Friday, March 5, 2021

ஆஜானிடம் கேளுங்கள் சோட்டா பிரதமர் மோடி

 




டெக்னிக்கையாவது மாத்துங்கய்யா கிரிமினல் கூட்டாளிகளா

 அமைப்பு சாரா ஆளுமைகள் என்றால் “சட்ட விரோத நடவடிக்கைகள் சட்டத்தின் (UAPA)  கீழ் கைது”.

 திரை ஆளுமைகள் என்றால் வருமான வரி சோதனை.

 மற்றவர்கள் என்றால் தேச விரோதி பட்டம்.

 தங்கள் ஆட்சியை விமர்சிப்பவர்களை துன்புறுத்த பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகள் ஏவும் ஆயுதம் இவைதான்.

 இந்த ஆயுதங்களை இவர்கள் ஏவும் போதே அந்தக் குற்றச்சாட்டில் சாரம் கிடையாது என்பது தெரிந்து விடுகிறது.

 திரைக் கலைஞர்கள் டாப்ஸி மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோர் வீட்டில் நேற்று முன் தினம் நடந்துள்ள சோதனையும் இதே  கேட்டகரிதான்.

 டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்ட் ஸோ மச்.

 நீங்க இன்னும் பழைய பஞ்சாங்கமாகவே இருக்கீங்களேப்பா.

ஒருவேளை உங்களுக்கு தெரியவில்லையென்றால் தமிழின் முதன்மை எழுத்தாளர் புளிச்ச மாவு ஆஜானிடமாவது கேளுங்கள்.

அவர் வசனம் எழுதிய திருட்டுக்கதை சர்காரில் விஜயை கட்சி ஆபிஸில் கொலை செய்யலாமா என்று ராதாரவி வக்கீலிடம் போன் செய்து கேட்பார். அவரோ நான் சீனியர் கவுன்ஸிலிடம் கேட்டு சொல்கிறேன் என்று சொல்லி விட்டு அடுத்த காட்சியிலேயே கொலை செய்யலாம் என்று சீனியரும் சொல்லி விட்டார் என்பார்.

இவ்வளவு சட்டத்திறன் படைத்தவரை பயன்படுத்தலாமே மோடி!

ஆஜான் சொன்ன மாதிரி சோட்டா பிரதமராகவே இருக்கீங்களே!

பிகு: ஆஜானுக்காக இரண்டு ட்ம்ப்ளர் ஸ்பெஷல் பாயசம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

அதற்கான முன்னோட்டமாகத்தான் நேற்று முன் தினம் எழுதிய பதிவை மாற்றி விட்டேன்.

 

No comments:

Post a Comment