Wednesday, March 25, 2015

பாதாம் (அல்வா)????????????





சமையலறைக்குச் சென்று நாளானதால் பாதாம் அல்வா தயாரிக்கலாம் என்று திட்டமிட்டு முதல் நாளே பாதாம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்தேன்.

மறு நாள் காலை பாதாமின் தோலை உரித்து அதோடு கொஞ்சம் பால் சேர்த்து மிக்ஸியில் அறைத்து வைத்துக் கொண்டேன்.

பின்பு சர்க்கரைப் பாகு வைத்து அதிலேயே கேசரி பௌடரையும் போட்டு பாகு நன்றாக பொங்கி வரும் வேளையில் அறைத்து வைத்த கலவையையும் போட்டு நன்றாக கிளறி அவ்வப்போது நெய் ஊற்றி நன்றாக அல்வா பதம் வந்ததும் ஏலக்காய் பொடி சேர்த்து அடுப்பை விட்டு இறக்கி விடவும்.

அழகாக கப்பில் போட்டு பறிமாறுங்கள் பாதாம் அல்வாவை.


இப்படி முடித்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்.

ஆனால் வலைப் பக்கத்திற்காக படம் எடுக்கும் சம்பிரதாயங்கள் முடிந்து பார்த்தால் அல்வா கெட்டித்தட்டி இறுகிப் போயிருந்தது.

கொஞ்சம் சிரமப்பட்டு கேக் போன்ற வடிவத்திற்கு கொண்டு வந்து சமாளித்தாகி விட்டது.


அது சரி. நான் கேக் செய்ய முயற்சி செய்தால் அது அல்வா போல வந்து விடுகிறது. அல்வா செய்ய நினைத்த போதோ அது கேக் வடிவத்தில் வந்து விட்டது.

இதற்கெல்லாம் நாம் சளைத்து விடுவோமா என்ன?

சரியாக வரும்வரை தொடர்ந்து கொண்டே இருக்கும் சோதனைகள்.

4 comments:

  1. இந்த ஒரே காரணத்துக்காகத் தான் சமைத்தபின் தான் அதற்க்கு பெயர் வைப்பது என்று உறுதியாக இருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. நம்ம கதைதானா? ஆனாலும் பந்து சார், சொதப்பலுக்காக கவலைப்படாம மறுபடியும் முயற்சி பண்றதில உள்ள த்ரில்லே தனி

      Delete
  2. //சரியாக வரும்வரை தொடர்ந்து கொண்டே இருக்கும் சோதனைகள்.//

    அதே தான் வய்க்கு சுவையானதை கொண்டுவரும்

    ReplyDelete
  3. அருமை! ஸ்பூனால் எடுத்துச் சாப்பிடுவதைவிட இந்த கேக் பதம்தான் எனக்குப் பிடிக்கும்.

    சக்கரை அளவு கொஞ்சம் கூடிப்போச்சுன்னு நினைக்கிரேன்.

    ReplyDelete