Sunday, May 28, 2017

நீதான்யா கலீஜூ யோகீ சீசீ




உபி டுபாக்கூர் சாமியார் கம் சி.எம் யோகீ சீசீ  ஏதோ ஒரு கிராமத்துக்கு போனாராம்.

அவர் வருவதற்கு முன்பாக அதிகாரிகள் அங்கே சென்று அந்த கிராமத்து தலித் மக்களுக்கு லைபாய் சோப்பும் ஷாம்புவும் கொடுத்து குளித்து விட்டு சுத்த பத்தமாய் நறுமணத்தோடு வர வேண்டும் என்று கட்டளை இட்டுள்ளார்கள். 

பத்து நாள் முன்னாடிதான் இந்தாளு இறந்து போன ராணுவ வீரர் வீட்டுக்கு போவதற்கு முன்னாடி ஏ.சி யும் சோபாவும் கொண்டு போய் போட்டு பின்னாடியே தூக்கிட்டு வந்தாங்க.

இப்ப, இப்படி சுத்தமா இருக்கச் சொல்றாங்க.

முற்றும் துறந்த சாமியாருக்கு, அதுவும் ரெண்டே ரெண்டு செட் ட்ரெஸ் வச்சுருக்கிற சாமியாருக்கு எதுக்கய்யா இவ்வளவு பில்ட் அப்?

இவனுங்க மனசு பூரா அழுக்கு. நடவடிக்கை பூரா கலீஜூ.

அதனாலதான் இப்படி. 

 

Saturday, May 27, 2017

சோமாலியா – குஜராத் : ஒரு ஒப்பீடு



கீழே உள்ள பட்டியலைப் பாருங்கள்.



குஜராத்தால் எந்த விதத்திலும் நெருங்க முடியாத கேரளாவைத்தான் மோடி சோமாலியா என்று சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டார் என்பதை நினைவு படுத்தவே இப்பதிவு.

சி.எம் கெத்துன்னா இதான்யா






கேரளா, திரிபுரா மாநில மக்களைப் பார்த்தால் பொறாமையாக உள்ளது. உனது மாட்டுக்கறி தடை எல்லாம் எங்கள் மாநிலத்திற்கு, எங்கள் மாநில மக்களுக்கு பொருந்தாது. உன் ஜம்பம் இங்கே செல்லாது  என்று தோழர் பினராயி விஜயனும் தோழர் மாணிக் சர்க்காரும் அறிவித்துள்ளார்களே, இதுதானய்யா கெத்து. முதலமைச்சர் என்றால் இப்படித்தானே இருக்க வேண்டும்!

இங்கேயும் ஒரு மனிதர் இருக்கிறாரே, எடப்பாடி என்று? அடிமையாய் இருப்பது  எப்படி என்பதன் உதாரணமாய்!

Friday, May 26, 2017

வாழைக்காய், கத்திரிக்காய் எல்லாம் சாப்பிடலாமா?




மூன்றாண்டு ஆட்சிக்காலத்தில் உருப்படியாய் எதையும் செய்ய துப்பில்லாத மோடி அரசு இப்போது  மாட்டுக்கறி போன்றவற்றின் விற்பனையை நாடு முழுதும் தடை செய்துள்ளது. 

ரம்ஜான் மாதம் நெருங்கும் நேரத்தில் இத்தடை என்பது இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களை வெறுப்பேற்றி நாடெங்கும் கலவரங்களை தூண்டி ரத்த ருசி பார்க்க நினைக்கும் சதிச்செயலே.

நான் என்ன உணவு சாப்பிடுவது என்பதை தீர்மானிக்க எந்த கொம்பனுக்கும் உரிமை கிடையாது, அது நாட்டின் பிரதம மந்திரியாக இருந்தாலும் கூட. 

இந்தியாவில் மாட்டுக்கறி விற்கத் தடை போடும் இந்த அரசு அவற்றை வெளிநாட்டுகளுக்கு ஏற்றுமதி செய்ய மட்டும் தடை விதிக்காது. ஏனய்யா இந்த இரட்டை வேடம்? 

மாட்டுக்கறி ஏற்றுமதி செய்கிற எல்லா முதலாளிகளும் பாஜக ஆட்கள். அவர்கள் போடுகிற எலும்புத் துண்டுகளின் ருசிக்காக ஏற்றுமதி தொடர அனுமதிப்பார்கள். 

கையாலாகததனத்தை திசை திருப்புகிற கேவலமான முயற்சி. இதனை கண்டிப்போம்.


உருளைக்கிழங்கும், காலி ஃபளவரும்   எனக்கு பிடித்தமான உணவு.  இருந்தாலும் அதைத்தான் சாப்பிட வேண்டும் என்று ஒரு அரசு வற்புறுத்தினால்   அப்போது  அவற்றை நான் நிராகரிப்பேன். 


என் உணவு, என் உரிமை. 
அதை வேறு எவனும் முடிவு செய்ய முடியாது.

பின் குறிப்பு : லாலு பிரசாத் யாதவ் சொன்னது போல வயதான மாடுகளை பாஜக ஆட்களின் வீடுகளில் கட்டி வைத்து பராமரிக்கச் சொன்னால் அப்போது தெரியும் இந்த மாட்டு மண்டைகளின் யோக்கியதை. 

