Tuesday, November 7, 2017

அவர்கள் இல்லாமல் இருந்திருந்தால்??????




 ஆஹாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி என்று மகாகவி பாரதியால் பாடப்பட்ட ரஷ்யப்புரட்சியின் நூற்றாண்டு தினம் இன்று.

ரஷ்யப்புரட்சியினை ஏன் நினைவு கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் தோழர் பிரதாபன் ஜெயராமன் சுருக்கமாக  எழுதியதை முதலில் பகிர்ந்து கொள்கிறேன். 



#சோவியத்_புரட்சி_அப்படி_என்ன_தான்_சாதித்தது?
☆☆☆புரட்சி☆☆☆


☆ரஷ்ய சமூகம் தன் புரட்சியின் மூலம் அப்படி என்ன தான் செய்தது.. வாருங்கள் பார்ப்போம்...


☆உலகின் முதல் பட்டினியற்ற தேசத்தை உருவாக்கிக்காட்டியது. 


☆உலகின் முதல் கல்லாதோர் அற்ற தேசத்தை உருவாக்கிக் காட்டியது.


☆முழுக்கல்வியும் இலவசமாக்கப்பட்டது.


☆உயர் கல்வி வரை கட்டாயமாக்கப்பட்டது. 


☆சுகாதாரத்திற்கு ஆகும் மொத்த செலவையும் அரசே ஏற்றது.


☆தொழிலாளர்களின் வேலை நேரம் 7 மணி நேரமாக்கப்பட்டது.


☆24 மணிநேரம் பணியாற்ற வேண்டிய அத்தியாவசியத் தொழிலாளர்களின் வேலை நேரம் 6 மணி நேரமாக்கப்பட்டது. 


☆தவிர்க்க முடியாத காலகட்டத்தை தவிர கூடுதல் நேர உழைப்பு தடை செய்யப்பட்டது.


☆தொழிலாளர்களுக்கு இதர விடுமுறை இல்லாமல்,ஆண்டிற்கு ஒரு மாதம் முழு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டது. 


☆விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வோருக்கான மானியத்துடன் கூடிய உல்லாச விடுதிகள் கொடுக்கப்பட்டன. 


☆ஆண்களுக்கு 60 வயதும், பெண்களுக்கு 55 வயதும் ஓய்வு பெறும் வயதாகவும், ஓய்வு பெறுவோர்க்கும், உழைக்க இயலாதவர்களுக்கும் ஓய்வூதியமாக முழுச்சம்பளமும் வழங்கப்பட்டது. 


☆ஓய்வூதியத்தை உலகமே அறிந்தது ரஷ்ய புரட்சியின் விளைவாகத்தான்.


☆எல்லோருக்கும் குடியிருப்பு உறுதி செய்யப்பட்ட முதல் நாடும் ரஷ்யா தான். 


☆வீட்டு வாடகை, எரிபொருள், மின்சாரம், தண்ணீர் உட்பட எல்லாவற்றிற்கும் சேர்த்தே ஊதியத்தில் 3 சதவீதம் மட்டுமே பெறப்பட்டது. 


☆பெண்களுக்கு பேறுகால விடுப்பு நான்கு மாதங்கள் முழு ஊதியத்துடன் வழங்கப் பட்டது. 


☆தேவைப்படின் ஓராண்டு காலம் வரை பாதி ஊதியத்துடன் கூடிய விடுப்பும் வழங்கப்பட்டது. 


☆தாய்ப்பால் கொடுக்கும் காலம் வரைக்கும் பெண்களுக்கு வாரத்தில் 6 நாட்களோ, நாள் ஒன்றுக்கு 7மணி நேரமோ உழைக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. 


☆எல்லா குழந்தைகளுக்கும் 16 வயது வரையிலும், தனித்து வாழும் பெண்கள் வளர்க்கும் குழந்தைகளுக்கு 18 வயது வரையிலும் அரசு மானியம் வழங்கியது. 


☆எல்லோருக்கும் வேலை வழங்கிய முதல் நாடும் ரஷ்யா தான்.


☆இன்னும் இதுபோன்ற பட்டியல் நீண்டுகொண்டே போகும். இவ்வளவு ஏன், இன்றைக்கு நான்  அனுபவிக்கிற பல உரிமைகளும், தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள பல உரிமைகளும் ரஷ்ய புரட்சியின் மூலமாகவே இந்த உலகம் அறிந்தது, பெற்றது. 


