Friday, March 14, 2025

எரியுதா சங்கிகளா?

 


தமிழ்நாடு அரசு அப்படியொன்றும் புரட்சிகரமான நடவடிக்கை எதுவும் எடுத்து விடவில்லை.



மேலேயுள்ள செய்தியில் சொல்லப்பட்டது போல இலச்சினையில் ரூபாய் என்பதன் அடையாளம் மாற்றப்பட்டுள்ளது.

இதற்கே சங்கிகள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைக்கிறார்கள். தாங்கள் எப்போதும் தமிழ் விரோதிகள் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படியே சங்கிகள் தங்களை அசிங்கப்படுத்திக் கொள்ளட்டும்.

பிகு: மேலே உள்ள படத்தை வரைந்தது தோழர் ரவி பாலட்

Thursday, March 13, 2025

"கறை" நல்லது, விளம்பரமும் . . .

 


ஹோலிப் பண்டிகையை முன்வைத்து சங்கிகள் தாங்கள் ஆளும் மாநிலங்களில் இஸ்லாமியர்கள் மீது புதிய அச்சுறுத்தல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். கலவரத்தீக்கு அடி கோலுகிறார்கள் காவிக் கயவர்கள். 

இப்படிப்பட்ட சூழலில் சர்ப் வெளியிட்டுள்ள புதிய விளம்பரம் மிகவும் சிறப்பாக உள்ளது, ஒற்றுமையை வலியுறுத்துகிறது.



பாருங்கள், பரப்புங்கள், அமைதியை நாம் விதைத்துக் கொண்டே இருப்போம் . . .



கிறுக்கனிடம் சிக்கிக் கொண்டு . . .

 


உக்ரைன் ரஷ்யா மீதான போரை நிறுத்த வேண்டும். உக்ரைனுக்கு இனி ஆயுத சப்ளை கிடையாது,  அமெரிக்கா இதுவரை செய்த உதவிக்கு மாற்றாக உக்ரைன் தன் கனிம வளத்தை கொடுத்து விட வேண்டும் என்றெல்லாம் ட்ரம்ப் சொல்லிக் கொண்டிருந்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படை வெளியேறும் என்ற அறிவிப்பிற்கே பாரக் ஒபாமா நோபல் அமைதி விருது பெற்றது போல ட்ரம்பிற்கும் ஆசை போல என்று நினைத்திருந்தேன்.

அப்படியெல்லாம் எதுவும் கிடையாது என்பதை இன்றைய செய்தி உணர்த்தி விட்டது. அமெரிக்கா உக்ரைனுக்கு மீண்டும் ஆயுத சப்ளையை தொடங்கி விட்டது.

அப்பறம் என்ன?

போர்தான்! அழிவுதான், மறு கட்டமைப்புதான், அதுக்கான டீலிங்தான்.

ஒரு கிறுக்கனிடம் சிக்கிக் கொண்டு உலகமே தவிக்கிறது . . .

Wednesday, March 12, 2025

பாம்பிற்கு பால் வார்க்கும் திமுக

 


"மாற்றோரும் போற்றும்" என்ற தலைப்பில் தமிழக அமைச்சர் மா.சுப்ரமணியன் முதல்வரின் பிறந்த நாள் விழா கூட்டம் நடத்தியுள்ளார். 

இன்றைய மாநில அரசுக்கு எதிரான கட்டுக்கதைகளை தீவிரமாக பரப்பி வரும் சங்கி ரங்கராஜ் பாண்டேவை அந்த விழாவில் பேச அமைச்சர் அழைத்துள்ளார்.

தான் செய்வது என்னவென்று அறிந்து செய்தாரா என்று தெரியவில்லை. ஒரு நச்சுப்பாம்புக்கு தன் மேடையில் இடம் கொடுத்தால் அது அங்கேயும் நச்சைத்தான் கக்கும் என்ற புரிதல் கூட இல்லையா அல்லது அவருக்கு பாண்டே மூலம் ஏதேனும் டீலிங் உள்ளதா? 

