Monday, June 1, 2015

இடம் மாறிய அஸ்தமன சூரியன்





கன்னியாகுமரியைப் பொறுத்தவரை அவசியம் பார்க்க வேண்டியவை சூரிய உதயமும் அஸ்தமனமும்தான். எங்கள் பயணத்திட்டத்தின்படி சூரிய உதயத்தைப் பார்க்க வாய்ப்பில்லாததால் சூரிய அஸ்தமனத்தை அவசியம் பார்ப்பது என்று முடிவெடுத்திருந்தோம்.

முந்தைய சந்தர்ப்பங்களில் காந்தி மண்டபத்தின் மேலிருந்தே இரண்டு காட்சிகளையும் பார்க்க முடியும்.

இப்போது சூரிய அஸ்தமனத்திற்கென்று ஒரு தனியான இடம் இருப்பதாகச் சொன்னதால் அங்கே சென்றோம்.

கன்னியாகுமரியின் கோவளம் கடற்கரையில் அகஸ்தியபுரம் ஊராட்சி பூங்கா போல நல்ல ஏற்பாடுகளை செய்துள்ளனர். இன்றைய தேதியில் அந்த இடம் நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது. பாராட்டுக்கள்.

நாங்கள் சென்ற காலம்தான்  சற்று சரியில்லை போல. மூன்று மாதங்கள் மட்டும் சூரியன் கடலில் மறையாமல் நிலத்தில் மறையுமாம். ஆகவே கடலில் விழும் காட்சி கிடைக்கவில்லை.

இருப்பினும் அந்திமச் சூரியன் அழகோ அழகோ.

அப்போது காமெராவுக்குள் சூரியனைக் கைப்பற்றிய பதிவுகளை கீழே அளித்துள்ளேன்.


நீங்களும் ரசியுங்கள்















 பின் குறிப்பு : ஒரு கேமரா மற்றும் இரண்டு அலைபேசிகளில் எடுக்கப்பட்ட படங்கள்.ஆகவே முன் பின்னாக இருக்கும்

2 comments:

  1. படங்கள் அருமை நண்பரே
    ரசித்தேன்
    நன்றி

    ReplyDelete
  2. அழகு தான்.
    //மூன்று மாதங்கள் மட்டும் சூரியன் கடலில் மறையாமல் நிலத்தில் மறையுமாம்.//
    மார்ச் மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை தானே?

    ReplyDelete