Tuesday, January 10, 2017

இது எனது வெள்ளை அறிக்கை




செல்லா நோட்டு பிரச்சினை தொடர்பாக வெள்ளை அறிக்கை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரிசர்வ் வங்கியோ, வெற்று முழக்க மோடியோ ஏற்கப் போவதில்லை.

அந்த 75 நாட்களில் அப்பல்லோவில் நிகழ்ந்தது என்ன என்பதற்கான வெள்ளை அறிக்கையை பிரதாப் ரெட்டியோ சசிகலாவா வைக்கப் போவதில்லை.

சரி, நாமாவது ஒரு வெள்ளை அறிக்கை சமர்ப்பிப்போமே என்ற ஆசையில் முன்வைக்கிறேன்.

கடந்தாண்டு படித்த புத்தகங்கள் பற்றி நேற்று ஒரு வெள்ளை அறிக்கை வைத்திருந்தேன். அது போல ஒரு பதிவுதான் இது.

2016 ம் ஆண்டில் என் வலைப்பக்க பரிவர்த்தனைகளைப் பற்றிய வெள்ளை அறிக்கை இது.

கடந்தாண்டு நான் எழுதிய பதிவுகளின் எண்ணிக்கை 522. மாதம் குறைந்தபட்சம் நாற்ப என்ற சராசரியில் எழுதியுள்ளேன்.

எப்போதும் போல பெரும்பாலான பதிவுகள் அரசியல் பதிவுகள்தான். நவம்பர் எட்டிற்குப் பிறகு ஐம்பத்தாறு இஞ்ச் மார்பரே ஏராளமான நேரத்தை எடுத்துக் கொண்டு விட்டார்.

பரபரப்பான தலைப்புக்கு கிடைக்கிற வரவேற்பு போல மற்ற தலைப்புக்களுக்கு கிடைப்பதில்லை. தெரிந்த அனானிகள், தெரியாத அனானிகள், காவி அனானிகள் என்று கொசுத் தொல்லைக்கும் குறைவில்லை.

துல்லியமான தாக்குதலுக்குப் பிறகு எழுதிய ந்த தேசத்துரோகி பேசுகிறேன்"  என்ற பதிவுதான் எனது வலைப்பக்க வாழ்வில் அதிகபட்சமாக 11,392 ஹிட்கள் பெற்ற பதிவு. இந்த பதிவுக்கு முன்பாக வீரம் காட்டிக் கொண்டிருந்த காவிகள், இதற்கு பதில் சொல்லாமல் எங்கோ ஒளிந்து கொண்டு விட்டார்கள்.

கடந்தாண்டுதான் அதிகமாக 2,43,908  பார்வைகளும் கிடைத்துள்ளது.  இந்த ரேஞ்சில் சென்றால் அநேகமாக இந்த ஆண்டில் பத்து லட்சம் என்ற எண்ணிக்கையை அடைய முடியும் என்று நம்பிக்கை வந்துள்ளது. ஒன்பு லட்சத்ை நெரங்கிக் கொண்டிருப்பால் கிடைக்கும் நம்பிக்கை.

வலைப்பக்க அனுபவத்தில் புரியாத புதிராக இருப்பது தமிழ்மணம் அளிக்கும் தர வரிசைதான்.

வாராவாரம் அளிக்கும் தர வரிசையில் தொடர்ந்து ஒரு ஆண்டாக பத்து இடங்களுக்குள் இருந்தாலும் மூன்று மாத அடிப்படையிலான தர வரிசை என்னமோ இருபதிற்கு மேல்தான் உள்ளது. இது எப்படி என்று புரியவே இல்லை.

2 comments:

  1. தமிழ்மணம் பல மாதங்களாக சரியாக செயல்படுவதில்லை...

    ReplyDelete