☆சூரிய அஸ்தமனமே இல்லாத பெரும் செல்வம் படைத்த பிரிட்டிஷ் சாம்ராஜியமே, தன் சொந்த நாட்டு மக்களுக்கு அறிமுகம் கூட செய்யாத பல நலத்திட்டங்களை அன்றைக்கு வறுமையிலிருந்து உருவான ரஷ்யாவின் புரட்சிகர அரசாங்கம் செய்துகாட்டியது. 


☆காரணம் செல்வம் ஒரே இடத்தில் குவியாமல், எல்லோருக்கும் நாட்டின் மொத்த செல்வமும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்கிற உயரிய பொதுவுடைமை கருத்தாலேயே அது சாத்தியமானது.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை “இன்று ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும் கம்யூனிஸம் எனும் பூதம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது” என்றுதான் பேராசான்கள்  மார்க்ஸூம் ஏங்கல்ஸூம் துவக்கி இருப்பியிருப்பார்கள்.


ரஷ்யப்புரட்சிக்குப் பின்பு அவர்களை அந்த பூதம் இன்னும் அதிகமாக ஆட்டி வைத்தது. தங்கள் நாட்டு தொழிலாளர்கள் சிவப்பின் பக்கம் சென்று விடக்கூடாது என்று “நல அரசு" (Welfare State) என்ற அம்சத்தை கொண்டு வந்தார்கள். 

அது ஒரு புறம் இருக்கட்டும், ரஷ்யப்புரட்சியின் விளைவாக உருவான சோவியத் யூனியன் இல்லாமல் இருந்திருந்தால் இந்திய நிலைமை என்ன ஆகியிருக்கும்?

இந்திய விடுதலைக்குப் பின்பு இந்தியாவின் தொழில் முன்னேற்றத்திற்கு உதவ எந்த ஒரு முதலாளித்துவ நாடும் முன்வராத போது நமக்கு கை கொடுத்தது சோவியத் யூனியன் மட்டுமே.

ரூர்கேலா, பிலாய் போன்ற இடங்களில் உருக்காலை அமைப்பதில் தொடங்கி அனல் மின் நிலையங்கள் அமைப்பது வரை நமக்கு உதவியது சோவியத் யூனியன் மட்டுமே. அவர்கள் உதவவில்லை என்றால் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமே கிடையாது. பெட்ரோலிய துரப்பண ஆராய்ச்சியும் அவர்களது ஒத்துழைப்பால்தான் நிகழ்ந்தது. 

கட்டமைப்புத்துறையில் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது என்றால் அது சோவியத் யூனியன் நமக்கு அளித்த ஒத்துழைப்பால் மட்டுமே.

இன்று இந்தியாவின் பெருமை நமது ஐ.எஸ்.ஆர்.ஓ. இந்திய விண்வெளி ஆராய்ச்சியும் சோவியத் யூனியனின் கொடையே. அவர்கள் கொடுத்த அடித்தளத்திலிருந்துதான் இந்திய சாதனைகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் ராகேஷ் ஷர்மா  என்பது அனைவருக்கும் தெரியும். அவர் சென்றது சோவியத் யூனியனின் விண்கலத்தில்தான் என்பது எத்தனை பேருக்கு நினைவில் உள்ளது?

வங்க தேசப் போரின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது ஏழாவது கடற்படையை அனுப்பியபோது சோவியத் யூனியனின் கடற்படையும் தனது கப்பல்களை அனுப்பியதால் அமெரிக்கா பின் வாங்கியது. 

எனவே சோவியத் யூனியன் இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா இப்போது இருப்பதை விட மிகவும் பின் தங்கிய நிலையில்தான் இருந்திருக்கும் என்பதுதான் யதார்த்தம். 

உழைக்கும் வர்க்கத்தால் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்பதை முதன் முதலில் நிரூபித்த ரஷ்யப் புரட்சி வாழிய வாழியவே!!!

Sunday, November 5, 2017

இதை வச்சு என்னய்யா செய்யறது?




