Saturday, January 31, 2026

எல்லா கவர்னருக்கும் இதே பிழைப்புதானா?

 


தமிழ்நாடு சட்டபேரவையிலிருந்து ஆரெஸெஸ் ரெவி ஓடிப் போன கதை நமக்குத் தெரியும்.

ரெவி மட்டுமல்ல,

கேரள ஆட்டுத்தாடி ஓடிப் போகவில்லை. ஆனால் மாநில அரசு தயாரித்த உரையில் சில ப்த்திகளை படிக்கவில்லை.

கர்னாடக ஆட்டுத்தாடியும் ஏற்கனவே தான் கொண்டு வந்திருந்த ஒரு அறிக்கையை படித்து விட்டு இரண்டு நிமிடங்களில் ஓடி விட்டது.

பாஜக ஆளாத மாநிலங்களின் ஆட்டுத்தாடிகள் அத்தனை பேரும் "ஒசாமா பின் லேடனின் விலாசம் கேட்கும் மனநிலம் பாதிக்கப்பட்டவர்கள்" போல சட்டப்பேரவையிலிருந்து ஓடுவதையே பிழைப்பாகக் கொண்டுள்ளனரே!

Friday, January 30, 2026

மகாத்மாவை மறவோம். கோட்சேவையும்

 


இந்தியாவின் மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சூழ்ச்சியால், கோழை சாவர்க்கர் போட்டுக் கொடுத்த திட்டத்தின் படி கோட்சேவின் தோட்டாக்களுக்கு மகாத்மா காந்தி தன் இன்னுயிரை அர்ப்பணித்த நாள் இன்று.

விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகிகளின் கையில் ஆட்சி இருக்கும் கொழுப்பில் இன்று ஏராளமான பதிவுகளை பார்க்க முடிந்தது.

மகாத்மாவை கொச்சைப்படுத்தும் பதிவுகள் மட்டுமல்ல அது, கொலைகாரன் கோட்சேவை தேசப்பிதா என்று வர்ணிக்கும் அளவிற்கு எழுதப்பட்ட பதிவுகள் அது.

அவர்கள் விரும்பியபடி இந்தியா 'ஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரம்" என்று மாறாமல் இன்னும் பன்முகத் தன்மையோடு நீடிப்பதற்கான அடித்தளம் இட்டவர்கள் காந்தியும் நேருவும் என்பதால்தான் அவர்கள் இறந்து எத்தனையோ வருடங்கள் கடந்த பின்னும் இன்னும் வெறுக்கிறார்கள்.

இந்தியாவின் சிறப்பான பன்முகத்தன்மையையும் மத நல்லிணக்கத்தையும் மத சார்பின்மையையும் பாதுகாப்போம் என்று உறுதியேற்போம். அதன் மூலம் மகாத்மாவையும் மறக்காமல் இருப்போம். கோட்சே ஒரு கடைந்தெடுத்த கயவன் என்பதை அம்பலப்படுத்தும் ஒரு நூலின் அறிமுகத்தை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

கோட்சே கூட்டத்தின் சூழ்ச்சியும் சதியும்.

 



 

நூல் அறிமுகம்

 

நூல்                                                     : நாதுராம் கோட்சே –    உருவான வரலாறும்

                                                                இந்தியா குறித்த அவனது பார்வையும்

 

ஆசிரியர்                                          : திரேந்திர கே ஜா

தமிழில்                                             :  தமிழில் இ.பா.சிந்தன்

வெளியீடு                                         : எதிர் வெளியீடு

                                                                பொள்ளாச்சி

விலை                                                : ரூபாய் 500.00

 

 

ஆன்மீக அரசியல், நிழல் ராணுவங்கள் என்று சங் பரிவார அமைப்புக்களை, அவற்றின் சதிகளை செயல்பாடுகளை அம்பலப் படுத்திய நூல்களை எழுதிய திரேந்திர.கே.ஜா அவர்களின் நூல். முந்தைய நூல்களைப் போலவே இந்நூலும் பெல்ஜியம் தோழர் இ.பா.சிந்தன் அவர்களின் கடின உழைப்பால் நம்மிடம் தமிழில் பேசுகிறது.

