
இரண்டு வருடங்களுக்கு முன்பாக குமுதத்தில் வந்த ஒரு செய்தியை பதிவு செய்திருந்தேன். அந்த சுவாரஸ்யமான தகவலை இந்த இணைப்பில் சென்று படியுங்கள்
செவ்வாய் கிழமையன்று வாணியம்பாடி சென்றிருந்த போது பேருந்தில் லிங்கா திரைப்படம் ஒளிபரப்பினார்கள். பாதி மட்டுமே பார்த்த அந்த படத்தைப் பற்றி இப்போது எழுதினால் அடிக்க வந்து விடுவீர்கள்.
ஆனாலும் கூட ராதாரவி ரஜனியிடம் வேலைக்குச் சேரும் தன் மகளிடம் "இந்த கிராமத்திலேயே அதிகம் படித்த பெண் என்ற திமிர் மட்டுமே உனக்கு எப்போதும் வரக்கூடாது" என்று சொன்ன போது முந்தைய பதிவில் பேசப்பட்ட விஜயகாந்த் அலுவலக ரகசியம் நினைவிற்கு வந்து விட்டது.
இயக்குனர் ஆர்.சுந்தரராஜனும் லிங்கா படத்தில் நடித்துள்ளதால் ஒருவேளை அவர் விஜயகாந்த் அலுவலக ரகசியத்தை வசனமாக இணைக்க வைத்திருப்பாரோ?
No comments:
Post a Comment