Saturday, March 7, 2015

இளையராஜாவால் ஏமாந்த கதை

 http://upload.wikimedia.org/wikipedia/en/d/d1/Gopura_Vasalile_dvd.jpg

இரண்டு நாட்களுக்கு முன்பாக இளையராஜாவின் இசைக் கோர்வை ஒன்றை பகிர்ந்து  கொண்டிருந்தேன். அப்போது கண்ணில் பட்டு, காதால் கேட்டது இந்த இசைக்கோர்வை

தனியார் தொலைக்காட்சி சேனல்கள் இல்லாத காலம்  அது. நெய்வேலியில் புதுப்படம் வெளியிட ஒரே ஒரு தியேட்டர் மட்டுமே இருந்தது. எல்லா படங்களும் முதல் நாளே ரிலீஸாகாது. தூர்தர்ஷனின் ஒளியும் ஒலியும் நிகழ்வில் இப்படத்தில் வரும் பாடலான "தேவதை போல் ஒரு பெண்ணிங்கு" பாடலைக் கேட்டு அப்படியே மெய் மறந்து போனேன்.

இரண்டு மூன்று நாட்களிலேயே நெய்வேலியில் வந்து விட, நான்கைந்து நண்பர்களை அழைத்துக் கொண்டு போனேன். டைட்டில் இசை (அதுதான் மேலே உள்ள இணைப்பு) கேட்டவுடனேயே  "ஆஹா, சூப்பர்" என்றெல்லாம் விசிலடிக்காத குறையாக துள்ளிக் குதித்தேன்.

ஆனால் அதற்குப் பிறகுதானே தெரிந்தது படம் படு மொக்கை என்பது.

படம் முடிந்து வெளியே வந்ததும் நண்பர்கள் "உன்னை நம்பி வந்தோம் பாரு" என்று திட்டினார்கள்.

இளையராஜாவை நம்பி நான் வந்தேன் என்று சொல்ல முடியுமா?

அதனால் "பாட்டெல்லாம் சூப்பர்பா" என்று சமாளித்தேன்.

அப்போது ஒருவர் முறைத்தது இப்போதும் நினைவில் உள்ளது.

6 comments:

  1. after this movie i stopped watching movies

    ReplyDelete
  2. //"பாட்டெல்லாம் சூப்பர்பா" என்று சமாளித்தேன்.

    அப்போது ஒருவர் முறைத்தது இப்போதும் நினைவில் உள்ளது.//
    :)

    ReplyDelete
  3. It's a very good movie I like it very much

    ReplyDelete
  4. பாடல் எல்லாம் ஹிட்சுதான் சகோ!

    ReplyDelete
  5. இந்த வகையில் நிறைய படங்கள் இருக்கிறது. பாடல்கள் பிரமாதமாக இருக்கும். படம் ஒன்று விஷேசமாக இருக்காது. மணிரத்னத்தின் முதல் படமும் இந்தரகம் தான்.

    'தேவதை போலொரு பெண்ணிங்கு...' பாடலை சினிமாவில் வரும் காட்சிகளை மறந்து கண்ணை மூடி கேட்டால் நம்மை இன்னொரு உலகத்துக்கு கூட்டிப் போகும்.

    ReplyDelete