Wednesday, January 18, 2017

ரொம்ப, ரொம்பவே ஓவரா போயிடுச்சு


இந்த வருட புத்தகக் கண்காட்சிக்கு இரண்டு முறை சென்றிருந்தேன். முதல் முறை 11.01.2017  புதன் கிழமை. சென்னைக்கு போன முக்கியமான வேலை மதியமே முடிந்து விட்டதால் மூன்று மணிக்கெல்லம் அரங்கிற்குள் நுழைந்து விட்டேன்.

முகப்பிலேயே ஒரு சிட்டி யூனியன் வங்கி ஏ.டி.எம் கவுண்டர். ஏ.டி.எம் என்றால் அதிலே பணம் இருக்காது என்பதுதான் அறுபத்தி ஐந்து நாள் அனுபவமாகி விட்டதால் யாரும் அங்கே இல்லை. கொஞ்சம் சந்தேகத்தோடு அங்கிருந்த செக்யூரிட்டியைக் கேட்டால் “பண்ம் இருக்கு சார்" என்று சொல்ல நீண்ட நாட்களுக்குப் பிறகு வரிசையில் நிற்காமல் பணம் எடுத்துக் கொண்டு தெம்பாக உள்ளே சென்றேன்.

வேலை நாளில் மதிய வேளையில் சென்றதால் அவ்வளவாக கூட்டமே இல்லை. பல்வேறு ஸ்டால்களிலும் நிதானமாக புத்தகங்களை பார்த்து புரட்டி வாங்க முடிந்தது. ஒரு நாற்பது புத்தகங்களை வாங்க வேண்டும் என்று மனதில் ஒரு பட்டியல் இருந்தது. அவற்றில் பெரும்பாலானவற்றையும் தேடி வாங்க முடிந்தது. 

கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக கிடைக்காத ஒரு நூல் "சுவருக்குள் சித்திரங்கள்". தோழர் தியாகு தனது சிறை அனுபவங்களை ஜூனியர் விகடனில் தொடராக எழுதி பின்பு நூல் வடிவம் பெற்றது. தோழர் பாரதி கிருஷ்ணகுமார், வெண்மணி பற்றி இயக்கிய "ராமையாவின் குடிசை" ஆவணப்படம் பார்த்தது முதலே இந்த நூலை வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்த வருடம்தான், அதுவும் நான் சென்ற முதல் ஸ்டாலிலேயே கிடைத்தது உற்சாகமாக இருந்தது. அந்த உற்சாகத்திலேயே முழுமூச்சாக அந்த ஐநூறு பக்க நூலை படித்து முடித்து விட்டேன். 

அதே போல் தொடராக வந்த இன்னொரு நூலை இப்போது படித்தால் அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை. அது பற்றி பிறகு எழுதுகிறேன். இந்த முறை பிரபலங்கள் என்று யாரும் கண்ணில் படவில்லை. திரைப்பட இயக்குனர் முக்தா சீனிவாசன் பதிப்பகம் என்று ஒரு ஸ்டால் இருந்தது. அவரும் அங்கே உட்கார்ந்திருந்தார். அந்த ஸ்டாலை கடக்கையில் கையைப் பிடித்து இழுக்காத குறையாக ஒருவர் உள்ளே வரவைத்தார். ஆனால் புத்தகங்கள் அப்படி ஒன்றும் சுவாரஸ்யமாக இல்லை. ஆர்.எஸ்.எஸ் வரலாறு என்று ஒரு நூல் இருந்தது. காங்கிரஸ்காரர் ஆயிற்றே, காமராஜரோடு நெருக்கமாக இருந்தவராயிற்றே, அவரை கொல்ல நடந்த சதி பற்றி ஏதாவது எழுதியிருப்பாரா என்று புரட்டிப்பார்த்தால் ஆர்.எஸ்.எஸ்ஸை புகழ்ந்து தள்ளியிருந்தார். அப்படியே வைத்து விட்டு நடையைக் கட்டி விட்டேன்.

ஏற்கனவே டெபிட் கார்ட் பயன்படுத்திய அனுபவம் மோசமாக இருந்ததால் ரொக்கமாக கொடுத்தே புத்தகங்கள் வாங்கினேன். முயற்சிக்கலாமே என்று யோசித்து கொடுத்த ஒரு பதிப்பகத்திலும் இணைப்பு கிடைக்காததால் அதன் பிறகு பையிலிருந்து எடுத்தது பணத்தை மட்டுமே.

கொண்டு போன இரண்டு பிக்ஷாப்பர் கட்டைப்பைகள் நிரம்பியதும்தான் வெளியே வந்தேன். அப்போதுதான் நேரத்தைப் பார்த்தேன். மூன்று மணி நேரத்திற்கும் மேலாகி இருந்தது. 

வீட்டிற்கு வந்து பார்த்தால் திட்டமிட்ட சில நூல்களை வாங்காதது தெரிந்தது. ஞாயிறு அன்று சென்னை செல்ல வேண்டிய இன்னொரு வேலை வந்ததும் அதை பயன்படுத்திக் கொண்டு அவற்றையும் வாங்கி வந்து விட்டேன்.

பட்டியல் போட்டு பார்த்தால் மிகவும் மலைப்பாக இருக்கிறது. பயணங்கள் இருக்கும்வரை வாசிப்பதில் தடையில்லை. ஆனாலும் ரொம்பவே ஓவராக போய் விட்டது. அடுத்த வருடமாவது ஒரு சுயகட்டுப்பாடு கொண்டு வரவேண்டும். இதை வீட்டிலும் சொன்னேன். 

"ஒவ்வொரு வருஷமும் இதையே சொல்றீங்க. ஆனா வாங்கி குவிப்பதில் மட்டும் குறைச்சல் கிடையாது" என்று பதில் வந்தது.இப்போதைய உடனடி பிரச்சினையை தீர்க்க என்ன வழி என்றுதான் தெரியவில்லை. எந்த அலமாரியிலும் இடமில்லை. கம்ப்யூட்டர் மேஜையில் இருப்பதை எங்கே வைக்க?

பட்டியல் கீழே

 
எண் பெயர் ஆசிரியர் தன்மை பக்கம் விலை
1 ஆர்டர், ஆர்டர் கே.சந்துரு நீதித்துறை பற்றி 256 200
2 தாழிடப்பட்ட கதவுகள் அ.கரீம் சிறுகதைகள் 160 149
3 நான் பூலான்தேவி மரியே தெரஸ்கூன் வாழ்க்கை வரலாறு 363 300
    தமிழில் மு.ந.புகழேந்தி      
4 வேடிக்கை பார்ப்பவன் நா.முத்துக்குமார் வாழ்க்கை அனுபவம் 239 165
5 நஞ்சுண்ட பூமி பா.செயப்பிரகாசம் கட்டுரைகள் 240 200
6 நீர் வினாயக முருகன் நாவல் புனைவு 152 150
7 ஐந்து முதலைகளின் கதை சரவணன் சந்திரன் நாவல் புனைவு 168 150
8 ரோலக்ஸ் வாட்ச் சரவணன் சந்திரன் நாவல் புனைவு 158 150
9 நாளை மற்றொரு நாளல்ல சுப்ரபாரதி மணியன் கட்டுரைகள் 88 60
10 பயணங்கள் முடிவதில்லை சோ.சுத்தான்ந்தம் வாழ்க்கை அனுபவம் 110 90
11 மாவீரன் சிவாஜி கோவிந்த் பன்சாரே சிவாஜி பற்றி 96 70
    தமிழில் சி.நடேசன்      
12 ஔரங்கசீப்பும் அப்துல் கலாமும் அ.மார்க்ஸ் அரசியல் 158 160
13 பிரியங்கா நளினி சந்திப்பு பா.ஏகலைவன் ராஜீவ் கொலை 610 500
14 வரலாறு என்னை விடுதலை  ஃபிடல் காஸ்ட்ரோ நீதிமன்ற உரை 128 70
  செய்யும் தமிழில் வீ.பா.கணேசன்      
15 தூக்கிலிடுபவரின் குறிப்புகள் சசி வாரியர் அனுபவம் 272 220
16 தெரு விளக்கும் மரத்தடியும் ச.மாடசாமி கல்வி 88 80
17 கருக்கு பாமா நாவல் புனைவு 96 70
18 இடையில்தான் எத்தனை ச.சுப்பாராவ் கட்டுரைகள் 94 70
  ஞாயிற்றுக்கிழமைகள்?        
18 கு.அழகிரிசாமிகள் சிறுகதைகள் கு.அழகிரிசாமி சிறுகதைகள் 255 150
19 மகளிர் தின்ம் -  இரா.ஜவஹர் மகளிர் தினம் 80 60
  உண்மை வரலாறு        
20 சுமையா கனவுப் பிரியன் சிறுகதைகள் 214 160
21 ராஜீவ் காந்தியின் கடைசி தா.பாண்டியன் ராஜீவ் கொலை 113 105
  மணித்துளிகள்        
22 மருத்துவக் ஆய்வுக்கூடங்களில் அ.உமர் ஹீலர் மருத்துவத்துறை 64 50
  நடப்பது என்ன?        
23 முகிலினி இரா.முருகவேள் நாவல் சூழலியல் 485 375
24 காங்கிரிட் காடு அப்டன் சிங்க்ளர் நாவல் வரலாறு 352 280
25 செவ்வி தொ.பரமசிவன் நேர்காணல்கள் 144 130
26 விசாரணைகள் அருணன் தத்துவம், அரசியல் 288 180
27 ஊருக்கு செல்லும் வழி கார்த்திக் புகழேந்தி அனுபவம் 128 75
28 குறுக்குத்துறை ரகசியங்கள் நெல்லை கண்ணன் அனுபவம் 112 99
29 எது கருப்புப்பணம் மருதையன் செல்லா நோட்டு 32 30
30 லாக்கப் மு.சந்திரகுமார் அனுபவம் 144 120
31 நவம்பர் 8 எஸ்.அர்ஷியா செல்லா நோட்டு 104 90
31 தூக்குமேடையில் தோழர் பாலு ஆர்.நல்லக்கண்ணு அரசியல் 20 15
32 கூழாங்கற்கள் கனவுப் பிரியன் சிறுகதைகள் 254 200
33 உயிரே உயிரே மாலன் கட்டுரைகள் 108 100
34 பேசுவதை நிறுத்திக் கொண்ட யமுனா ராஜேந்திரன் கட்டுரைகள் 147 130
  சிறுவன்        
35 யானைச்சொப்பனம் இரா.நாறும்புநாதன் கட்டுரைகள் 175 120
36 வீரம் விளைந்த்து நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கியன் நாவல் புனைவு 505 300
    தமிழில் எஸ்.ராமகிருஷ்ணன்      
37 பாலை நில ரோஜா கு.சின்னப்ப பாரதி நாவல் புனைவு 298 175
38 கானகன் லக்ஷ்மி சரவணகுமார் நாவல் புனைவு 264 99
39 கடவுள் என்பது என்ன? அஸ்வகோஷ் தத்துவம் 176 100
40 பிம்பச்சிறை எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அரசியல் 248 225
41 மனிதனுக்குள் ஒரு மிருகம் மதன் கட்டுரைகள் 339 190
42 சமவெளி வண்ணதாசன் சிறுகதைகள் 128 80
43 உப பாணடவம் எஸ்.ராமகிருஷ்ணன் மகாபாரதம் 384 300
44 சீனப் பெண்கள் சின்ரன் சீனப் பெண்கள் பற்றி 316 280
    தமிழில் ஜி.விஜயபத்மா      
45 உழவுக்கும் உண்டு வரலாறு கோ.நம்மாழ்வார் விவசாயம் 128 100
46 கடவுள் தொடங்கிய இடம் அ.முத்துலிங்கம் நாவல் புனைவு 269 155
47 சுமார் எழுத்தாளரும்  அஜயன் பாலா கட்டுரைகள் 144 120
  சூப்பர் ஸ்டாரும்        
48 அணிலாடும் முன்றில் நா.முத்துக்குமார் அனுபவம் 144 115
49 கள்ளம் தஞ்சை பிரகாஷ் நாவல் புனைவு 222 200
50 முயல் தோப்பு பாஸ்கர் சக்தி சிறுகதைகள் 124 110
51 ம் ஷோபா சக்தி நாவல் ஈழம் 168 140
52 என் உள்ளம் அழகான கலாப்ரியா கட்டுரைகள் 136 120
  வெள்ளித்திரை        
53 அத்திப்பழங்கள் இப்போதும் ஆர்.விஜயசங்கர் அரசியல் கட்டுரைகள் 420 300
  சிவப்பாகத்தான் இருக்கின்றன        
54 ஆரஞ்சு மணக்கும் பசி ஸ்டாலின் சரவணன் கவிதைகள் 96 85
55 புகைப்படக்காரன் பொய் கருணாகரன் நேர்காணல்கள் 160 150
  சொல்ல முடியாது        
56 ஆயில் ரேகை பா.ராகவன் பொருளாதாரம் 199 145
57 ஆலயமும் ஆகமமும் சிகரம் ச.செந்தில்நாதன் சமூகம் 224 195
58 மீசை என்பது வெறும் மயிர் ஆதவன் தீட்சண்யா நாவல் புனைவு 176 130
59 சைக்கிள் கமலத்தின் தங்கை எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகள் 136 140
60 காஃபிர்களின்  கதை கீரணூர் ஜாகிர்ராஜா சிறுகதைகள் 208 160
61 தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ஜெயந்தன் சிறுகதைகள் 222 200
62 கேரளத்தில் எங்கோ லா.ச.ராமாமிர்தம் நாவல் புனைவு 112 70
63 கொடக்கோனார்  அப்பண்ணசாமி நாவல் புனைவு 239 180
  கொலை வழக்கு        
64 எங்கதை இமையம் நாவல் புனைவு 110 125
65 முஸ்தபாவை சுட்டுக்கொன்ற அகரமுதல்வன் சிறுகதைகள் 111 100
  ஓரிரவு        
66 ஒரு சிக்கல் இல்லாத காதல் சுஜாதா குறுநாவல் 48 25
  கதை        
67 விளிம்பு சுஜாதா குறுநாவல் 55 25
68 கை சுஜாதா குறுநாவல் 79 40
69 ஒரு சிறு இசை வண்ணதாசன் சிறுகதைகள் 160 140
70 சுவருக்குள் சித்திரங்க்ள் தியாகு சிறை அனுபவம் 525 330
71 செல்லுலாய்டின் மாபூமி களப்பிரன் கட்டுரைகள் சினிமா 175 150
72 பிறிதொரு பொழுதில் எஸ்.ஜி.ரமேஷ்பாபு போராட்ட அனுபவம் 128 100
73 கருத்த லெப்பை கீரணூர் ஜாகிர்ராஜா நாவல் புனைவு 72 70
74 கிருஷ்ணப் பருந்து அ.மாதவன் நாவல் புனைவு 128 120
75 எது கல்வி? இரா.எட்வின் கட்டுரைகள் கல்வி 176 150
76 சாபிளினுடன் பேசுங்கள் எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரைகள் சினிமா 159 140
77 விலங்குப் பண்ணை ஜார்ஜ் ஆர்வெல் நாவல் புனைவு 127 125
78 அய்யங்காளி டி.எச்.பி.செந்தாரசேரி வாழ்க்கை வரலாறு 56 40
    தமிழில் மு.ந.புகழேந்தி      
79 உத்தம வில்லன் யமுனா ராஜேந்திரன் கட்டுரைகள் சினிமா 119 135
80 பார்த்தினியம் தமிழ்நதி நாவல் ஈழம் 512 450
81 வேல ராமமூர்த்தி கதைகள் வேல ராமமூர்த்தி சிறுகதைகள் 378 250
        15998 12402
           3 comments:

  1. தாங்கள் வாங்கிய புத்தகங்களின் பட்டியலைப் படிக்கப் படிக்க மனம் மகிழ்கிறது நண்பரே

    ReplyDelete
  2. Book purchase is not an expenditure rather an investment
    Hats off to you

    ReplyDelete