Thursday, November 2, 2017

பேராசிரியர் சொல்வது சரிதானே ஜெய்ட்லி?

வங்கிகளுக்கு மூலதனம் அளிப்பது தொடர்பான பல உண்மைகளை அம்பலப்படுத்தி  பொருளாதார  நிபுணர்  தோழர் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதியுள்ள விரிவான கட்டுரையை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.  மோடி அரசின் இன்னொரு மோசடி இது என்பதை இக்கட்டுரை விரிவாக விளக்குகிறது.

இது தொடர்பாக எனக்கு தோன்றிய ஒரு மீம் கீழே. 

நன்றி - தீக்கதிர் 30.10.2017

அருண் ஜெய்ட்லி - சொன்னதும் சொல்லாததும்

பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா



அண்மையில் நிதி அமைச்சர் ஜெட்லி அறிவித்துள்ள வங்கிகளின் மூலதனத்தைக் கூட்டுவது தொடர்பானநடவடிக்கைகள் பற்றி பல குழப்பமான கருத்துக்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அரசாங்கம் சொல்லாத சில அடிப்படை விஷயங்களை கவனத்தில் கொள்வோம்.ஏற்கெனவே மந்த நிலையில் இறங்கியிருந்த இந்திய பொருளாதாரம், செல்லாக்காசு பிரச்சனை, விலங்கு சந்தைகளில் அரசு ஏற்படுத்திய குழப்பம், தயாரிப்பின்றியும் மாநிலங்களின் ஜனநாயக உரிமைகளை காலில் போட்டு மிதித்தும், சிறு,குறு தொழில் முனைவோரையும் வணிகர்களையும் மறைமுக வரிவலைக்குள் கொண்டுவரும் நோக்குடனும் அமல்படுத்தப்பட்டு வரும் ஜிஎஸ்டி ஆகியவற்றால், மேலும் கடுமையாக சீர்குலைந்துள்ளது

தொடர்ந்து மத்திய அரசு இதனை மறுத்துவந்தாலும் இதன் உண்மை கருதி மறுபக்கம் பல புதியதடாலடி அறிவிப்புகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இப்பொழுது வந்துள்ள அறிவிப்புகளில் பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமூலதனம் அளித்தல் தொடர்பானதை மட்டும் இப்பதிவில் சுருக்கமாக காண்போம்.2.11 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளின் மறுமூலதனமயத்திற்கு செலவிட உள்ளதாக ஜெட்லி அறிவிப்பு கூறுகிறது.

 இதில் பட்ஜெட் மூலம் 19 ஆயிரம் கோடிகளுக்கு சற்றுக் குறைவாக மட்டுமே தரப்பட உள்ளது.   (இது ஏற்கெனவே பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட தொகையை விட மூவாயிரம் கோடி மட்டுமே அதிகம்.) வங்கிகள் பங்கு சந்தையில் பங்குகளை விற்று ஐம்பத்து எட்டாயிரம்கோடி ரூபாய் திரட்ட வேண்டும். இதுதனியார்மயம் தவிர வேறல்ல. மீதம்கணிசமான தொகையை அரசுமறுமூலதன பாண்டுகளாக வங்கிகளுக்கு விற்று வங்கிகளின் மூலதன அளவை உயர்த்தும். இது வங்கிகளின்போதுமான மூலதன விகிதத்தை , பாஸல் நெறிமுறைகள் – 3  என்ற பெயரில்பன்னாட்டு நிதி மூலதனம் பரிந்துரைக்கின்ற அளவிற்கு கொண்டுவரும். ஆனால் பொதுத்துறை வங்கிகளுக்கு இந்த நெறிமுறை அவசியம் அல்ல. ஏனெனில், அரசு வங்கிகள் என்பதால் மக்களின் முழுநம்பிக்கையை பெற்றுள்ள வங்கிகள் இவை

(தனியார் வங்கிகளையே பெரும்பாலும் கொண்ட முன்னணி முதலாளித்துவ நாடான அமெரிக்கா கூட பாஸல் நெறிமுறைகள் - 3 அமலாக்கத்தை ஏற்கவில்லை.) எனினும் இதை செய்துதான் ஆகவேண்டும் என்று கருதினாலும் பொதுத்துறை வங்கிகளுக்கு பாண்டுகள் விற்பதற்குப் பதில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு கடன் பெற்று இத்தொகையை வங்கிகளுக்கு கொடுத்திருக்க முடியும். இரண்டுமே பிஸ்கல் பற்றாக்குறையைக் கூட்டும் என்பதால் இதில் வேறு பிரச்சனை இல்லை.மாறாக வங்கிகளை காசு கொடுத்து பாண்டுவாங்க வைப்பது பொருத்தமானது அல்ல. உண்மையான பிரச்சனை என்ன? வாராக்கடன் பிரச்சனை பூதாகாரமாக ஆகியுள்ளதால் வங்கிகளுக்கு சிக்கல்ஏற்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளின்வராக்கடன் ஏன் அதிகரித்ததுஇதற்கான மூலம் தாராளமயக் கொள்கைகளில் உள்ளது.