 

இந்நூல் இரு பகுதிகளாக எழுதப்பட்டுள்ளது. முதல் பகுதி “சூழ்ச்சி” என்றும் இரண்டாம் பகுதி “சதி”  என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

 

முதல் பகுதியின் பக்கங்களை தள்ளுவதற்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது. அதற்கு நூலாசிரியரோ, மொழி பெயர்ப்பாளரோ காரணம் அல்ல. ஏனென்றால் முதல் பகுதி கோட்சேவின் ஆரம்ப கால வாழ்வை சொல்கிறது. கோட்சேவின் மந்தம் நூலிலும் எதிரொலிக்கிறது.  எந்த ஒரு வேலையையும் செய்ய உடல் வணங்காத, ஆனால் பிரபலமாக வேண்டும் என்ற ஆசை கொண்ட மனிதனாகவே கோட்சே இருந்திருக்கிறான்.

 

மகாத்மா காந்தியின் சட்ட மறுப்பு இயக்கத்தில் கலந்து கொண்டவனின் வாழ்க்கை சாவர்க்கரின் சகவாசத்தால் திசை மாறுகிறது.  மதவெறி மனதில் ஊறுகிறது. மகாராஷ்டிராவின் பேஷ்வாக்களைப் போல இந்து ராஜ்ஜியம் அமைக்க வேண்டும் என்று ஆசைப்படும் கோட்சே ஆர்.எஸ்.எஸ் மற்றும் சாவர்க்கரின் இந்து மகா சபை ஆகிய இரு அமைப்புக்களிலும் செயல்படுகிறான்.

 

ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகா சபை ஆகிய இரண்டும் தனித்தனி அமைப்புக்கள் போல காட்சியளித்தாலும் இரண்டின் நோக்கங்களும் ஒன்றே என்பதையும் இந்துக்கள் மட்டுமே இந்தியக்குடிமகனாக இருக்க வேண்டும் என்பதையும் இதர மதச் சிறுபான்மையினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இரண்டு அமைப்பிறகும் வேறுபாடுகள் கிடையாது என்பதை நூல் விரிவாக பேசுகிறது.

 

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பாடப்படும் பாடலோடுதான் கோட்சே இந்து மகா சபை கூட்டத்தை துவக்குவான் என்பதையும் ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களையும் நடத்துவான் என்பதும் ஆர்.எஸ்.எஸ் நிறுவனரான ஹெட்கேவர் இந்து மகா சபையின் துணைத்தலைவர் என்பதும் இரண்டு அமைப்புக்களும் வேறல்ல என்பதை உணர்த்தும்.

 

இந்து ராஜ்ஜியம் அமைவதற்கு காந்திதான் தடையாக இருப்பார் என்று கோட்சே நீண்ட நாட்களாகவே கருதி வந்தான் என்பதை ஆதாரங்களோடு எடுத்துரைக்கும் நூல், காந்தியே தற்கொலை செய்து கொள் என்று மகாத்மா காந்தி நடத்திய ஒரு போராட்டத்தின் போது கூச்சலிட்டான் என்பதையும் சொல்கிறது.

 

கோட்சேவைப் பற்றி மட்டும் இந்த நூல் பேசவில்லை, கோட்சேவுடன் மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் தூக்கிலிடப்பட்ட நாராயன் ஆப்தே, இருவருக்குளான நட்பு ஆகியவற்றைப் பற்றியும் பேசுகிறது. கோட்சே அடிப்படையில் பெண்களுக்கு எதிரானவன் என்றும் நாராயண் ஆப்தே பெண்களை வஞ்சிப்பவன் என்பதும் தெரிகிறது. சாவர்க்கரின் அரசியல் (மன்னிப்பு உட்பட) நூல் விவரிக்கிறது.  கோட்சே பத்திரிக்கையாளர் அவதாரமெடுத்து நச்சு பரப்பியதையும் நூல் முழுமையாக பதிவு செய்துள்ளது. அதிலே பிரச்சினை வந்த போது சாவர்க்கர் பாணியில் மன்னிப்பு கேட்கவும் அபராதம் செலுத்தவும் அவன் தயங்கவில்லை