ரங்க்ராஜ் பாண்டேவை அழைத்துப் பேச வைத்தால் அவர் திமுக மீது கடுமை காண்பிக்க மாட்டார் என்று தப்புக் கணக்கு போட்டிருந்தால் அதை விட மூடத்தனம் ஏதுமில்லை.

இன்று மட்டும் பாண்டே, சாணக்யா ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ள பதிவுகளில் சில . . .




இது மட்டுமா, சாண்க்யாவின் ஆண்டு விழாவிற்கு அழைக்கப்பட்டவர்கள் யாரென்று பாருங்கள்.



அனைவருமே திமுகவிற்கு எதிரானவர்கள். நீங்கள் அவரை அழைத்தீர்கள். அவர் உங்களை கண்டுகொள்ளவில்லை. அந்த விழாவே உங்களுக்கு எதிராகத்தான் இருக்கும்.

இதெல்லாம் முதல்வருக்கு தெரியுமா?

திமுகவில் வளர்ந்துள்ள களைகளை நீக்காவிட்டால் அது 2026 ஐ வெகுவாக அழித்து விடும். 






Tuesday, March 11, 2025

நாகரீகம் எது? அருமை சு.வெ

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெம்கடேசன் இன்று மக்களவையில் நிகழ்த்திய உணர்ச்சிகரமான உரை.

சங்கிகளுக்கு வெ.மா.சூ.சொ.ரோ இருந்தால் தூக்கில் தொங்குவார்கள். அது எதுவும் இல்லையென்பதால்தான் நாலு கால் ஜந்துகளாக திரிகிறார்கள்.

காணொளியை முழுமையாக பாருங்கள். அதில் வெடிக்கும் கோபத்தை பார்க்க தவறாதீர்கள்.



பட்டினி போட்டாலும் பணியாத தன்மானமும் , பகுத்தறிவும் கொண்ட தமிழ்சமூகம் உங்களுக்குப் பாடம் புகட்டும்