தீபாவளி சமயத்தில் வார இதழ்களோடு வந்த இலவசப் பொருள் இது. மூன்று இதழ்களுக்கு மூன்று இணைப்புக்கள். எல்லாமே ஐம்பது கிராம் குலாப் ஜாமூன் மிக்ஸ். ஒரே கம்பெனியுடையதுதான். ஐம்பது கிராமில் எதுவும் செய்ய முடியாது. இரண்டு ஜாமூன் வருமா என்பதே சந்தேகம். சரி மூன்று பாக்கெட் வந்துள்ளதே என்று பார்த்தால்

ஒன்று  எந்த ப்ளேவரும் இல்லாதது
இன்னொன்று ஆரஞ்சு ப்ளேவர்
மற்றொன்று ஸ்ட்ராபெரி

மூன்றையும் ஒன்றாகக் கலந்தால் எப்படி இருக்கும்!

தூக்கிப் போடவும் முடியலை. வீட்டிற்கு வெறும் அடைசல்தான். 

இப்படி பயன்படுத்த முடியாத ஒரு பொருளை தருவதற்குப் பதிலாக கொடுக்காமலே இருந்திருக்கலாம்.

பாரி வேந்தன் ஆகாதீர்



கடந்த செப்டம்பர் மாதத்தின் இறுதியில் சேலத்திற்கு காரில் ஒரு இரவுப்பயணம் செல்ல வேண்டியிருந்தது. நள்ளிரவிலேயே திரும்பி வந்தோம். கிருஷ்ணகிரியில் பைபாஸ் சாலையில் தேநீர் குடிக்க நிறுத்தியபோது பக்கத்தில் செடிகளுக்கு மத்தியில் வெள்ளையாக ஏதோ தெரிந்தது.

ஒரு ஆர்வத்தில் அருகே சென்றால் அந்த வெள்ளைப் பொருள் சுத்தமாக நொறுங்கிய ஒரு கார்.

படத்தைப் பாருங்கள்.

 
எவ்வளவு வேகமாக வந்திருந்தால் இவ்வளவு மோசமாக உருக்குலைந்து போயிருக்கும்?

முல்லைக்கொடிக்கு தேர் கொடுத்த பாரி வேந்தன் போல செடிகள் படருவதற்கு  இந்த கார் என்றுதான் அதைப் பார்க்கையில் தோன்றியது.

உயிரைக் குடிக்கும் அதி வேகம் தேவையா?

மித வேகத்தில் போனால் குடியா முழுகி விடும்?

வேகம் தவிர்ப்பீர்,

பாரி வேந்தன் ஆகாதீர். உங்களது குடும்பத்தினரை பரிதவிக்க வைக்காதீர்.

பின் குறிப்பு : இதை எழுதும் போதே இன்னொரு சந்தேகம் வந்தது. அது பிறகு.

Saturday, November 4, 2017

அவருக்கு ஒரே ஒரு மாலைதான்






ஆரணியில் எங்கள் கோட்டச்சங்க மாநாடு நடந்தது அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில்

எங்கள் கோட்டத்தில் கடந்த சில வருடங்களாக காந்தி ஜெயந்தியை "மத நல்லிணக்க பாதுகாப்பு நாள்" என்று அனுசரித்து  அனைத்து மையங்களிலும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து "மத நல்லிணக்கம், மனித நேயம்" ஆகியவற்றை வலியுறுத்தும் பிரசுரங்களை மக்கள் மத்தியில் வினியோகம் செய்வது வழக்கம்

மாநாடு காரணமாக இந்த வருடம் அவ்வாறு செய்ய இயலவில்லை. இருப்பினும் காந்தி ஜெயந்தி அன்று காலை மாநாட்டு நிகழ்வுகள் துவங்கும் முன்பாக ஆரணியில் இருந்த அண்ணல் காந்தியடிகளின் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து விட்டு வந்தோம்.

மாநாடு நடந்து கொண்டிருக்கையில் மதிய வேளையில் ஆரணி கிளையின் ஒரு தோழர் சொன்னார்.

"காந்தி சிலையில் நாம் போட்ட மாலை மட்டும்தான் உள்ளது. வேறு யாருமே போட்டதாக தெரியவில்லை"

நேற்று நெய்வேலி செல்கையில் ஆரணியில் காந்தியடிகளின்  அந்த சிலையை கடக்கையில் கவனித்தேன்.

ஒரே ஒரு காய்ந்து போன மாலை மட்டும்தான் அவர் கழுத்தில் இருந்தது.

அரசு மட்டுமல்ல காங்கிரஸ்காரர்கள் கூட . . . . . . . .

அதை எழுத எனக்கு மனமில்லை


"

வேலூரைப் பத்தி என்னய்யா நினைப்பாங்க????




ம். இப்படி ஒரு படம் வாட்ஸப்பிலும் முக நூலிலும் உலாவிக்கிட்டு இருக்கு.

இதைப் பார்க்கிறவங்க வேலூரைப் பத்தி என்னய்யா நினைப்பாங்க?

ஏதோ பல வருஷமா வேலூரில மழையே பெய்யாம சஹாரா பாலைவனம் மாதிரி காஞ்சுக் கிட்டு இருக்கறதா நினைக்க மாட்டாங்களா?

மழையே இல்லாத ஊருல போய் நம்ம பொண்ணை கட்டிக் கொடுத்தா காலம் முழுதும் தண்ணிக்குடம் தூக்கியே இடுப்பு ஒடிஞ்சுடும்னு நினைச்சா என்னய்யா ஆகும்?

வேலூரில உள்ள ஒரு வாலிபனுக்கும் கல்யாணமே நடக்காதய்யா?

டெய்லி மழை பெய்யுது. பாலாறில கொஞ்சமாவாவது தண்ணி ஓடிக்கிட்டு இருக்கு. 

இப்ப போய் இப்படி பண்றீங்களேப்பா!!!!!!!!!

Friday, November 3, 2017

இன்னும் சில நிமிடங்களில் நெய்வேலியில் . . . .

என்.எல்.சி நிறுவன பங்கு விற்பனையைக் கண்டித்து எங்கள் சங்கத்தின் சார்பில் 

நெய்வேலியில்

இன்னும் சில நிமிடங்களில் 

 

நங்கு நங்குன்னு வாயிலயே நாலு குத்து குத்துங்க....

தோழர் ஸ்ரீரசா ரவிக்குமார் அவர்களுக்கு நன்றி சொல்லி அவரது பதிவை பகிர்ந்து கொள்கிறேன்.


நங்கு நங்குன்னு வாயிலயே
நாலு குத்துக் குத்துங்க....

----------------------------------------------

சங்கிக வாயப் பொளந்தாலே அப்புடியே சுதேச உணர்வு, தேச பக்தி எல்லாத்தையும் மொத்தக் குத்தகைக்கு எடுத்தது மாதிரி காறிக் காறித் துப்புவானுங்க...

ஆ.. ஊ..ன்னா சீன எதிர்ப்பு, பாகிஸ்தான் எதிர்ப்பு...மேக் இன் இண்டியா... அப்புடி இப்புடீன்னு மார்கழி மாசத்து நாயி மாதிரி எச்சியா ஒழுக வுடுவானுங்க...

காங்கிரஸ் அரசில் உள்துறை அமைச்சராக இருந்து காந்தி படுகொலையின் காரணமாக ஆர்எஸ்எஸ்-ஐ தடை செஞ்ச படேலை... நேரு விரோதி, காங்கிரஸ் விரோதி மாதிரி பில்டப் குடுத்து, அவருக்குப் பெரிய சிலை வைக்கப் போறோம்னு, அதுக்குப் பலகோடி ரூபாய் பட்ஜெட்டுன்னும் அறிவிச்சானுங்க...

இந்தப் பிக்காலிகளால ஒரு சுதேசித் தலைவரின் சிலையைக் கூட உள்ளுரில், சொந்த நாட்டில் செய்யத் துப்பில்லாம, எந்தச் சீனாவ எதிர்த்து, சங்கி நாய்களை எல்லாம் கோரஸா ஊளையிட வச்சானுங்களோ அந்தச் சீனாகிட்டேயே கோடிக்கணக்குல அந்நியச் செலாவணியைக் கொடுத்து, ஆர்டர் தந்து, இந்தியாவில இருக்குற மிகப்பெரிய சுதேசிச் சிற்பிகளை எல்லாம் அவமதிச்சு படேல் சிலையை இறக்குமதி செஞ்சிருக்கானுங்க...

இனிமே சீனத் தயாரிப்புன்னா அது தரங்கொறைஞ்சது, சீனப்பட்டாசுகளை வெடிக்காதீங்கன்னு  போலிச்சுதேசியம் பேசும் சங்கி நாய்கள் எவனாவது ஊளையிட்டுக்கிட்டே வந்தானுங்கன்னா, புடுச்சு இழுத்து வச்சு, வாயிலேயே நங்கு நங்குன்னு நாலு குத்துக் குத்தி அனுப்புங்க...

ஜெய்ஹிந்த்!