 

நூலின் இரண்டாம் பகுதி ஒரு துப்பறியும் நூலுக்கு இணையான வேகத்தில் செல்கிறது. இந்தியாவை இந்து நாடாக உருவாக்க வேண்டும் என்பதற்காக மத வெறி கொண்டலைந்த கோட்சே ஆப்தே கூட்டாளிகள், ஜின்னாவை கொல்ல வேண்டும், பாகிஸ்தான் செல்லும் ரயிலை தகர்க்க வேண்டுமென்று திட்டமிட்டு நிதி சேகரிக்கிறார்கள், ஆனால் அவர்களால் அது முடியவில்லை அதனால் காந்தியை கொலை செய்ய திட்டமிட்டு அதற்காக ஆட்களை சேர்க்கிறார்கள்.

 

ஆப்தே இத்திட்டத்தில் தீவிரமாக இருக்க கோட்சேவோ பட்டும் படாமல்தான் இருக்கிறான். சாவர்க்கரை சந்தித்து ஆசி வாங்கிக் கொண்டு புறப்படுகின்றனர். மதன் லால் பக்வா என்பவனை அவனுக்கு தெரியாமலேயே காந்தியை கொலை செய்ய திட்டமிடுகின்றனர். கடைசி நேரத்தில் அவன் பயந்து போய் பின் வாங்க, கையெறி குண்டை அவன் வீசினால்  அந்த குழப்பத்தில் மற்றவர்கள் சுட்டு விடுவார்கள் என்று முடிவு செய்யப்படுகிறது. ஜனவரி 20 அன்று பக்வா குண்டை வீச, மற்றவர்கள் எதுவும் செய்யாமல் முயற்சி தோற்றுப் போகிறது. அவன் மட்டும் மாட்டிக் கொள்கிறான்.

 

அதன் பின்பு மகாத்மா காந்தியை சுடுவதென்று கோட்சே முடிவு செய்கிறான். அந்த கொடுமையையும் நிகழ்த்துகிறான். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த வீரர்களின் வழக்கில் மக்களின் ஆதரவு கிடைத்தது போல தனக்கும் இந்துக்களின் ஆதரவு கிடைத்து பெரிய ஆளாகி விடலாம் என்பதுதான் கோட்சேவின் எண்ணம். ஆனால் அது நடக்கவில்லை. மக்களின் எதிர்ப்பு மட்டுமே கிடைத்தது.

 

அவனுக்கும் ஆர்.எஸ்.எஸ் ற்கும் சம்பந்தம் கிடையாது என்று சொன்னதெல்லாம் பொய் என்பது பின்பு நடைபெற்ற சோதனைகளில் கிடைத்த ஆவணங்களின் மூலம் அம்பலமானது என்பதை நூல் பதிவு செய்துள்ளது. அப்படி ஒரு சம்பவம் நடக்கப்போவது முன்பே தெரியும் என்பதை ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வாக்கர் ஒரு கூட்டத்தில் பேசிய போது பூடகமாக தெரிவித்துள்ளார் என்பதையும் நூல் பதிவு செய்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் பட்டியலையோ வரவு செலவு கணக்குகளையோ பராமரிக்காமல் இருப்பது இது போன்ற சந்தர்ப்பங்களில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிப்பதற்குத்தான் என்கிறது நூல்.  கோட்சே வைத்திருந்த கணக்கு நோட்டு கிடைத்ததால் அவனது கூட்டாளிகள் சிக்கிக் கொண்டனர் என்பதோடு இணைத்துப் பாருங்கள்.