ஒன்றிய நிதிமானியக் கோரிக்கையில் எனது உரை ;
மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே ,
வணக்கம் .
எனக்கு முன்னால் குறுக்கீடு செய்து பேசிய மாண்புமிகு அமைச்சர் பியூஸ் கோயல் அவர்கள் இந்தியை எதிர்த்தால் அது இந்தியாவை எதிர்ப்பது என்று அவர் கூறினார். இந்தித் திணிப்பை எதிர்த்தால் தான் அது இந்தியாவைப் பலப்படுத்துவது என்பதை அமைச்சருக்கு அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
இந்தியா ஹிந்தியா அல்ல ; எல்லா மொழிகளினுடைய சமத்துவத்தில் தான் இந்தியா நிற்கிறது. காசி தமிழ்ச் சங்கத்திற்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை , கல்விக்கு காசு கொடுங்கள் என்று கேட்டால் அது புரியாத உங்களுக்கு , எந்தத் தாய்மொழியின் அருமையும் புரியப் போவதில்லை. கல்வியின் அருமையும் புரியப் போவதில்லை.
கூட்டாட்சியின் மீதான தாக்குதல் தான் நவ பாசிசத்தினுடைய கூறு. நாங்கள் நீங்கள் கொடுத்த அறிக்கையில் இருந்து சொல்கிறோம். நிதி அயோக்கின் அறிக்கை வறுமை ஒழிப்புத் திட்டத்தில் முன்மாதிரியாக இருக்கிற முதல் மாநிலம் தமிழ்நாடு என்று சொல்கிறது. உங்களது பொருளாதார அறிக்கையில் மனிதவளத்தைப் பெருக்குவதில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று சொல்கிறது. நீங்கள் கொடுத்திருக்கிற அறிக்கையில் டெக்ஸ்டைல் ஏற்றுமதியில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று சொல்கிறது.
உயர்கல்வி துவங்கி பொது சுகாதாரம் வரை தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் நாங்கள் கொடுக்கிற 1 ரூபாய் வரிக்கு நீங்கள் திருப்பிக் கொடுப்பது வெறும் 29 பைசா மட்டுமே என்பது எவ்வளவு அவலமானது . ஆனால் பீகார் செலுத்துகிற 1 ரூபாய் வரிக்கு 7 ரூபாய் திருப்பிக் கொடுக்கிறீர்கள். உத்தரப் பிரதேசம் கொடுக்கிற 1 ரூபாய் வரிக்கு 1.75 ரூபாய் திருப்பிக் கொடுக்கிறீர்கள் . இப்படி திருப்பிக் கொடுக்கிற எங்கள் உரிமையைக் கேட்டால் , நீங்கள் எங்கள் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறீர்கள்.
நிதியில் , கல்வியில் , ஆட்சி நிர்வாகத்தில் என எல்லா முனைகளிலும் கூட்டாட்சியைத் தாக்குகிறீர்கள். மாநிலங்களைப் பட்டினி போட்டு பணிய வைக்கிறீர்கள். பட்டினி போட்டு பணிய வைக்கும் உங்களது அதிகாரத்திற்கு எதிராக நிமிர்ந்து நிற்பவர்களை நாகரிகமற்றவர்கள் என்று சொல்கிறீர்கள். நீங்கள் பயன்படுத்திய வார்த்தையை நீங்களே திரும்பப் பெறுகிறீர்கள் என்றால் , எவ்வளவு நாகரிகமற்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்தினீர்கள் என இப்போதாவது நீங்கள் உணர்கிறீர்களா என்று நாங்கள் கேட்கிறோம். நீங்கள் அந்த வார்த்தையைத் திரும்பப் பெற்ற பிறகும் தமிழ்நாட்டிலே இருக்கிற ஒரு ஒன்றிய அமைச்சர் உங்களது பேச்சை ஆதரிக்கிறார் என்றால் , இது தான் நாகரிகமா என்று நாங்கள் கேட்க நினைக்கிறோம்.
கல்வி அமைச்சகத்தின் கீழே வருகிற ஐஐடியின் இயக்குநர் மாட்டு மூத்திரம் குடிக்கச் சொல்கிறார் , அது நாகரிகமா எனக் கேட்க உங்களால் முடியவில்லை . கல்விக்குக் காசு கேட்டால் எங்களைப் பார்த்து நாகரிகமா என்று நீங்கள் எங்களைக் கேட்கிறீர்கள் .
அதேபோல இந்தியர்களைக் கைவிலங்கிட்டு அனுப்பி வைத்தது அமெரிக்கா. அதன் மீது கோபம் வரவில்லை. அதற்கு எதிராக கார்ட்டூன் போட்ட ஆனந்த விகடன் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்கிறீர்கள். இது நாகரிகமா என்று உங்களைப் பார்த்து நாங்கள் கேட்கிறோம்.
மூன்று வருடமாகப் பற்றி எரிகிறது மணிப்பூர். ஒருமுறை கூட பிரதமர் போகவில்லை. ஒருமுறை கூட போகாத பிரதமர் இருக்கிற ஒரு அவைக்கு மணிப்பூரின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறீர்களே ? இது நாகரிகமா என்ற கேள்வியை உங்களிடம் நாங்கள் கேட்க விரும்புகிறோம்.

இதே அவையில் 543 உறுப்பினர்கள் இருக்கிறோம். ஆனால் 848 இருக்கையை இந்த அவையிலே நீங்கள் அமைத்திருக்கிறீர்கள். உங்களது மறைமுக சதித்திட்டத்திற்காக தென் மாநிலங்களின் உரிமையை நசுக்க நினைக்கிற உங்களின் சதிக்கு எதிராக இன்றைக்குத் தமிழ்நாடும் , தமிழ்நாட்டின் முதலமைச்சரும் , தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் இன்றைக்கு ஓரணியில் நிற்கிறார்கள். தென்மாநிலங்களுக்கு நீங்கள் இழைக்கிற வஞ்சகத்திற்கு எதிராக இந்தியாவின் கூட்டாட்சியைக் காப்பதற்கு நாங்கள் உறுதி பூண்டிருக்கிறோம்.

அதேபோல இதே அவையில் நீங்கள் தாக்கல் செய்திருக்கிற இந்த நிதி நிலை அறிக்கையில் சிறு , குறு தொழில்களுக்கு மிக அதிகமான வட்டி. ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு மிக அதிகமான வரிவிலக்கு. உங்களது வரிக்கொள்கையை ஒரு வரியில் விளக்குவதற்கு இது ஒன்றே போதுமென்று நினைக்கிறேன். அதேபோல கடந்த மூன்று மாதமாக MNREGA திட்டத்திற்கு கொடுக்க வேண்டிய தொகையை ஒன்றிய அரசு விடுவிக்க மறுக்கிறது. எங்களது மதுரை மாவட்டத்தில் மட்டும் 121 கோடி ரூபாய் உழைத்த மக்களுக்கான கூலியை நிறுத்தி வைத்திருக்கிறார் பிரதமரும் , நிதி அமைச்சரும் என்ற குற்றச்சாட்டை இந்த அவையிலே நாங்கள் முன்வைக்க விரும்புகின்றோம்.
அதேபோல இன்றைக்கு மும்மொழிக் கொள்கையைக் கடைபிடித்தால் தான் தமிழ்நாட்டின் கல்வித் துறைக்குக் கொடுக்க வேண்டிய 2500 கோடியை விடுவிப்போம் என்று கல்வி அமைச்சர் சொல்கிறார். பட்டினி போட்டு பணிய வைக்க முடியும் என்று அதிகார வர்க்கம் நினைத்தால் , பட்டினி போட்டாலும் பணியாத தன்மானமும் , பகுத்தறிவும் கொண்ட தமிழ்சமூகம் உங்களுக்குப் பாடம் புகட்டும். கொடுப்பதால் மட்டுமே நீங்கள் உயர்ந்தவர்கள் , பெறுவதால் மட்டுமே நாங்கள் தாழ்ந்தவர்கள் அல்ல. அரசியல் சாசனத்தை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதை தமிழ்நாடு மீண்டும் மீண்டும் புரிய வைக்கும்.

Monday, March 10, 2025

பெருமையில்லை, ஆணவம், திமிர்


 நேற்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா வென்றுள்ளது. 

அது தொடர்பாக சங்கிகள் பலரும் பகிர்ந்து கொண்டுள்ளது கீழே உள்ளது. 

கடந்த ஆண்டு இந்தியா நடத்திய உலகக் கோப்பை போட்டியில் விளையாட பாகிஸ்தான் இந்தியா வந்தது. அதிலும் முதல் போட்டி மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. குஜராத் சங்கிகள் பாகிஸ்தான் வீரர்களை வெறுப்பேற்ற கீழ்த்தரமாக நடந்து கொண்டதையும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இப்போது பாகிஸ்தான் நடத்தும் போட்டியில் விளையாட இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுக்கிறது. அதனை கண்டிக்க யாரும் தயாரில்லை, பாகிஸ்தான் உட்பட. பல நாடுகள் பாகிஸ்தானிலிருந்து துபாய் வந்து இந்தியாவோடு விளையாடி விட்டு சென்றன.

சேர்த்து வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தைக் கொண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தை ஆட்டி வைப்பது பல ஆண்டுகளாக நடக்கும் கதை. போதாக்குறைக்கு  கிரிமினல் ஷா மகன் ஜெய்ஷா இப்போது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர்.

அதனால் இந்தியா என்ன அராஜகம் செய்தாலும் எல்லா நாடுகளும் அமைதியாகத்தான் இருக்கும்.

இந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டு இந்திய அணி பாகிஸ்தான் செல்லாமல் இருந்தது என்பது பெருமைக்குரிய விஷயம் இல்லை. ஆணவம், திமிர். அவ்வளவுதான்.

 ஒரிஜினலாக இவர்கள் பீற்றிக் கொண்ட துல்லிய தாக்குதலே ஒரு ஏமாற்று வேலை என்கிற போது, இந்த திமிரை துல்லிய தாக்குதல் என்று வர்ணிப்பது அசிங்கத்தின் உச்சம். 

Saturday, March 8, 2025

கண்ணப்பர் கதை தெரியுமா காவிக்கயவர்களுக்கு?

 



பன்றிக்கறிக்காக சிவபெருமான் அர்ஜுனன் சண்டை போட்ட காதையை  இரண்டு நாட்கள் முன்பு எழுதியிருந்தேன். அதை விட ஸ்பெசல் ஐட்டம்  ஒன்று உள்ளது. சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் இடம் பெற்ற சம்பவம் இது.

 

திண்ணன் எனும் வேடர் குலத்தலைவன் மலையில் ஒரு சிவலிங்கத்தைப் பார்க்கிறான். பார்த்தவுடன் பிடித்துப் போகிறது. அங்கே வரும் அர்ச்சகர் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து மலர்கள் சூட்டி நிவேத்யம் படைப்பதை பார்க்க, தானும் அது போல தன் மனம் கவர்ந்த லிங்கத்திற்கு வழிபாடு செய்ய விரும்புகிறான்.

 

அந்த காட்டில் கிடைக்கும் வில்வ இலைகளோடு தீயில் வாட்டிய பன்றிக் கறியோடு, பாத்திரம் ஏதுமில்லாததால் அருவி நீரை தன் வாய்க்குள் சேகரித்து சென்று அர்ச்சகர் போலவே அபிஷேகம்  செய்து வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து பன்றி இறைச்சியை படைக்கிறான்.

 

மறுநாள் அர்ச்சகருக்கோ அதிர்ச்சி

 

அனைத்தையும் சுத்தம் செய்து அவர் வழக்கம் போல வழிபடுகிறார். இரவு திண்ணன் தன் பாணியில் வழிபடுகிறான்.

 

பொறுமையிழந்த அர்ச்சகர் சிவனிடம் முறையிட அன்றைய இரவு நடப்பதை ஒளிந்திருந்து பார்க்கச் சொல்கிறார்.

 

திண்ணன் வர அவனுடைய பூஜைகள் முடிகிறது. அப்போது சிவ லிங்கத்தை பார்த்தால் லிங்கத்தின் கண்ணிலிருந்து ரத்தம் வடிகிறது. பச்சிலைகள் கொண்டு வந்து பிழிந்தாலும் நிற்கவில்லை.  அதனால் அம்பு கொண்டு தன் ஒரு கண்ணை பிடுங்கி ரத்தம் வந்த கண்ணில் வைக்க ரத்தம் நின்று போகிறது.

 

ஆனால் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. தன்னுடைய இரண்டாவது கண்ணை பிடுங்கவும் திண்ணன் தயார். தான் முழுமையாக பார்வையிழந்து விட்டால் ரத்தம் வடியும் கண் எங்கே உள்ளதென்று தெரியாது என்பதால், அந்த கண்ணிற்கு மேலே தன் காலை வைத்துக் கொண்டு தன் கண்ணை பிடுங்கப் போக, அப்போது சிவன் தோன்றி திண்ணனுக்கு அருள் பாலிக்கிறார்.

 

திண்ணனின் தீவிர பக்தி அர்ச்சகருக்கும் புரிகிறது. சிவனுக்காக தன் கண்களை இழந்த திண்ணன் கண்ணப்பன் என்று அழைக்கப்பட, நாயன்மார்களில் ஒருவராகவும் பெருமை பெருகிறார். இந்த சம்பவம் நடந்த நாள் எது தெரியுமா?

 

ஆம். அன்று சிவராத்திரி

 

பன்றி இறைச்சி படைத்த பக்தனுக்கு சிவராத்திரி நாளன்று சிவனே அருள் தந்தது பெரிய புராணத்தில் பதிவாகியுள்ளது.

 

சிவராத்திரி அன்று அசைவம் சாப்பிடக்கூடாது என்று பிதற்றும் காவிக்கயவர்கள் சிவபெருமானைத்தான் இழிவு படுத்துகின்றனர்.