Tuesday, September 9, 2025

தாளம் போட வைத்த .......

 


தஞ்சையில் டிசம்பரில் நடைபெறவுள்ள தமுஎகச அமைப்பின் 16 வது மாநில மாநாட்டின் இலச்சினைதான் மெலே உள்ளது.

இந்த இலச்சினையுடன் அல்லது இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால் இந்த இலச்சினையை ஒரு காணொளியாக தயாரித்து உள்ளனர்.

அதை கேளுங்கள்.

உங்களையும் அறியாமல் உங்கள் கால்கள் தாளம் போடும்.

இதோ அந்த காணொளி



இதனை தயாரித்த தோழருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

எனக்கு அனுப்பிய தமுஎகச துணைப் பொதுச்செயலாளரும் எங்கள் தஞ்சைக் கோட்ட தோழருமான தோழர் களப்பிரனுக்கு நன்றிகள் பல . . .

து.ஜ : எதிர்பார்க்காதே, ஏமாறாதே

 


துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. இன்றைக்குள் முடிவுகளும் வந்து விடும்.

எம்.பி க்களின் எண்ணிக்கை அடிப்படையில் சி.பி.ராதாகிருஷ்ணன் செல்வதற்கான வாய்ப்புதான் அதிகம். என்ன மிகக்குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெல்வார். 

சி.பி.ராதாகிருஷ்ணன் வென்றால் தமிழ்நாட்டிற்கு அவர் இமய மலையையே பெயர்த்து கொண்டு வந்து விடுவார்கள் என்று சங்கிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு ஒன்றை சொல்ல வேண்டும்.

இதற்கு முன்பாக தமிழ்நாட்டிலிருந்து துணை ஜனாதிபதி, ஜனாதிபதியாக சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கடராமன், ஜனாதிபதியாக மட்டும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஆகியோர் இருந்துள்ளனர்.

அவர்கள் யாரும் தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்ததில்லை.

ஜனாதிபதிகளே எதுவும் செய்ததில்லை எனும் போது துணை ஜனாதிபதி அதிலும் பாஜககாரர் நல்லது செய்வார் என்று நினைப்பதை மூட நம்பிக்கை என்றுதான் கூற முடியும்.

Monday, September 8, 2025

பத்துக்கும் போக மாட்டார் மோடி

 


காலத்தே செல்லாமல் கழுத்தறுத்து விட்டு, பின்பு நானும் இருக்கிறேன் நண்டு வளையில் என்று சீன் போடுபவர்களை "செத்ததுக்கு வாடான்னா பத்துக்கு வந்திருக்கே" என்று கேட்பது தமிழ் மக்களின் பழக்கம். இது ஜீன்ஸ் படத்தில் ஒரு காட்சியாகவே வந்திருக்கும்.

உயிரிழப்பு, பொருளிழப்பு, சொந்த வீட்டை விட்டு வெளியேறி அகதிகள் முகாம்களில் இன்னும் வாழ்க்கை,  உலகமே காறி உமிழ்ந்த பெண்களுக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமை என்று மிக மோசமான மணிப்பூர் கலவரம் நடந்து 2 ஆண்டுகள் ஆகி விட்டது. நிலைமை இன்னும் சீராகவில்லை என்பது வேறு விஷயம்.

இது நாள் வரை மணிப்பூர் செல்வது பற்றி யோசிக்காத 56 இஞ்சார், இப்போது மணிப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக செய்தி வந்தது.

பக்கத்தில் உள்ள மிசோரம், நாகாலாந்து மாநிலங்களில் பச்சைக் கொடி ஆட்டுதல், ரிப்பன் வெட்டுதல் ஆகிய போட்டோ ஷூட் நிகழ்வுகள் இருப்பதால் மணிப்பூருக்கும் போய்த் தொலைக்கலாம் என்று முடிவு செய்திருக்கலாம்.

அதனால் குகு இன அமைப்புக்களோடு ஒரு ஒப்பந்தம் கூட உருவானது. அது ஒன்றும் பெரிய ஒப்பந்தம் என்று சொல்ல முடியாது. பிரச்சினைகள் தொடர்பாக பேசலாம் என்பதுதான் அந்த ஒப்பந்தம்.

