Sunday, June 18, 2023

இதுக்கு மட்டும் நேரமிருக்கா அம்மையாரே?

 


எஸ்.ஜி.சூர்யா என்றொரு பாஜகவின் மாநில நிர்வாகி. அவன் தன்னுடைய லெட்டர்பேடில் ஒரு அறிக்கை வெளியிடுகிறான்.

"மதுரை மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் பேரூராட்சியில் சி.பி.ஐ.(எம்) கவுன்ஸிலர் விஸ்வநாதன் என்பவர், ஒரு தூய்மைப்பணியாளரை மலக்குழியில் இறங்க வைத்து அவரது மரணத்துக்கு காரணமாகி விட்டார். தன் தொகுதியில் நிகழ்ந்த கொடுமைக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குரல் கொடுக்காமல், நியாயம் வாங்கித்தராமல் மூடி மறைக்கிறார்"

என்பதுதான் அறிக்கையின் சாராம்சம். இதிலே தோழரை இழிவு படுத்தும் பல வாசகங்கள் இருந்தன.

இந்த அறிக்கையில் என்ன பிரச்சினை?

பெண்ணாடம் பேரூராட்சி இருப்பது மதுரை மாவட்டத்தில் அல்ல, கடலூர் மாவட்டத்தில்.

ஆக அது தோழர் சு.வெங்கடேசனின் தொகுதியே அல்ல.

அபாண்டமாக ஒரு பொய்யை உள்நோக்கத்துடன் பரப்பினால் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா?

சில சமயங்களில் அவதூறு செய்பவனெல்லாம் ஒரு ஆளு, அவன் தரத்திற்கு நாம் கீழிறங்கி புகார் கொடுக்க வேண்டுமா என்று நாம் யோசித்தால் அந்த பெருந்தன்மையைக் கூட பலவீனமாக கருதி மேலும் அவதூறுகளில் ஈடுபடும் சில வீணர்களை கண்ணெதிரில் அன்றாடம் பார்த்துக் கொண்டிருப்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் கொடுத்ததும், அந்த வதந்தி பரப்பியவனை கைது செய்ததும் சரியான நடவடிக்கையே. 

உடனே சங்கிகள் அந்த பொய்யனுக்கு ஆதரவாக பொங்க ஆரம்பித்து விட்டார்கள். ஆட்டுக்காரன், நாராயணன் திருப்பதி, எச்.ராசா போன்றவர்களுக்கு வேறு பிழைப்பு கிடையாது. இது போன்ற வெட்டித் தனகளில்தான் நேரத்தை விரயம் செய்வார்கள்.

இந்த லாவணிக்கச்சேரியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா அம்மையாரும் இணைந்துள்ளார்.

ஒரு பொய்யனுக்கு வக்காலத்து வாங்கும் அளவிற்கு அந்தம்மாவிற்கு நேரம் இருக்கிறதா?

இந்த கேள்வியை நான் எழுப்ப ஒரு காரணம் இருக்கிறது.

இன்சூரன்ஸ் ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தை இதர வங்கி ஊழியர்கள் போல உயர்த்துவதற்கான பரிந்துரை அம்மையார் மேஜையில் நான்காண்டுகளாக உறங்கிக் கொண்டிருக்கிறது.

தன்னுடைய வேலையை செய்ய முடியாத ஒருவர் பொய்யனுக்கு பரிந்து கொண்டு வருவது கேவலமாக இருக்கிறது,

தோழர் சு.வெங்கடேசனின் அறிக்கை அதைத்தான் சூடாக கேட்கிறது.



No comments:

Post a Comment