் ஒன்றிய அரசுக்கு ஒன்று சொல்கிறேன்.

அண்ணல் அம்பேத்கர் புத்த மதத்தினை தழுவும் போது இருபத்தி இரண்டு பிரகடனங்களை அறிவித்தார். 

அவை ஒரு ஸ்தூபியாக அண்ணல் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவிய தீட்சாபூமியில் ஒரு ஸ்தூபியில் இருக்கிறது. அவற்றின் தமிழாக்கம் கீழே. கடைசி இரண்டு பிரகடனங்கள் சரியாக தெரியவில்லை.
அவற்றின் தமிழாக்கம் கீழே. கடைசி இரண்டு பிரகடனங்கள் சரியாக தெரியவில்லை.

1)        பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகியோரை கடவுளாக கருதவோ, வழிபடவோ மாட்டேன்

2)        ராமனையோ கிருஷ்ணனையோ கடவுளாகக் கருதி வழிபட மாட்டேன்.

3)        கௌரி, கணபதி போன்ற ஹிந்து தர்மம் சொல்கிற எவரையும் கடவுளெனக் கருதி தொழ மாட்டேன்.

4)        கடவுள் அவதாரமெடுத்தார் என்பதை ஒருபோதும் நம்ப மாட்டேன்.

5)        புத்தர் விஷ்ணுவின் அவதாரம் எனச் சொல்வது தவறு மட்டுமல்ல, விஷமத்தனமான பிரச்சாரமும் கூட.

6)        திதி போன்றவற்றை நான் செய்ய மாட்டேன்.

7)        புத்த தர்மங்களுக்கு முரணான, எதிரான எதையும் நான் செய்ய மாட்டேன்.

8)        பிராம்மணர்கள் மூலம் எந்த சடங்கையும் செய்ய மாட்டேன்.

9)        அனைத்து மனிதர்களும் சமம் என்பதை நான் நம்புகிறேன்.

10)     சமத்துவத்தை உருவாக்க நான் பாடுபடுவேன்.

11)     புத்தரின் உயரிய கொள்கைகளை பின்பற்றுவேன்

12)     புத்தரின் பத்து கோட்பாடுகள் படி நடந்து கொள்வேன்.

13)     அனைத்து ஜீவராசிகளையும் நேசிப்பேன்.

14)     நான் திருட மாட்டேன்.

15)     நான் தகாத உறவில் ஈடுபட மாட்டேன்

16)     நான் பொய் சொல்ல மாட்டேன்.

17)     எந்த போதைப்பொருளையும் நான் உட்கொள்ள மாட்டேன்

18)     புத்த தர்மத்தின் மூன்று அடிப்படைகளான ஞானம், கருணை, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் வாழ்வேன்.

19)     மனிதகுல வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கிற, மனிதர்களை சமமற்றவர்களாகவும் இழிவாகவும் நடத்துகிற ஹிந்து தர்மத்தை துறந்து புத்த தர்மத்தை தழுவிகிறேன்.

20)     இனி புத்த தர்மப்படியே நடந்து கொள்வேன் என சபதமேற்கிறேன்.


அந்த பிரகடனங்களை ஒன்றிய அரசு பளிச்சென்று லண்டன் அருங்காட்சியகத்தில் பல இந்திய மற்றும் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து வைக்க வேண்டும். 

செய்து விட்டு உள்ளே போகட்டும் . . .


No comments:

Post a Comment