ஆனால் அதை நிராகரிப்பதாக பெரும்பான்மை மெய்தி இன அமைப்புக்கள் நிராகரித்து விட்டன.

அவர்களை மீறி மோடி மணிப்பூர் வருவதோ சிறுபான்மை மக்களான குகு பழங்குடி மக்களோடு பேசுவதோ நடக்கவே நடக்காது.

ஆக போட்டோ ஷூட்டுக்கள் வேண்டுமானால் நடக்கலாம். மணிப்பூர் செல்வதெல்லாம் . . . .




Saturday, September 6, 2025

GST - பீற்றிக் கொள்ளும் பாஜகவினருக்கு . . .

 GST விகிதங்களைக் குறைத்து மக்களின் துயரத்தை போக்கியுள்ளார் 56 இஞ்ச் மாவீரன் என்று பீற்றிக் கொள்ளும் பாஜகவினருக்கு கீழே உள்ள படம் சமர்ப்பணம். 




Thursday, September 4, 2025

GST அகற்றம் AIIEA வின் வெற்றி

 


தனி நபர் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டின் மீதான 18 % ஜி.எஸ்.டி அகற்றப்பட்டுள்ளது. நேற்றைய ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தின் முடிவு இது.

இந்த முடிவு கோடிக்கணக்கான பாலிசிதாரர்களுக்கு பயனளிக்கும். இந்த முடிவு அவ்வளவு எளிதாக வந்து விடவில்லை. அதன் பின்னால் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் உறுதியான, தொடர்ச்சியான போராட்டங்களும் பிரச்சார இயக்கங்களும் முயற்சிகளும் அடங்கியுள்ளன.

தன் குடிமக்களுக்கு எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை ஒரு மக்கள் நல அரசிற்கு உண்டு. அனைவருக்குமான மருத்துவம் கிடைக்கச் செய்ய வேண்டிய பொறுப்பும் அரசிற்கு உண்டு.

ஆனால் இந்த கடமையை நிறைவேற்றுவதைப் பற்றி உலகமயக் கொள்கையை பின்பற்றும் எந்த அரசும் கவலைப்படுவதில்லை.

அதனால் மக்களே தங்களின், தங்கள் குடும்பத்தின் எதிர்கால பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய ஆயுள் காப்பீட்டை நாடுகின்றனர். மருத்துவ செலவினங்களை சமாளிக்க மருத்துவக் காப்பீட்டை நாடுகின்றனர்.

அரசு செய்யத் தவறியதை குடிமக்களே தங்களது சொற்ப சேமிப்பில் இருந்து மேற்கொள்கிற போது அதற்கு 18 % ஜி.எஸ்.டி விதிப்பதென்பது ஒரு விதத்தில் அராஜகமே.

சேவை வரி என்று ஆரம்பித்த காலம் முதலே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அதனை எதிர்த்து வருகின்றது. மக்கள் மத்தியில் 2004ம் ஆண்டு முதல் கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட பல இயக்கங்களை நடத்தி வந்தது ஏ.ஐ.ஐ.இ.ஏ.

பாலிசிதாரர்களுக்கு தேவையற்ற சுமையாக மாறியது ஜி.எஸ்.டி, இன்சூரன்ஸ் பரவலை அதிகரிக்க வேண்டும் என்று உபதேசித்த அரசு, வழக்கமாக வரும் வணிகத்தைக் கூட ஜி.எஸ்.டி பாதிக்கிறது என்ற யதார்த்தத்தை கணக்கிலெடுக்க மறுத்தது. 

2019 முதல் இந்த இயக்கம் தீவிரமானது. நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பது, ஜி.எஸ்.டி கவுன்சில்  உறுப்பினர்களை சந்தித்து  ஆதரவு திரட்டுவது, பாலிசிதாரர்களிடமிருந்து கடிதங்கள் பெற்று நிதியமைச்சருக்கு அனுப்புவது என எத்தனையோ இயக்கங்களை சங்கம் நடத்தியது. எங்கள் கோட்டத்தில் கூட புதுவை முதல்வர் திரு நாராயணசுவாமி அவர்களை இரண்டு முறை எங்கள் தென் மண்டலத் தலைவர்களோடு சந்தித்து விவாதித்துள்ளோம். தொகுதிக்கு வராத எம்.பிக்களை தவிர அனைவரையும் சந்தித்துள்ளோம்.