Wednesday, May 24, 2017

அவிய்ங்க ஃஎப்.ஐ.ஆர், இவிய்ங்க விருது





காஷ்மீர் ஜீப் பிரச்சினை பற்றியே மீண்டும் எழுத வேண்டி உள்ளது.

அப்பாவியை ஜீப்பில் கட்டி இழுத்துப் போனதற்காக மேஜர்  லீடுல் கோகய் உள்ளிட்ட தொடர்புடைய ராணுவ அதிகாரிகள் மீது ஜம்முகாஷ்மீர் மாநில காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

அதே நேரம், இந்த சம்பவத்திற்காகவே ராணுவத்தின் தீரச் செயலுக்கான விருதை மேஜர் லீடுல் கோகய்க்கு வழங்கியுள்ளதாக, (மூன்று உயரதிகாரிகளை புறம் தள்ளி, மரபுகளை மீறி மோடியால் நியமிக்கப்பட்ட)  ராணுவத் தளபதி பிபின் ராவத் அறிவித்துள்ளார்.

மாநில காவல்துறை குற்றம் என்று பதிவு செய்துள்ள ஒரு செயலை வீரச் செயல் என்று ராணுவம் விருது வழங்குகிறது.

மேஜர் மீதான முதல் தகவல் அறிக்கையை நாங்கள் ரத்து செய்யப் போவது கிடையாது. சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்போம் என்று காஷ்மீர் மாநில ஐ.ஜி சொல்கிறார். தளபதியின் உறவினர் யாருக்காவது இப்படிப்பட்ட இழிவு நிகழ்த்தப்பட்டிருந்தால் அப்போதும் விருது வழங்கி கௌரவிப்பாரா என்று கேட்கிறார் பாதிக்கப்பட்ட பாரூக் அகமது தார்.

காஷ்மீர் பிரச்சினையை விரைவில் தீர்ப்போம் என்று இரண்டு நாட்கள் முன்பாகத்தான் ராஜ்நாத் சிங் வாய்ச்சவடால் விட்டிருந்தார். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற ராணுவ தளபதிகள் இருக்கிற வரை காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வே இருக்கப் போவதில்லை.

ஜீப் சம்பவத்தை விட இன்னும் கொடுமையாக இருக்கிறது விருது வழங்கிய விவகாரம்.

பொராகி போதும் காமெடி ....

விளக்கம் தேவையில்லை. செய்தியே தலைப்பின் நியாயத்தை சொல்லும்


 

இந்நாள் இன்னொரு நாளாய் இல்லாமல் செய்திட்ட . . . .





பொதுவாக பிறந்தநாள் என்பது எல்லா நாட்களைப் போலத்தான் கடந்து போகும். சிறப்பாக கொண்டாடும் பழக்கம் என்பது எப்போதும் கிடையாது. கடந்த சில வருடங்களாக முகநூலில் இணைந்த பின்பே வாழ்த்துக்கள் வர ஆரம்பித்தது. ரகசியமாக ஒரு வாழ்த்து அட்டை தயாரித்து மகன் இன்ப அதிர்ச்சி கொடுக்கத் தொடங்கியவுடன் ஒரு எதிர்பார்ப்பு உருவானது என்பதும் யதார்த்தம். அதே போல ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி திரு பா.இசக்கிராஜன் அவர்களின் வித்தியாசமான வாழ்த்தையும் சொல்லலாம்.



இந்த வருடம் ஒரிஜினல் பிறந்த நாளான 19 மே, காலையிலிருந்தே வாழ்த்துக்கள் குவியத் தொடங்கியது. முக நூலில், வாட்ஸப்பில், குறுஞ்செய்தியில், தொலைபேசி அழைப்பில், நேரில் ஏராளமானவர்கள் வாழ்த்து சொன்னார்கள். அன்பையும் பாசத்தையும் தோழமை உணர்வையும் பல்வேறு வார்த்தைகளில், வடிவங்களில் வெளிப்படுத்திய தோழர்கள் ஒவ்வொருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

வழக்கமான நாளாக கடந்து போயிருக்க வேண்டிய நாள்தான். ஆனால் அன்பில் மூழ்கி தத்தளிக்கும் நாளாக மாற்றியவர்களுக்கு என்ன கைமாறு செய்ய முடியும்? அதே அன்பை எந்நாளும் எதிரொலிப்பதை விட . . .

இன்னொரு நிறைவும் அன்று ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் “பேரூராட்சிப் பகுதிகளுக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தை விரிவு படுத்த வலியுறுத்தி மனு அளிக்கும் இயக்கம்” அன்றைய தினம் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்றது. வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் பேரூராட்சியில் நடைபெற்ற இயக்கத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. நூற்றுக்கணக்கில் பெண்கள் கலந்து கொண்ட அந்த இயக்கத்தில் அவர்கள் மத்தியில் பேசியது மன நிறைவை அளித்தது. 




அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை மனமார்ந்த நன்றி.

பின் குறிப்பு : ஐந்து நாள் கால தாமதம் தவிர்க்க இயலாமல் போய் விட்டது.