Monday, March 2, 2015

மோடி சொன்னா கேட்கனுமா? முடியாது எனும் காவிக் கூட்டம்

மத மோதல்களை தூண்டி விடும் பேச்சுக்களை எனது அரசு சகித்துக் கொள்ளாது என்று மோடி வீர வசனம் பேசியவுடன் 'போய்யா பொழப்பைப் பாத்துக்கிட்டு" என்பது போல குருமகாசன்னிதானம் மோகன் பகவத்  அன்னை தெரசா மீது விஷம் கக்கினார்.

தேசத்தின் வளர்ச்சிதான் எனது மதம் என்று வெள்ளிக்கிழமையன்று மீண்டும் மோடி திருவாய் மலர்ந்தார். 

உடனடியாக ஞாயிறு அன்று விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பொதுச் செயலாளராக இருக்கிற சுரேந்திர ஜெயின் என்பவர் உதிர்த்துள்ள முத்துக்களை கீழே பாருங்கள்.



"முஸ்லீம்களுக்கு மரியாதை வேண்டுமென்றால் அவர்கள் ஹிந்துவாக மதம் மாற வேண்டும்.

முஸ்லீம்களுக்கு வாழ்க்கை வேண்டுமென்றால் அவர்கள் ஹிந்து சாமியார்களை பணிந்து வணங்க வேண்டும்"

எப்படிப் பட்ட சாமியார்களை?

சாத்வி பிராச்சி போன்ற சாமியார்களையா?

நான் ஏன் இந்த சாமியாரின் பெயரை சொல்கிறேன் என்றால் அந்த போலிச்சாமியார் நேற்று அவர் பங்குக்கு கொஞ்சம் முத்துக்களை உதிர்த்துள்ளார்.


அது

"ஹிந்துக்கள் அமீர் கான், ஷாருக்கான், சல்மான் கான் போன்ற முஸ்லீம் நடிகர்களின் படங்களை பார்க்காமல் புறக்கணிக்க வேண்டும்"

இந்த முத்து உதிர்த்தல் நிற்கப் போவதில்லை. தொடரத்தான் போகிறது. இதற்கு இரண்டு காரணம்தான் உண்டு.

ஒன்று மோடி சொன்னது சும்மா நடிப்பிற்குத்தான்.

இல்லையென்றால்

மோடி என்ன பெரிய இவரா? அவரு சொன்னா நாங்க கேட்கனுமா என்று காவிக்கூட்டம் அவரை ஒரு மனிதராகக் கூட தயாராக இல்லை.

இரண்டில்  ஒன்றா இல்லை இரண்டுமேவா என்பது அவர்களுக்குத்தான் தெரியும்.

 

2 comments:

  1. வேதனையாக இருக்கிறது நண்பரே
    இந்த விஞ்ஞான யுகத்தில் இப்படியா...........

    ReplyDelete