Tuesday, March 30, 2021

மாலன் “கடுமையான தேச சேவை”யா?

 


மாலன் எழுதறாரு, மோடி படிக்கிறாரு

இப்போதெல்லாம் மூத்த்த்த்த்த்த்த பத்திரிக்கையாளர் படு சுறுசுறுப்பாக இருக்கிறார். ஊரில் உள்ளவர்களின் பதிவுகளுக்கெல்லாம் சென்று மோடி புகழ் பாடுகிறார். திமுகவை திட்டுகிறார். கடுமையான தேச சேவை என்று அவரே நினைத்துக் கொண்டிருக்கிறார்.

 


வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நானும் அவருக்கு பின்னூட்டம் போடுகிறேன்.

 





பார்ட்டி துடைத்துக் கொண்டு போய் விடுகிறது போல . . .

 

விக்ரம் படத்தில் சுகிர்த ராஜாவாக வரும் சத்யராஜ், கொல்லப்பட்ட ராணுவ ஜவானுக்கு “ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தனும், கடுமையான தேச சேவை” என்று சொல்வார். அப்படி ஒரு கடுமையான தேச சேவை செய்கிறார் மாலன். ஆனால் கூலிக்கு மாரடிப்பதால் பாவம் இவர் சேவை எல்லாமே காமெடியாகப் போய் விடுகிறது.

 மோடி புகழ் பாடிய ஒரு பின்னூட்டமும் அதற்கு ஒரு சுவையான கமெண்டும் கீழே உள்ளது. ட்விட்டர் பக்கம் வரக்கூடாது என்று கொள்கைப் பிடிப்போடு வேறு இருக்கிறார்.

 


மோடி பேசும் தமிழை மாலன் சிலாகிப்பது புதிதல்ல. இதிலே மாலனின் ட்விட்டர் பதிவை மோடியே பகிர்ந்து கொண்டுள்ளார் என்று சில்லறையை சிதற விட்ட சம்பவமெல்லாம் வேறு நடந்துள்ளது.

 மோடி தப்பும் தவறுமாக தமிழில் என்ன சொன்னாலும் அடுத்த கணமே மாலன் மெய்சிலிர்க்க தோள்களை உயர்த்திக் கொண்டு பதிவு போட்டு விடுவார்.

 அதற்கான காரணத்தை ஊகிப்பது மிகவும் சுலபம்.

 மோடிக்கு அந்த தமிழ் பிட்டுக்களை எழுதிக் கொடுப்பது மாலனாகவே இருக்க வேண்டும். அதனால்தான் மோடி உளறினாலும் இவரால் அதை சரியாக  எழுத முடிகிறது.

 ஏராளமானவர்கள் இறந்து போன மகாமகத்தின் போது A1, A2 மகாமகக் குளத்தில் குளித்த காட்சியை ஜயேந்திர சரஸ்வதி வர்ணித்தது போல மோடியை மாலன் புகழ்கிறார், மாலனை மோடி புகழ்கிறார். இதெல்லாம் பேக்கரி டீலிங் அமலில் இருக்கும் வரைதான்.

 

ஆனால் மாலன் சாரே, டெலி ப்ராம்ப்டர் வைத்து படிக்கிற ஒருவருக்கு மிகப் பெரிய பேச்சாளர் போல பில்ட் அப் கொடுப்பதெல்லாம் ரொம்ப ஓவர். “வருங்கால அமெரிக்க ஜனாதிபதி முருகேசன் வாழ்க” என்ற கூவலை விடவும் ரொம்பவே ஓவர். ஒரு நாடாளுமன்ற விவாதத்தில் அவரது உடல் மொழி அறுவெறுப்பாக இருந்தது என்பதெல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லை போல.

 மீண்டும் சொல்கிறேன். கூலிக்கு மாரடிக்கும் உங்கள் எழுத்துக்களை அவர்களே “கடுமையான தேச சேவை” கேடகரிக்குள் கணக்கில் கொள்ள மாட்டார்கள்.

 பிகு 1 : கமலஹாசனின் விக்ரம் படத்தை யூட்யூபில் காணவில்லை. அதனால் சத்யராஜ் காட்சியோடு படம் போட முடியாமல் “வருங்கால அமெரிக்க ஜனாதிபதி வாழ்க, காட்சியை பதிவில் இடைச்செருகல் செய்ய வேண்டியிருந்தது.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   பிகு 2 : நாளை ஆஜான் ஸ்பெஷல் “நாற வாய் நாரோயில் ஆஜான்”

No comments:

Post a Comment