
மேலே உள்ள புகைப்படம் நேற்று இரவு போளூரில் உள்ள ரயில்வே கேட்டில் எடுக்கப்பட்டது.
இது ஒன்றும் இந்தியாவிற்கு புதிதான் காட்சியல்ல.ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு நாளும் பார்ப்பதுதான்.
ரயில் வருவதற்கு முன்பாக அப்படி கேட்டிற்குள் புகுந்து அவ்வளவு அவசரமாக போய் இவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள்?
உயிரை பணயம் வைக்குமளவிற்கு அப்படி என்ன அவசரமான வேலை இவர்களுக்கெல்லாம் இருக்கப் போகிறது?
வீட்டில் உள்ளவர்களை ஓர் நிமிடம் நினைக்க வேண்டும்...
ReplyDeleteஇவர்களைப் பார்த்துத் தான் வீட்டில் சொல்லிட்டு வந்தியா என நாக்கைப் பிடுங்கிற மாதிரி கேட்க வேண்டும் .. எருமை மாடு கூட ஒருநிமிடம் நின்று ரயில் போன பின்னரே போவதை ஒருமுறை பார்த்து வியந்து போனேன், ஆனால் மறத் தமிழருக்குத் தான் மரம் கழன்றுவிட்டது. :((
ReplyDeleteஅவசரம் ஒன்றும் இல்லை, தவறானதே பழக்கமாகிவிட்டது.
ReplyDelete