 

காந்தியின் கொலை வழக்கின் போது  யாரோ ஆங்கிலத்தில் தயாரித்து கொடுத்த உரையைத்தான் கோட்சே படித்தான் என்றும் அதன் மூலம் தன்னை தியாகியாக காண்பித்துக் கொள்ள முயன்றான் என்பதையும் நூல் உணர்த்துகிறது.  தூக்கு மேடை ஏறுவதற்கு முன்பு கூட கடைசியாக கோட்சே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரார்த்தனை பாடலை கோட்சே பாடியிருக்கிறான். அகண்ட பாரதம் உருவான பின்பே சிந்து நதியில் தன் அஸ்தியை கரைக்க வேண்டும் என்று கோட்சே சொன்னதால் அது இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று பரப்பட்டுள்ள செய்தியும் ஒரு கட்டுக்கதையே என்பதை நூல் சொல்கிறது. எப்படி? நூலை படித்து விடுங்களேன்.

 

இந்தியாவில் இந்துத்துவ கொள்கைகளின் தோற்றத்தையும் அது எப்படி மகாத்மா காந்தியின் கொலைக்கு இட்டுச் சென்றது என்பதையும் தன்னை ஒரு நாயகனாக உருவாக்கிக் கொல்லவே கோட்சே காந்தியை கொலை செய்தான் என்பதையும் மிகவும் விளக்கமாக சொல்கிறது இந்நூல்.  மொழியாக்கம் என்ற உணர்வே வராத அளவிற்கு சிறப்பாக தமிழில் தந்துள்ள தோழர் இ.பா.சிந்தனுக்கும் கருத்துக்களை முடக்கும் ஆட்சியாளர்கள் இருப்பினும் இந்த நூலை வெளியிட்ட எதிர் வெளியீடு தோழர் அனுஷிற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

 

பின் குறிப்பு : திருமணம் ஆனவன் என்பதை மறைத்து நாராயண் ஆப்தேவால் ஏமாற்றப்பட்ட பெண் மனோரமா என்ற பெண்ணும் மதன்லால் பக்வாவை மிகவும் நேசித்த செவாந்தி என்ற பெண்ணும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். அவர்களின் துயரத்தை அடிப்படையாகக் கொண்டே புனைவுகளை உருவாக்க வேண்டுமென்ற தூண்டுதல் வருகிறது.

 

பொறுப்பில்லாமல்,வெறுப்பில் பேசலாமா யுவர் ஆனர்?

 


தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களும் ஓய்வுக்குப் பிந்தைய பதவிக்கான நுழைவுத் தேர்வை எழுதி விட்டார் போல. வெறுமனே அரசை மட்டும் நம்பாமல் வெரும் வெளி வேண்டும் என்பதற்காக முதலாளிகளின் மனம் குளிரும் படி பேசியுள்ளார்.


மிக மிக அபத்தமாகவும் வன்மமாகவும் உளறியுள்ளார்.  இவர் சொன்ன அபத்தத்தை  சங்கிகள் பலர் வாந்தியெடுப்பார்கள். அப்படிப்பட்ட சுரண்டல்வாதிகள் சாம்சங் போராட்டத்தின் போதும் வாந்தி எடுத்தனர். அந்த மூடர்களுக்கு அறிவு வர வேண்டும் என்பதற்காக அப்போது எழுதிய மூன்று பதிவுகளின் இணைப்புக்கள் கீழே உள்ளது.

தொழிலாளர்களின் போராட்டம் - சங்கிகளின் பொய்க்கணக்கு . . .

டாடாவை வெளியேற்றிய குற்றவாளிகள் யார்?

தொழிற்சங்கம் இல்லாவிட்டால் என்ன ஆகும் என்பதை காலம் உடனடியாகவே உரக்கச் சொன்னது.

அது என்ன?

கீழேயுள்ள இணைப்பை பாருங்கள்.

தொழிற்சங்கங்கள் இருந்திருந்தால் ??? சங்கிகளே சொல்லுங்கள்

தலைமை நீதிபதி அவர்களே, தொழிற்சங்கப் போராட்டங்களால் எத்தனை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன? உங்களிடம் விபரம் உள்ளதா? ஆதாரங்கள் உள்ளதா? சங்கிகள் போல வாய்க்கு வந்ததை உளறக்கூடாது.