நாடு விடுதலை பெற்றவுடன் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்குடன் நீண்டகால கடன்களை குறைந்த வட்டியில் தருவதற்காக வளர்ச்சிசார் வங்கிகள் உருவாக்கப்பட்டன. IFCI, ICICI, IDBI  உள்ளிட்ட பல நிதி நிறுவனங்கள் மத்திய அரசாலும் இவை போன்றவை மாநில அரசுகளாலும் அமைக்கப்பட்டன. இவை நீண்ட காலம் எடுக்கும் கட்டமைப்புத்துறை முதலீடுகளை மேற்கொள்ள குறைந்த வட்டி கடன் அளித்தன. இந்நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி உள்ளிட்டு சில அரசு நிறுவனங்களிடம் இருந்து குறைந்த வட்டியில் கடன் பெறவும் ஏற்பாடு இருந்தது

ஆனால், தாராளமயக் கொள்கைகளின்படி நிதித்துறை படிப்படியாக முழுமையாக பன்னாட்டு, இந்நாட்டு ஏகபோகங்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. நரசிம்மம் கமிட்டி பரிந்துரையில் துவங்கி அடுத்தடுத்து வந்த அரசு கமிட்டிகள்  வளர்ச்சி வங்கி செயல்பாடுகள் தேவையில்லை, எல்லா வங்கிகளும் எல்லாவிதமான சேவை பணிகளையும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வணிக அடிப்படையில் அளிக்கலாம்  என்ற மாற்றங்களைக் கொணர்ந்தனர். கடந்த பல ஆண்டுகளாக அரசு பொதுத்துறை முதலீடுகளை குறைத்துவரும் சூழலில், பெரும் தனியார் நிறுவனங்களுக்கு கட்டமைப்புத்துறை முதலீடுகளை மேற்கொள்ள பொதுத்துறை வங்கிகள் கடன் கொடுத்துள்ளன. இவற்றில் பல இன்று வராக்கடன்களாக மாறியுள்ளன. மீண்டும் வளர்ச்சிசார் வங்கி நிறுவனங்கள் தேவை என்பதையும் அவை பொதுத்துறையில் இருக்க வேண்டும்என்பதையும் ஏற்க தாராளமய ஆதரவாளர்கள் தயாராக இல்லை. இந்த அடிப்படை விஷயங்களில் தனது கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய அரசு தயாராக இல்லை. இப்பொழுது முன்வைக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் புதிதாக உதித்தவை அல்ல, ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கும் முன்பே இந்த அரசே முன்வைத்தவை தான். இவை பிரச்சனைகளை தீர்க்காது.

வராக்கடனால் பாதிக்கப்பட்டிருக்கும் வங்கிகளின் ஊஹசு இவற்றின் மூலம் உயர்வதால் வங்கிகள் மீண்டும் கடன்கொடுக்கும் வாய்ப்புகளை இந்த நடவடிக்கைகள் ஏற்படுத்தும் என்று சிலர் சொல்கின்றனர். ஆனால் இப்பொழுதும் கூட கடன் கொடுக்க கணிசமான பணம்வங்கிகளிடம் உள்ளது. அவை கொடுக்கத் தயாராக இல்லை என்பதுபிரச்சனையின் ஒரு அம்சம். ஆனால்கடன் வாங்க தகுதி உள்ள வாடிக்கையாளர்கள் க்யூ வரிசையில் நிற்கவில்லை என்பதும் உண்மை. பொருளாதார மந்தநிலை, கிராக்கியின் வீழ்ச்சி ஆகியவற்றைஎதிர்கொள்ள அரசின் தொழில் மற்றும் கட்டமைப்பு மற்றும் வேளாண்சார் முதலீடுகள் அதிகரிக்க வேண்டும். இப்பொழுது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மிகவும் பலவீனமான ஊக்குவிப்பை  தான் அளிக்கும்.ஒருவகையில் நடப்பது ஒருநாடகம். வங்கிகளை காப்பாற்றுவதாகக் கூறி, அடிமாட்டு விலையில் பொதுத்துறை வங்கிகளை அவர்கள் பெற்ற வங்கிக்கடனை திருப்பித் தராத  திருடர்களிடமே விற்கும் வாய்ப்பே இல்லை என்று யாரும் கூறிவிட முடியாது.


