Friday, September 20, 2024

நீ தைரியசாலியா ட்ரம்பு?- மோடி

 


நான் பார்த்த, கை குலுக்கிய, அரவணைத்துக் கொண்ட அனைத்து வெளிநாட்டு தலைவர்களும் அடுத்த தேர்தலிலேயே பரிதாபமாக தோற்றுப் போயுள்ளார்கள். நான் பிரச்சாரம் செய்த காரணத்தாலேயே இந்தாளும் தோற்றுப் போனான். அப்படியிருந்தும் என்னை சந்திக்க வருகிறான் என்றால் ட்ரம்ப், என் கட்சிக்காரங்களை விட மிகப் பெரிய முட்டாள் - இது மோடியின் குரங்குக் குளியலாக இருக்கலாம்.

மோடியின் குரங்குக் குளியலுக்கான காரணம் கீழே உள்ளது.



Thursday, September 19, 2024

கடவுளாகவே மாத்திட்டாங்களே மோடி . . .

 



மோடிக்கு அவரது பிறந்த நாளுக்காக அவரது அல்லக்கைகள் மோடியை கடவுளாகவே மாற்றி துதி பாடிய காட்சிகள் கீழே . . .

 


வேறு யாருக்காவது இப்படி  செய்திருந்தால் “இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டார்கள் என்று புலம்பி ஒரு கலவரத்தை தூண்டிருப்பார்கள்.

 மோடி என்பதால் வாயை மூடிக் கொண்டு கள்ள மவுனம் சாதிக்கிறார்கள்.

 என் கவலையே வேறு.

 நாளை இதே காஸ்ட்யூமில் இதே கெட் அப்பில் மோடி போட்டோ ஷூட் நடத்திடுவாரே என்ற அச்சம்தான்.

                                      

 

 

Wednesday, September 18, 2024

இனிமே அவர் "ஜோசப் விஜய்"

 


நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்த போது சங்கிகள் எப்படி அவரை வரவேற்றார்கள் என்பதற்கு சான்றாக இரண்டு ட்வீட்டுகள் கீழே . . 



நேற்று முன் தினம் அவர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை போட்டவுடன் சங்கிகளின் ஐ.டி விங் பொறுப்பாளர் ஒருவர் போட்ட ட்வீட் கீழே . . .


அடுத்து என்ன?

அன்புச்சகோதாரர் விஜய் என்று அழைக்கப்பட்டவரை இனி "ஜோசப் விஜய்" என்று அழைக்க வேண்டியதுதான்.

இதுதான் சங்கிகளின் கீழ்த்தரமான பாரம்பரியம் . . .

Tuesday, September 17, 2024

அகோரிகள் - பொருத்தம் சரியா மோடி?

 


தன்னை "நான் கடவுள்" என்று சொல்லிக் கொண்ட ரீல் அகோரி ஆர்யா போலவே "நான் பயாலஜிக்கல் குழந்தை" என்று சொல்லும் நீங்கள் காட்சி அளிக்கிறீர்களே மோடி!

பொருத்தம் 100 % மேல் சரியாக உள்ளது, தோற்றத்தில் மட்டுமல்ல, குணத்திலும் கூட . . .

மோடியின் நண்பனை சுட்டது யார்?

 


ட்ரம்பின் மீது இன்னொரு கொலை முயற்சி நடந்து இந்த முறை எந்த சிராய்ப்பு கூட இல்லாமல் அவர் தப்பித்துள்ளார். 

முன்பு நடந்த முயற்சியின் போது காதில் மட்டும் லேசாய் சிராய்ப்பு.

இந்த இரண்டாவது தாக்குதல் கமலா ஹாரிஸுடனான விவாதம் ட்ரம்பிற்கு பின்னடைவை உருவாக்கிய பின்பு நடந்துள்ளது ஐயத்தை உருவாக்குகிறது.

இரண்டு துப்பாக்கிச் சூடுகளும் ட்ரம்ப் ஏற்பாடு செய்ததோ என்பது அந்த சந்தேகம்.

ஏனென்றால் ட்ரம்பும் பதவிக்காக எந்த அளவும் கீழிறங்கக் கூடிய நபர்,

ஏனென்றால் அவர் மோடியின் நண்பர்.

Monday, September 16, 2024

ப்ளாக்மெயிலா மோடி?

 


ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மாநில அந்தஸ்தை மோடியால்தான் தர முடியும் என்று பில்லா ரங்கா கிரிமினல்களில் இளைய கூட்டாளியான அமித்ஷா முதலில் கூற, பிறகு முதல் கிரிமினலுமான மோடியும் சொல்லி விட்டார்.

ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை பறித்தவர்களே அவர்கள்தான். அந்த குற்ற உணர்வே இல்லாமல் இப்படி பேசுகிறார்கள் என்று எரிச்சல் படுவதோடு மட்டும் நிற்க முடியாது.

பாஜகவுக்கு வாக்களிக்கவில்லையென்றால் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை தர மாட்டோம் என்று மோடியும் அமித்ஷாவும் காஷ்மீர் மக்களுக்கு விடுக்கும் மிரட்டலாகத்தான் தெரிகிறது.

அதிகாரத்திற்காக எந்த அளவும் கீழிறங்கக் கூடிய கட்சி பாஜக.

காஷ்மீர் மக்கள் அவர்களை தோற்கடிக்க வேண்டும். 

Sunday, September 15, 2024

மத்யமர் சங்கிகளுடனான சண்டை ஓயவில்லை

 


கேவலமான, அயோக்கிய, அடி முட்டாள் சங்கிகள்

என்ற நேற்றைய பதிவின் தொடர்ச்சி இது.

படிக்காதவர்கள் மேலேயுள்ள  இணைப்பின் மூலம் படித்து விட்டு வரவும்.

சங்கிகளுக்கு ஆதரவாக "நீதி, நேர்மை, நியாயம்" என்று வஜனம் பேசும் மாடரேட்டரை காணவில்லை என்று எழுதியிருந்தேன்.

பிறகு அவர் வந்தார். தவறான பதிவை அனுமதித்தமைக்கான குற்ற உணர்ச்சி கொஞ்சமும் இல்லாமல் அந்த பதிவுக்கு முட்டு கொடுத்தார்.

"பதிவை விட  உங்கள் பதில் கேவலமாக உள்ளது" என்று நான் சொன்னதும் அவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.



என் பதில் நீக்கப்பட்டது என்று முதலில் ஒரு அறிவிப்பு.


அதற்கடுத்த நிமிடம் அடுத்த அறிவிப்பு



ஏழு நாட்களுக்கு குழுவிலிருந்து இடை நீக்கமாம்.

அந்த மாடரேட்டரின் அநியாயம் அதற்குப் பிறகும் தொடர்ந்தது. அயோக்கிய சங்கிகள் சித்தரித்த அதே பொய்யை இவரும் சொல்கிறார்.


எந்த தனி நபரையோ, தலைவரையோ அவதூறு செய்யக்கூடாது என்று அறிவுரை செய்து என் பதிலை நீக்கி, இடை நீக்கம் செய்த அந்த உத்தம மாடரேட்டர், மதங்களை கடந்து வாழ்ந்த ஒரு மகத்தான தலைவருக்கு பொய்யாக ஒரு மத முத்திரை கொடுத்து அசிங்கப்படுத்துகிறார்.

முதலில் நீக்கப்பட வேண்டியது இந்த உத்தம மாடரேட்டரைத்தான் . . .

22 ம் தேதிக்குப் பிறகு அந்த சண்டை நடக்கும்.