எங்கள் எல்.ஐ.சி நிறுவனத்தை அழிக்க ஆட்சியாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்கின்றனர். அதனை இன்று வரை பாதுகாத்து வருவது எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்தான். பல நிறுவனங்களுக்கும் காவல் அரண்  தொழிற்சங்கங்கள்தான். 

வீடுகளில் வேலை பார்ப்பவர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கப் படக்கூடாதா? அப்படி நிர்ணயிக்கப்படுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? ஒரு வேளை அப்படி நிர்ணயிக்கப்பட்டால் அந்த ஊதியம் கொடுக்கப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பு உங்களுக்கு கிடையாதா? அரசு நிர்ணயிக்கும் ஊதியத்தை கொடுக்காமல் ஏமாற்றும் மோசடிப் பேர்வழிகளை கோர்ட்டுக்கு இழுப்பதில் என்ன தவறு இருக்கிறது?

மோடி போல, ஆட்டுக்காரன் போல நீங்கள் பொறுப்பில்லாமல் பேசக் கூடாது. 

நீங்கள்  படித்தவர். சுயேட்சையான அமைப்பு ஒன்றின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்.

இனியாவது உங்கள் பதவிக்குரிய கண்ணியத்தை காத்திடுங்கள். 

Thursday, January 29, 2026

எது உமது வாய் எடப்பாடி?


 
கரூர் நெரிசல் மரணங்கள் நிகழ்ந்த போது தவெக தற்குறிகள் போல செந்தில் பாலாஜி மீது பழி போட்டு, அதையே சட்டப்பேரவையிலும் பேசி, சி.பி.ஐ விசாரணை கேட்டு, ஏதோஒரு கூட்டத்தில் தவெக கொடியை ஒருவர் (அவர் அதிமுக ஆள் என்பது பிறகு தெரிந்த உண்மை) காண்பித்த போது புளகாங்கிதம் அடைந்த எடப்பாடி அவர்கள் இன்று தவெக வை தாக்கியுள்ளார்.



இரண்டில் உமது நிஜ வாய் எது எடப்பாடி அவர்களே?

யாருங்க அது! இரண்டுமே நாற வாய் என்று சொல்வது 😜😜😜😜😜😜😜

அரசியல் சாசனத்தை மதிக்க மாட்டீங்களா ஜட்ஜய்யா?

 


நம்ம திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர் உதிர்த்த லேட்டஸ்ட் அரிய முத்து கீழே உள்ளது.


பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே பேதம் கற்பிக்கிற, பெண்களை ஒடுக்குகிற, ஜாதிய சிந்தனையை ஊக்குவிக்கிற, அறிவியல் சிந்தனைக்கு எதிரான சனாதன தர்மம், அடிப்படையில் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்படுவேன் என்று வெளிப்படையாகவே சொல்கிற திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர், நீதிபதி பதவியில் நீடிக்க அருகதை அற்றவர்.

கார் விபத்து வழக்கில் தன் சகோதரிக்காக ஆள் மாறாட்டம் செய்த குற்றவாளியை, அவர் வேதம் அறிந்தவர் என்பதால் விடுதலைக்கு வழி வகுத்தேன் என்று சொன்னவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.


Wednesday, January 28, 2026

அது ஆக்ஸிடென்ட் தானா?

 


மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் சென்ற தனி விமானம் விபத்துக்குள்ளாகி இறந்து போயுள்ளார்.


சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அவர் பாஜக கூட்டணியில் போட்டியிடாமல் தன் சித்தப்பாவின் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளார்.

அதனால் கேரட்கிறேன்.

இது விபத்துதானே?

Tuesday, January 27, 2026

அதானி டிவிக்காரன் கணக்கே தனிதான் . . .

 




அடுத்த கேரளா முதல்வர் யாரென்று அதானி முதலாளியாக உள்ள என்.டி. டிவி ஒரு கணக்கு போட்டுள்ளது.