பேனர்கள் . நிறைவும் துயரமும்

கடந்த மாதம் ஆரணியில் நடைபெற்ற எங்கள் கோட்டச்சங்கத்தின் முப்பதாவது பொது மாநாட்டிற்காக ஆரணி நகரத்தில் எட்டு பேனர்கள் வைத்திருந்தோம்.  முறையாக அனுமதி வாங்கி, நகராட்சிக்கு கட்டணம் செலுத்தி அனுமதிக்கப்பட்ட நாட்களுக்கு மட்டுமே வைத்திருந்தோம். 

ஆரணி நகரத்து மக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய விதத்தில் பேனர்களின் வடிவமைப்பும் சொல்லப்பட்ட செய்தியும் அமைந்திருந்தது மனதிற்கு நிறைவளித்தது.










மாநாட்டின் பின்னணியில் அமைந்திருந்த பேனர் நன்றாக வந்திருந்தாலும் பார்க்கும் போதெல்லாம் துயரத்தை அளித்துக் கொண்டே இருந்தது.



மூன்று முக்கியமான தோழர்களை கடந்த ஆண்டில் இழந்துள்ளோம் என்ற வேதனையை அந்த பின்னணி அளித்துக் கொண்டே இருந்தது.

Wednesday, November 1, 2017

அராஜகத்தை தடுக்க துப்பில்லாவிட்டாலும் கூட . . .






நேற்று காவிகளின் ரௌடிகள் அமைப்பான ஏ.பி.வி.பி குண்டர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு கலவரம் செய்ய வந்து செங்கொடியையும் எரித்தார்கள்.

அந்த அராஜகத்தைக் கண்டித்து தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

ஆனால் வேலூரில் மட்டும் காவல்துறை அனுமதி மறுத்தது மட்டுமல்லாமல்  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களை கைதும் செய்துள்ளது. 

காவிகள் அராஜகம் செய்வதை தடுக்க துப்பில்லாத காவல்துறை அதைக் கண்டித்து நடக்கும் போராட்டத்தை மட்டும் தடுக்க முயல்கிறது.

காவிகளின் பினாமிதான் தமிழக ஆட்சி என்பதை எடுபிடி எடப்பாடி மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டுள்ளது. 

வெள்ள உதவி - ரொம்ப பழசு - "முடியல"



நேற்று காலை எட்டு மணி அளவில்  முதன் முதலில் இந்த செய்தி (நீல நிறத்தில் இருப்பது) வாட்ஸப்பில் ஒரு குழுவில் வந்தது. அதற்கு அடுத்த படியாக "இந்த செய்தி இரண்டு வருடங்களுக்கு முந்தையது" என்றும் இன்னொரு செய்தி வந்தது.

அப்போது  தொடங்கி சில நிமிடங்கள் முன்பு வரை அந்த முதல் செய்தி ஒரு ஐம்பது முறையாவது வந்திருக்கும். "இது இரண்டு வருடத்துக்கு முந்தைய செய்தி" என்று பதிலளித்துக் கொண்டே இருந்தேன். 

"முடியல" என்று வடிவேலு பாணியில் புலம்பும் அளவிற்கு நம் மக்கள் வந்ததை பகிர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம் பாராட்டுக்குரியது. ஆனால் வந்த செய்தியின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொண்டு பகிர்வது நல்லது. 

ஆர்வம் நல்லது. 
அது ஆர்வக்கோளாறாக வேண்டாம்.





1. இன்று மழை வெள்ளத்தால் தங்கும் வசதியில்லாத சென்னை வாழ் சகோதர, சகோதரிகள், சத்யம் சினிமா தியேட்டர் (ராயபேட்டை) இரவு முழுக்க திற‌ந்திருக்கும். இன்றிரவு தங்குவதற்கு உபயோகித்துக்கொள்ளுங்கள். தயவு செய்து இதனை உடனடியாக ஷேர் செய்யவும் அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள்.

