Friday, February 20, 2015

குவார்ட்டரும் பிரியாணியும் இல்லாமலேயேகீழே உள்ள புகைப்படங்கள் எல்லாம் நேற்று சென்னையில் நிறைவுற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ன் 21 வது மாநில மாநாட்டு பொதுக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். ராயப்பேட்டை வொய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்த்த பின்பு பதிவிற்கு அவசியம் வரவும்.ஆயிரக்கணக்கான கட்சி உறுப்பினர்கள் மாநிலம் முழுதிலிருந்தும் வந்து திரண்ட காட்சியை நீங்கள் இப்புகைப்படங்களில் பார்க்கலாம். இந்த புகைப்படங்களில் இருப்பது வந்த தோழர்களில் ஒரு பகுதியினர்தான். காவல்துறை பேரணிக்கு அனுமதி மறுத்த காரணத்தால் அனைவரும் ஒரே நேரத்தில் மாநாட்டுத் திடலுக்கு வந்து சேரும் வாய்ப்பு தடைபட்டு விட்டது.

பிரம்மாண்டமான அந்த மைதானம் நிரம்பி வழிந்ததால் பலர் வருவதும் அதே நேரம் அதே அளவில் புறப்படுவதுமான நிகழ்வு நடந்து கொண்டே இருந்தது. இத்தனை ஆயிரம் தோழர்கள் சங்கமித்தாலும் கொஞ்சம் கூட தள்ளுமுள்ளு இல்லாமல் அமைதியாக இருந்தனர் என்பது மார்க்சிஸ்ட் கட்சிக்கே உள்ள ஒரு பெருமை.

இதை விட மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மாநிலம் முழுதிலிமிருந்து வந்த கட்சித் தோழர்கள் தங்கள் சொந்தக் காசை செலவழித்து வந்தவர்கள். குவார்ட்டர் பாட்டில் (இப்போது சில கட்சிகளில் ஹாப் என உயர்ந்து விட்டதாம்) தருகிறோம், பிரியாணி தருகிறோம் என்றெல்லாம் ஆசை வார்த்தை சொல்லி அழைத்து வரப்பட்ட கூட்டமல்ல.

தலைவர்களுக்காக இல்லாமல், தனி நபர்களுக்காக இல்லாமல் கட்சியின் மீதும் அதன் கொள்கைகள் மீதும் உள்ள பிடிப்பின் காரணமாக வந்த இத்தோழர்கள் இருக்கும்வரை இடதுசாரிகளுக்கு என்றும் அழிவில்லை. வாக்குகளை விற்றவர்கள் நிச்சயம் ஒருநாள் நேர்மையானவர்களை நாடி வந்தே தீருவார்கள்.

மகத்தான்  மானுட சமுத்திரத்தின் சிறு துளியின் சிறு பகுதியாக நாங்கள்.

11 comments:

 1. what are you trying to say

  ReplyDelete
 2. நிஜமாக புரியவில்லையா அனானி? இல்லை புரிந்து கொள்ள விரும்பவில்லையா? இல்லை புரியாதது போல நடிக்கிறீர்களா?

  ReplyDelete
 3. Dear Comrates

  ALL ok. but Communist party and family member itself not costing (wasting) their vote on their party....see srirangam less them 2000. where is the crowd from, may be out side TN (why not kerala ?).

  Seshan / Dubai

  ReplyDelete
 4. திரு சேஷன், ஸ்ரீரங்கத்தில் கட்சிக்கு அமைப்பு பலம் கிடையாது. அதிமுக,திமுக போல பணம் செலவழிப்பதைப் பற்றி சிந்திக்கக் கூட முடியாது. ஆனால் அதிமுக, திமுக, பாஜக ஆகிய கட்சிகளுக்கு எதிராக போட்டியிட வேறு எந்த அரசியல் கட்சியும் தயாராக இல்லை. ஒரு ஜனநாயகப் போராட்டமாக மட்டுமே ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டோம். தமிழ மாநில மாநாட்டிற்கு வெளி மாநிலங்களிலிருந்து தோழர்களை கூட்டி வர வேண்டிய நிலையில் நாங்கள் இல்லை என்பதையும் பணிவோடு சொல்லிக் கொள்கிறேன்

  ReplyDelete
 5. அவர்களின் கொள்கை பிடிக்கிறதோ இல்லையோ, கம்யூனிஸ்டுகள் பெரும்பான்மை நேர்மையானவர்கள். எனக்கு நல்லகண்ணு (இ.கம்யூ) நினைவுக்கு வருகிறது. கம்யூனிஸ்டுகளின் தலைவர்களும் எளிமையானவர்களே. அவர்களுக்குக் கூட்டம் குறைவாக இருக்கலாம். ஆனால் அவர்கள் தி.மு.கா, அ.தி.மு.கா போன்று சுரண்டும் கொள்ளைக்கூட்டமல்ல ('நான் அதிமுக ஆதரவாளனாக இருந்தபோதிலும்)

  ReplyDelete
 6. என்னது கம்யுனிஸ்டுகள் நேர்மையானவர்களா? அஞ்சு கோடி வாங்கிட்டு நுட்ரினோ திட்டத்துக்கு சொம்படிக்கற நேர்மையா அது?

  ReplyDelete
 7. பொட்டு வெச்ச (ஆ)சாமிகளும் தென்படுகிறார்களே ? புரட்சியில் கடவுளும் இணைந்து விட்டாரா?

  ReplyDelete
  Replies
  1. மக்களை விட்டு விலகி நிற்பவர்களுக்கு புரட்சி பற்றி பேச அருகதை கிடையாது. கடவுளை நம்புகிறவர்களையும் கம்யூனிஸ்டாக மாற்ற வேண்டும் என்ற புரிதல் எங்களுக்கு உள்ளது. காசு பறிக்கும் ரௌடிகள் கூட்டமாக மாறியுள்ளவர்களை ஆதரிப்பவருக்கு அதெல்லாம் எப்படி புரியும்?

   Delete
 8. அப்புறம் இன்னொன்று அந்த ஆண் பெண் சிலைகளின் தோல் ஏன் இவ்வளவு வெள்ளையாக இருக்கிறது உழைத்து களைத்தவர்களின் தோல் கருப்பாகத்த்தான் இருக்குமே ஒ புரிகிறது புரிகிறது இவர்கள் அந்தத் தொழிலாளிகளை வழி நடத்தும் (சுரண்டும்? ) தலைவர்கள் அல்லவா ?

  ReplyDelete
  Replies
  1. வெள்ளை நிறத்தைப் பார்த்தால் ஏன் இவ்வளவு வெறி? இதற்கு முன்பும் இப்படி அபத்தமாக உளறியிருந்தீர்கள்

   Delete
 9. வாருங்கள் எழில், உங்கள் வக்கிர புத்தியோடும் வன்மத்தோடும். முதலாளித்துவ ஊடகங்களே சொல்ல முடியாத அபாண்டமான குற்றச்சாட்டை சொல்லியுள்ளீர்கள். கொஞ்சம் ஆதாரத்தை தர முடியுமா? கஞ்சா விற்பனை செய்து, ஆள் கடத்தி காசு பறித்து, கார்ப்பரேட்டுகளிடம் மாமூல் வசூலிக்கும் கூட்டத்தை ஆதரிக்கும் உங்கள் காமாலைக் கண்ணிற்கு அப்படித்தான் தோன்றும். உங்களின் மற்ற பின்னூட்டங்கள் வெறும் வக்கிரக் குப்பை. அதற்கு பதில் அவசியமில்லை

  ReplyDelete