அதில் 16.9 % ஐ விட 14.7% பெரியதாக இருக்கிறது.

அது மட்டுமல்ல மார்க்சிஸ்ட் கட்சிக்கு இரண்டு முதல்வர், காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு முதல்வர் என்று பிரித்து பித்தலாட்டம் செய்துள்ளது.

அப்படி செய்தும் பாஜக முதல் இடத்திற்கு வர முடியலையே அதானி!

எப்படி இருந்த என்.டி, டிவி இப்படி ஆயிடுச்சே!

Monday, January 26, 2026

ஜெயலலிதா ஆகப்போகிறாரா விஜய்?

 


கீழேயுள்ள செய்தியை பாருங்கள்


2001 சட்டப்பேரவை தேர்தலின் போது டான்சி வழக்கிலும் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கிலும் ஏ1 ஜெயலலிதாவிற்கு தண்டனை கொடுக்கப்பட்டு இருந்தது. அவர் வேட்பு மனு தாக்கல் செய்தால் அது கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என்பது தெளிவாகவே தெரிந்தது.

அதனால் அவர் என்ன செய்தார்?

ஆண்டிப்பட்டி, புதுக்கோட்டை, புவனகிரி, கிருஷ்ணகிரி என்று நான்கு தொகுதிகளில் வேட்பு மனு செய்தார்.

அதனால் அவர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதற்காக நிராகரிக்கப்பட்டது என்பதற்காக இரண்டிற்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ததால் நிராகரிக்கப்பட்டது என்று வரலாற்றில் பதிவாகி விட்டது.

அது போல

தெர்தலில் போட்டியிட்டு தோற்றார் என்று வரலாற்றில் பதிவாகுவதற்கு பதிலாக வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் போட்டியிடவே முடியவில்லை என்று வரலாற்றில் பதிவு செய்ய விரும்புகிறாரா விஜய்?

புஸ்ஸி அதைத்தான் சொல்கிறாரா?

கொடி பறக்கட்டும்

 


இந்தியராய் பிறந்த அனைவருக்கும்
சமூக நீதி,
பொருளாதார சமத்துவம்,
அரசியல் சமத்துவம்
கிடைத்திடவும்


கருத்துரிமை, 
எழுத்துரிமை,
பேச்சுரிமை
வழிபாட்டுரிமை,
கிடைப்பதை உறுதி செய்திடவும்

சமத்துவமும் சம வாய்ப்பும் 
அனைவர் மத்தியில் நிலவிடவும்
உறுதியேற்ற
சோஷலிச, மதச்சார்பற்ற, இறையாண்மை கொண்ட,
இந்திய ஜனநாயகக் குடியரசு நாட்டின்
மூவர்ணக்கொடி 
அரசியல் சாசனத்தின் அனைத்து விழுமியங்களையும்
பறை சாற்றி உயரத்தில் பறக்கட்டும்.

பாழ்படுத்த நினைக்கும் வீணர்களை
வீழ்த்தட்டும் இந்திய ஜனநாயகம்.
காவிக்கொடியை புறந்தள்ளி 
ஜனநாயகத்தின் பாதுகாவலர்களின்

செங்கொடியும் பட்டொளியும் வீசி பறக்கட்டும்.

மீள் பதிவு 

Sunday, January 25, 2026

கடைசியில் எஸ்கேப்பான மாலன்

 


ரொம்ப நாள் கழித்து மாலன் மீண்டும் மாட்டிக் கொண்டார்

மூத்த எழுத்தாளர் திரு வண்ணதாசன், துக்ளக் பத்திரிக்கையின் முன்னாள் துர்வாசர், எழுத்தாளர் வண்ணநிலவனின் ஒரு முகநூல் பதிவு பற்றி தன் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டிருந்தார்.


சங்கியான வண்ணநிலவனுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்த மூத்த்த்த்த்த்த்த்த மாலன், பதிப்பாளர்கள் மீதும் வாசகர் மீதும் தனக்கிருந்த எரிச்சலை கொட்டினார்.