2024 மக்களவைத் தேர்தலுக்கு பின்பு  இயக்கம் சூடு பிடித்தது. நாடு முழுதிலும் நானூறுக்கும் மேற்பட்ட எம்.பிக் களை சந்தித்தோம். பாஜக உறுப்பினர்கள் கூட எங்களின் நியாயத்தை உணர்ந்து ஆதரவு அளித்தார்கள். மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஜி.எஸ்.டி யை அகற்றச் சொல்லி நிதியமைச்சருக்கு கடிதம் அனுப்பினார்.


எங்கள் கோட்டத்திலும் எம்.பி க்களை சந்தித்தோம்.



மக்களவை, மாநியல்ங்களவையில் எம்.பிக்கள் பிரச்சினையாக எழுப்பினர்.

இந்தியா அணி எம்.பி க்கள் நாடாளுமன்றத்தில் தர்ணா நடத்தினர்.



ஆனாலும் நிர்மலா அம்மையார் அசையவில்லை.

ஜி.எஸ்.டி கவுன்சிலில் இது தொடர்பான விவாதம் வந்த போது ,முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.  ஜி.எஸ்.டி அமைச்சரவைக்குழு விவாதித்து பரிந்துரை அளிக்கட்டும் என்று காலம் தாழ்த்தப்பட்டது.

இதற்கு மேலும் தாமதிக்க முடியாது என்ற சூழல் உருவான பின்பு, இப்போது ஜி.எஸ்.டி அகற்றப்பட்டுள்ளது.

மக்களுக்காகவும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நடத்திய இந்த போராட்டமும் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

எல்.ஐ.சி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக ஜி.எஸ்.டி அகற்றம் திகழும். 

எல்.ஐ.சி யை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாப்பது என்பது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சித்தாந்த நிலைப்பாடு.

வார்த்தைகளோடு நிறுத்திக் கொள்ளாமல் செயலிலும் காண்பிக்கிற அமைப்பு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் ஒளி வீசும் மணி மகுடத்தில் இன்னும் ஒரு ரத்தினக்கல் பதிக்கப் பட்டுள்ளது.

இந்த வெற்றியோடு சங்கத்தின் பயணம் தொடரும், மேலும் உறுதியாக, மேலும் உற்சாகத்துடன். . .


Wednesday, September 3, 2025

மோடிக்கு உலகில் பிடிக்காத நாடு

 

ஆமாங்க.

நெஜமாத்தான் . . .

ஆதாரம் வேணுமா?

கீழேயுள்ள படத்தை பாருங்க . . .

அவரு இந்தியாவில எப்படி இருக்காரு, வெளிநாடு போனா எப்பாடி இருக்காரு என்று.

படம் ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கரிடமிருந்து சுட்டது. 



Monday, September 1, 2025

இன்சூரன்ஸிற்கும் பொருந்துமா சேகரு?

 


இன்று எல்.ஐ.சி யின் 70 வது உதய தினம். அனைவருக்கும் எல்.ஐ.சி உதய தின வாழ்த்துக்கள். இந்நாள் பற்றிய விரிவான பதிவு நாளை.


கீழே உள்ளது சங்கி எஸ்.ஆர்.சேகரின் பதிவு,



சுதேசிப் பொருள் மட்டும் வாங்க வேண்டும் என்ற மோடியின் வேண்டுகோள் இன்சூரன்ஸ் சேவைக்கு பொருந்தாதா? இந்திய கம்பெனிகளோடு கூட்டு வைத்துள்ள விதேசி கம்பெனிகளை வெளியேறச் சொல்லும் தைரியம் மோடிக்கு உண்டா?

அதை விட இன்னும் முக்கியமாக, விதேசி முதலாளி மட்டும் கூட்டு இல்லாமல் வணிகம் செய்ய உதவியாக இன்சூரன்ஸ் துறையில் 100 % அன்னிய முதலீட்டை அனுமதிக்கா மசோதா ஒன்றை வைத்துள்ளீர்கள் அல்லவா! அதை அப்படியே கை விட உங்கள் அரசு தயாரா?

முடியாதுல்ல! அப்பறம் எவனை ஏமாத்த இந்த வேண்டுகோள்?

வாழ்க்கையில ஒரு முறையாவது நேர்மையா இருங்கடா . . .