Friday, March 13, 2015

துரோகிகளே, இதையும் அவர்களிடமே கேட்க வேண்டியதுதானே?



http://cache2.asset-cache.net/gc/465857734-chairman-sk-roy-and-railways-financial-gettyimages.jpg?v=1&c=IWSAsset&k=2&d=GkZZ8bf5zL1ZiijUmxa7QXSm%2F%2FVOYMkCUKSXjACERr8hySgzzy54FDIP3pa75%2FWGcEvMPEx3jJW0Tf%2BJsg1qgQ%3D%3D

நேற்றைய நாளிதழ்களின் முக்கியமான ஒரு செய்தி எல்.ஐ.சி நிறுவனம் இந்திய ரயில்வேவிற்கு அளிக்கவுள்ள ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் நிதியுதவிதான். இதற்கான ஒப்பந்தம் அருண் ஜெய்ட்லி முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளது.

அவரும் கட்சி மாறி ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபும் எல்.ஐ..சி யை வானளவு புகழ்ந்துள்ளனர்.

அந்த புகழ்ச்சிக்கு எல்.ஐ.சி தகுதியானது.

ஆனால் எல்.ஐ.சி யை புகழும் தகுதியோ அருகதையோ மோடி கூட்டத்து அமைச்சர்கள் யாருக்காவது இருக்கிறதா?

எல்.ஐ.சி நிறுவனத்தை சீரழிக்கக் கூடிய இன்சூரன்ஸ் சட்டத்தை ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து விட்டு மோசடியாக நிறைவேற்றி விட்டு எல்.ஐ.சி நிறுவனத்திடமே கையேந்தி நிற்பதற்கு அருண் ஜெய்ட்லிக்கோ இல்லை சுரேஷ் பிரபுவிற்கோ கொஞ்சம் கூட வெட்கம் என்பதே கிடையாதோ?

இன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதன அளவை உயர்த்தினால் கோடி கோடியாக டாலர்கள் கொட்டும் என்று சொல்லி பன்னாட்டு இன்சூரன்ஸ் கம்பெனிகள் இந்திய மக்களின் சேமிப்பை சுருட்டிக் கொண்டு ஓடத்தானே இவர்கள் சட்டம் இயற்றினார்கள்!

அந்த தனியார் கம்பெனிகளிடம் ரயில்வே துறைக்காக நிதி கேட்டு அருண் ஜெய்ட்லி திருவோடு ஏந்தியிருக்கலாமே! இந்த ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை இவர் கேட்டால் தனியார் நிறுவனங்கள் கொடுத்திருக்க மாட்டார்களா?

கொடுப்பார்கள். கிரி படத்தில் வடிவேலுவிற்கு கொடுத்தார்களே, அதை வேண்டுமானால் கொடுத்திருப்பார்கள்.

பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் மட்டுமே கட்டமைப்பிற்கான நிதியை வழங்க முடியும். அவர்கள் மட்டும்தான் தருவார்கள். தனியாரிடமிருந்து பத்து பைசா கூட வராது. இது மோடி வகையறாக்களுக்கும் நன்றாகத் தெரியும்.  

ஆசை வெட்கமறியாது என்பார்கள்.
அது போல துரோகமும் வெட்கமறியாது.

அதனால்தான் எல்.ஐ.சி க்கு துரோகம் இழைத்துக் கொண்டே எல்.ஐ.சி யிடமிருந்து நிதியும் வாங்கிக் கொள்கிறார்கள்.

4 comments:

  1. அருமையான - தேவையான - பதிவு தோழரே.
    நானும் இதுபற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறேன். ஆனால், நக்குற நாய்க்கு செக்கு என்ன சிவலிங்கம் என்ன என்றிருப்பவர்களை என்ன செய்ய? http://valarumkavithai.blogspot.com/2015/03/blog-post.html

    ReplyDelete
  2. Dear Sir

    Can you explain how the new insurance bill affect the LIC. no idea about this. increasing 49% means in private sector only . i understood. that mean it may create new insurance companies or injecting to existing companies. but still i am continuing the LIC how i can affect. pl explain. (seems to be something wrong. but no idea how!)

    Seshan / Dubai

    ReplyDelete
  3. வெட்கக்கேடு!

    ReplyDelete
  4. வேதனை விஷயம். இப்படியெல்லாம் நாட்டின் வளத்தை வீண் செய்து இவர்கள் என்ன அடைய போகிறார்கள்.
    சற்று கூட நினைத்து பார்க்க மாட்டார்களா ? இப்படி மற்றவர் செய்தால் எப்படி எல்லாம் கூச்சல் போடுவார்கள் ?
    முழு அதிகாரம் எப்படி எல்லாம் இவர்களை ஆட்டி வைக்கிறது ?

    ReplyDelete