SATHYAM CINEMAS (ROYEPETTAH) will be opened for everyone tonight for stay,do get in touch .

2. ஜிஎஸ்டி சாலையில் சிக்கிக்கொண்டிருப்போருக்கு எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் தங்கிக்கொள்ள அந்த நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. உணவும் வழங்கப்படுகிறது. உதவி தேவைப்படுவோர் இந்தத் தொலைபேசிக்குத் தொடர்புகொள்க: திரு ஜொகானி 9840042152.
இதனை உடனடியாக ஷேர் செய்யவும் அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள்.
SRM University is accommodating ppl in their buildings Whoever standed in GST pls go there
For Food 
Contact Mr.Jogani 9840042152

3. மழையில் பாதிக்கப்பட்டு கைக்கழந்தைகளுடன் அவதிப்படுபவர்கள் (ஏற்கனவே இங்கு சிலர் இருப்பதால்) 10 முதல் 15 நபர்கள் மேலும் தங்கலாம்.
இடம் டி.யூ.ஜே தலைமை அலுவலகம், 12,குமரன் காலனி மெயின் ரோடு, வடபழனி, சென்னை.
மேலும் தகவல் அறிய 044 23621494.

டி.எஸ்.ஆர்.சுபாஷ்.

4. மிக அவசரம்.
சென்னை மாநகரத்தின் தற்போதைய நிலை மிகவும் அச்சுறுத்துகிறது.
யார் காரணம்? எதனால் இப்படி ஆனது? யார் பொறுப்பு? என்ற எல்லா கேள்விகளையும் தற்போதைக்கு தவிர்த்து விடுவோம். பேரிடருக்கும், பெரும் நாசத்துக்கும் இந்த அரசியல் உதவாது.
அரசை குறை சொல்வதை தவிர்த்து, அவரவரால் முடிந்த சிறிய உதவிகளை, பிறருக்கு செய்வோம். இது உயிர் பிரச்சனை.
பாலவாக்கத்துக்கு அருகில் இருப்பவர்களுக்கு உணவு, இருப்பிடம், மருத்துவ உதவி தேவையெனில் எனது தங்கை Dr. Latha & அவர் கணவர் Dr. Sai kishore ஐ தொடர்பு கொள்ளலாம்.
தொடர்பு எண்கள் : 9840017184 , 04424490073
இரவு, பகல் எந்நேரமும் உதவிடக் காத்திருக்கின்றனர். நண்பர்கள் இந்தச் செய்தியை பகிர்ந்து கொள்ள 
வேண்டுகிறேன்.

5. உணவின்றி வாடுபவர்கள் தொடர்பு கொள்க: 5000 உணவு பொட்டலங்கள் தயார் நிலையில் உள்ளது. 
தொடர்புக்கு: vineet Jain 9840426263 , Gaurav Jain 9841062626 000 (சென்னை)

food pkts are ready for distribution

Pls contact 
vineet Jain 9840426263 
Gaurav Jain 9841062626

6. Indian Navy - 10 of their expert divers & rescue personnel with boats at Gandhi Nagar, Adyar.Contact 04425394240 Navy helpline

அடையார்-காந்தி நகர் பகுதியில் வெள்ளம் அபாயத்தில் சிக்கிக்கொண்டவர்கள் 04425394240 என்ற கடற்படை உதவி எண்ணில் உதவிக்கு அழைக்கவும்.

7.   75 முதல் 100 பேர் தூங்கும் இடமும் 1000 பேருக்கு உணவும் தயாராக உள்ளது நுங்கம்பாக்கத்தில் Call 7092020207

8. மின் கம்பிகள் அறுந்து விழந்தால்.இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்:1077

9.  பாரிஸ் கார்னர் பகுதியில் 10 பேர் தங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொடர்புக்கு 8939141233

10. மிதக்கும் படகு உதவி தேவையெனில் அழைக்கவும்..
இராயபுரம் 9445190005
திருவிக நகர் 9445190006
அம்பத்தூர் 9445190007
அண்ணா நகர் 9445190008

#இந்த பதிவுகளுக்கு தயவு செய்து லைக்குகள் தேவையில்லை. அதிகமாக ஷேர் செய்யுங்கள். யாருக்கு தெரியும், நீங்கள் செய்யும் ஏதேனும் ஒரு ஷேரினால் கூட, யாரவது ஒருவராவது கூட பயன் பெற இயலும் தோழர்களே. அதிகம் ஷேர் செய்யுங்கள்.