Thursday, February 26, 2015

எழுத்தாளன் என்றால் அடிப்பார்களா?

"மாதொரு பாகன்" நாவலை முன்வைத்து எழுத்தாளர் பெருமாள் முருகன் மீது மன ரீதியான தாக்குதல் நடத்திய பிற்போக்கு சக்திகள் அடுத்த கட்டமாக புலீயூர் முருகேசன் மீது நேரடியாக  அடிதடி தாக்குதலே நடத்தியுள்ளனர். 

வழக்கம் போல காவல்துறை ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாகவே வால் பிடித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வன் பகிர்ந்து கொண்ட தகவலை இங்கே பதிவு செய்துள்ளேன்.

தமிழகத்தில் அரசு என்று ஒன்று இருக்கிறதா? கோதானம் செய்வதும் தங்கத்தேர் இழுப்பதும் கேக் வெட்டி தின்பதும்தான் அமைச்சர்களின் வேலையாகிப் போன ஒரு ஆட்சியில் எழுத்தாளர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கிளம்பியுள்ள கூட்டத்திற்கு எதிராக கண்டனம் முழங்குவோம்.

அரசே உறக்கத்தைக் கலைத்து உருப்படியாக நடவடிக்கை எடு என்று குரல் கொடுப்போம்.

 
எழுத்தாளர் புலியூர் முருகேசன் மீது கொலை வெறித் தாக்குதல்...

நேற்று மாலை கரூரை அடுத்த பசுபதிபாளையத்தில் எழுத்தாளர் முருகேசன் தாக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததும் கரூர் தமுஎகச மாவட்டச் செயலாளர் பழ.நாகராஜனை தொடர்பு கொண்டோம். அவர் உடனடியாக பசுபதிபாளையம் காவல்நிலையம் சென்று விசாரித்தபோது, "அப்படி ஒன்றும் சம்பவம் இல்லை" என பதில் கூறியுள்ளனர். பின்னர் தொடர்ந்து ஊரில் விசாரித்தபோது, கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், முருகேசனின் புத்தகம் தங்கள் சமூகத்தை இழிவு படுத்துவதாகச் சொல்லி மறியல் செய்துள்ளனர். மறியல் முடித்து இருபது பேர் கொண்ட கும்பல் முருகேசன் வீடு புகுந்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பின்னர் அவரைக் காரில் தூக்கிப் போட்டுச் சென்று வெளியில் வைத்து "நாங்க தனியரசு கட்சிக்காரங்க, உண்ணக் கொல்லாம விடமாட்டோம்." என்று சொல்லி அடித்துள்ளனர்.

அவர்கள் போட்டுவிட்டுப் போன பிறகு, முருகேசன் காவல் நிலையம் சென்றிருக்கிறார். "ஒரு நாலு பேர் வந்து தாக்கியதாக புகார் கொடுங்கள்" என காவல்துறையினர் கூறியுள்ளனர். பின்னர், "பிரஸ் கிளப் சென்று முறையிட்ட பின் நடந்ததை எழுதிக் கொடுங்கள்" ஏற்கிறோம் என்று சொல்லியுள்ளனர். இரவு தனியார் மருத்துவமனையில் வைத்திருந்துவிட்டு பத்து மணிக்கு மேல், அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தனியார் மருத்துவமனைக்கு நமது தமுஎகச மாவட்டச் செயலாளர் சென்று விசாரித்தபோது "அப்படி யாரும் அனுமதிக்கப்படவில்லை" எனச் சொல்லி அனுப்பிவிட்டனர். கரூர் சிபிஎம் மாவட்டச் செயலாளர் கந்தசாமி விசாரித்ததில் "எழுத்தாளருக்குப் பாதுகாப்பு கருதி பத்திரமான இடத்தில் வைத்திருக்கிறோம்" எனக் காவல்துறை சொல்லியிருக்கிறது.

சிபிஎம் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் சென்னையில் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் இன்று காலை பேசி முறையாக வழக்கைப் பதிவு செய்ய வற்புறுத்தலாம் என்று சொன்னார். முருகேசனிடம் நானும் பேசினேன். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜும் பேசினார். அப்போது அவர், "சாதிய சக்திகளை எதிர்த்து உறுதியாகப் போராடுவோம். நான் பின் வாங்க மாட்டேன். இவர்களுக்கு அடிபணிய மாட்டேன்." என உறுதியான குரலில் பேசினார்.

இனி நமக்குத்தான் கடமை இருக்கிறது. தமிழகம் முழுவதும் கண்டனம் முழங்க வேண்டும்.
Bottom of Form





10 comments:

  1. இதற்கு என்ன வழி என்று தெரியவில்லையே?

    ReplyDelete
  2. Total waste of time.Why worry?

    ReplyDelete
  3. முருகேசனிடம் நானும் பேசினேன்'
    yenna thozal pesineergal?
    '

    ReplyDelete
    Replies
    1. நக்கலா ஏதாவது பின்னூட்டம் போட வேண்டும் என்பதை பிழைப்பாகக் கொண்டுள்ள அரை வேக்காடு அனானி, ஒழுங்காகப் படியுங்கள். நான் பேசினேன் என்றா சொல்லியுள்ளேன்?

      Delete
  4. கண்டனத்திற்கு உரிய செயல்

    ReplyDelete
    Replies
    1. அடுத்த வீட்டு பெண்ணை அசிங்கமாக எழுதினால் எழுத்தாளானாய் இருந்தாலும் உதைக்கத் தான் செய்வார்கள்

      Delete
    2. அடுத்த வீட்டுப் பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கியவர்கள் மீது இது போன்ற கோபம் வந்ததுண்டா? மஞ்சள் பத்திரிக்கைகளை விட கேவலமாக பல புத்தகங்கள் வந்து கொண்டிருக்கிறதே, அவற்றுக்கு எதிராக பொங்கியதுண்டா? திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் பெண்கள் இழிவு படுத்தப்படுத்தப் படுகின்றீர்களே அவற்றை எதிர்த்துள்ளீர்களா? போலிச்சாமியார்கள் பெண்களை மயக்கி மானபங்கப் படுத்துகின்றனரே, அவர்களை என்ன செய்துள்ளீர்கள்? இணைய தளங்களில் பெண்களின் படங்களை ஆபாசமாக வெளியிடுகிறார்களே, அவர்களை என்ன செய்யப் போகின்றீர்கள்? சமூகத்தில் எவனும் எதுவும் எழுதக் கூடாது என்ற வெறி பிடித்த கூட்டத்தினைச் சேர்ந்தவரா நீங்கள்? யாரையாவது குறிப்பிட்டு எழுதியிருந்தால் புகார் கொடுங்கள், அதை விட்டு அடிதடி நடத்த உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. நான் ஒருவன் பெயரைச் சொல்லக் கூட தைரியமில்லாத ஆளிடம் போய் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

      Delete
  5. http://www.tamil.chellamuthu.com/2015/02/blog-post_26.html

    kindly read this sir,

    ReplyDelete

  6. we have to do something to stop this non sense. You are very great. Thank you for sharing.

    ReplyDelete