ஆஹா, தானா வந்து சிக்கினவரை சும்மா விடலாமா என்று சூடாக ஒரு கேள்வி கேட்டேன். 



இத்தோடு விட்டு விட முடியுமா?

சாகித்ய அகாடமியின் தமிழ்நாடு பொறுப்பாளராக இருந்த அவரை அது பற்றி கேள்வி கேட்காமல் விட்டு விட முடியுமா?  அந்த விவாதத்தை கீழே பாருங்கள்.



பாவம் மாலன்!

அரசின் நிலையை ஆதரித்தால் மானத்தை வாங்கி விடுவார்கள். கண்டித்தால் பிழைப்பு போய் விடும்.  அது புரிந்ததும் போனால் போகட்டும் என்று ஒரு சிரிப்போடு நிறுத்திக் கொண்டு விட்டேன்.


Saturday, January 24, 2026

புது வசந்தம் சார்லியும் தவெக தற்குறியும்

 


புது வசந்தம் படத்தில் சித்தாரா, தன் பெயரை சுவரில் எழுதியதும் அதை "கெ ள ரி" என்று படிப்பார்.

அது சினிமாவுக்கான காமெடி, கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்து வருஷத்துக்கு முந்தைய காமெடி.

அந்த காமெடியை நிஜமாக்கியுள்ளார் ஒரு தவெக தற்குறி

நீங்களும் அந்த காமெடியை பாருங்கள்.

ஒரிஜினல் பதிவை எழுதியவரை தவெக தற்குறி,  தற்குறி கொத்தடிமை என்று சொன்னதுதான் மிகப் பெரிய கொடுமை.

தவெக கட்சியில் கூட யாருக்கோ கொஞ்சம் அறிவும் கூச்சமும் இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ள முடிந்தது. 

பிரான்ஸ் ராணியும் ரங்கராஜ் பாண்டேவும்

 


கீழே உள்ள காணொளியை முதலில் பாருங்கள்


இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்பட்டு விட்டது என்ற தோழர் கனகராஜ் அவர்களின் குற்றச்சாட்டிற்கு  வந்தே பாரத் ரயில்கள் இருக்கிறதே என்று சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டார்.

பிரான்ஸ் நாட்டு மக்கள் பிரெட் கிடைக்கவில்லையே என்ற துயரத்தை சொன்ன போது, பிரெட் இல்லையென்றால் என்ன கேக் சாப்பிடுங்கள் என்று ஆணவத்தோடு சொன்ன ராணி மேரி அண்டோனியாவிற்கும் ரங்கராஜ் பாண்டேவிற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.

திமிரெடுத்த ராணிக்கு கில்லட்டினில் சிரச்சேதம் கிடைத்தது. இந்தியா ஜனநாயக நாடு என்பதால் பாண்டேவின் தலை தப்பித்தது. 

Friday, January 23, 2026

நீதிபதியிடம் சில கேள்விகள்

 


சனாதன ஒழிப்பு என்றால் சனாதனத்தை பின்பற்றும் அனைவரையும் கொன்று விடுவது என்று புதிய அர்த்தம் சொல்லியுள்ள நீதியரசியால் என்னுடைய சில கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க முடியுமா?

"காங்கிரஸ் முக்த் பாரத்" என்பதை பாஜக பல வருடங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறது.

அதாவது காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பதை இலக்கு என்று சொல்கிறது. அப்படியென்றால் பாஜக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனைவரையும் கொன்று விட திட்டமிட்டுள்ளது என்று சொல்லலாமா?

கழகங்கள் அற்ற தமிழகம் என்பதை கொஞ்ச நாட்களுக்கு முன்பாக தமிழ்நாட்டு பாஜக சொல்லிக் கொண்டிருந்தது.

அப்படியென்றால் திமுக மற்றும் இப்போது பாஜகவின் அடிமையாக மாறியுள்ள அதிமுக ஆகிய இரண்டு கட்சி உறுப்பினர்களையும் ஒழித்து விட வேண்டும் என்று பாