Saturday, January 28, 2017

அந்தாள்தான் பெரிய தேச விரோதி அம்மணிவாயைத் திறந்தா பொய்,
செய்யறதெல்லாம் அக்கிரமம்,
இந்தியாவை வெளிநாட்டு உள்நாட்டு முதலாளிகளிடம்
அடமானம்  வச்ச அவரை விட ,
இந்திய மக்களை நடுத்தெருவில் நிறுத்திய 
உங்கள் பிரதமரை விட 
பெரிய தேச விரோதி யாருமே கிடையாது 
அம்மணி நிர்மலா சீத்தாராமன் அவர்களே!

உங்க காவிக்கூட்டத்தை விட பெரிய தேசத்துரோகக் கூட்டமும்
கிடையாது அம்மணி.

இந்த மிரட்டல் உருட்டல் வேலையெல்லாம் வேற எங்கயாவது
வைச்சுக்குங்க.

ஆயிரம் தடவை சொல்லுவோம்

மோடி ஒரு மோசமான மனிதர். 
மோடி ஒரு மோசடி மனிதர்
மோடி பிரதமராய் இருப்பது இந்தியாவின் துயரம்.

 
 

6 comments:

 1. ஆயிரம் குறை இருந்தாலும் பிரதமர் என்ற பதவிக்கு மரியாதை கொடுங்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆயிரம் குறை உள்ள மனிதரை எதற்கு பிரதமராக வைத்துக் கொண்டு கஷ்டப்பட வேண்டும்? மரியாதை பதவிக்கு அல்ல. மனிதருக்குத்தான்

   Delete
 2. இந்த பிரச்சனை ஏன் ஆரம்பித்தது - அதை பற்றி சொல்லவில்லை . என்ன நிர்பந்தமோ?. மாநில அரசை எதிர்த்து , மத்திய அரசின் ஒரு துறையே கோர்ட்டுக்கு செல்கிறது ( animal welfare board ) , அதன் கூட பீட்டா போன்ற அமைப்புகள் இணைகின்றன . திரு ஜெயராம் ரமேஷ் என்ன செய்தார் , அதற்க்கு தி .மு.க என்ன எதிர்ப்பு, எப்படி தெரிவித்தது ? ( சின்ன உண்ணாவிரதமாவது இருந்தார்களா ? இலங்கை முள்ளிவாய்க்கால் போருக்கு இருந்த்து போல ) . அதற்கப்பறம் , புதிதாக வந்த மத்திய ( பா .ஜா க ) அரசு , சட்டம் திருத்தம் செய்ததை உச்ச நீதி மன்றம் தடை செய்தது . பா .ஜா க அரசுக்கும் , உச்ச நீதி மாற்றத்திற்கும் உள்ள பிரச்சனையால் , மத்திய மாநில அரசுகளால் கொண்டு வந்த சட்ட திருத்தம் - உச்ச நீதி மன்றம் நிராகரிக்கிறது , மேலும் மேல் நாடு பணத்தை மோசடி செய்த டீத்ஸலா அவர்களுக்கு சில மணி நேரத்திலேயே ஜாமீன் , மாறனுக்கு முன் ஜாமீன் , கோர்ட்டே தானாகவே முன் வந்து தேசிய கீதம் எல்லா அரங்கிலும் கட்டாயம் என தீர்ப்பு ( அப்ப தானே மோடி இது தவறு வேண்டாம்னு சொல்ல முடியாது ) - அந்த வரிசையில் ப ஜா க அரசு கொண்டு வந்த ஜல்லிக்கட்டு அறிவிக்கைக்கும் தடை . அதாவது இந்து பண்டிகைகள் என்றால் சோனியாவுக்கு அலர்ஜி , வெடி இல்லாத தீபாவளி , சாயங்கள் இல்லாத ஹோலி , ஜல்லிக்கட்டு இல்லாத பொங்கல் .

  இத்தனை பிரச்சனை உள்ள இந்த ஜல்லிக்கட்டை , சரியான வழிகாட்டுதலின் பேரில் , இதை நடத்த உதவிய மோடி குற்றவாளியா ?

  இந்த தீர்ப்பை வழங்கிய ராதாகிருஷ்ணன் ( ஒரு மலையாளி) மற்றும் பானுமதி அவர்கள் இந்த வழக்கில் சதி ( உடன்கட்டை) எப்படி சட்டம் மூலம் மறைந்தது ? அதுபோல ஜல்லிக்கட்டு சட்டம் மூலம் நிறுத்த வேண்டும் என்றார்கள் . நம் தமிழ் நாட்டில் ( அல்லது கேரளாவில் , ஆந்திராவில் ) சதி இருந்ததாக துளி கூட தடயங்கள் இல்லை . என்னக்கு தெரிந்த உறவினர்கள், நண்பர்கள், தெருவில் வசிப்பவர்கள் - யார் வீட்டிலும் அப்படி ஒரு பாட்டியோ, அம்மாவோ , சித்தியோ , பெரியம்மாவோ சதி மூலம் உயிர் விட்டதாக கேள்வி பட்டதே இல்லை . மாறாக நான் நிறைய வெள்ளை அல்லது காவி உடுத்திய மொட்டை பாட்டிகளை நிறைய பார்த்திருக்கிறேன் ( என்னுடைய பாட்டி உள்பட )

  கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள் ... உண்மையை எழுதுங்கள்

  ReplyDelete
  Replies
  1. ஐயா கனாக்காலம். கொஞ்சம் புரிஞ்சு எழுதுங்க. ஓ அதுதான் சங்கிங்களுக்கே முடியாது இல்லை? இரண்டரை வருஷமா எழுதிக்கிட்டு இருக்கறதைத்தான் இந்த பதிவிலும் சொல்லியுள்ளேன்.

   மோடி ஒரு மோசமான மனிதன், மனித குல விரோதி, தேசத்தை அடமானம் வைக்கும் தரகன்

   Delete
 3. நீங்கள் சும்மா ரெண்டரை வருஷமாக எழுதுவதால் அது சரியான தகவல் இல்லை ...அது உங்களின் மனச்சிக்கல் . நான் எழுதிய தகவல்களில் உண்மைக்கு புறம்பான தகவல் ஏதேனும் இருக்கிறதா ?. இருந்தால் அதற்க்கு பதில் அளிக்கிறேன் அல்லது என்னை திருத்தி கொள்கிறேன் ....

  ReplyDelete
 4. ஐயா, என் பதிவு மோடி ஒரு தேச விரோதி என்பதுதான். அதைத்தான் இரண்டரை வருடமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். இதை புரிந்து கொள்வதில் உங்களுக்கு எங்கே சிக்கல்?

  ReplyDelete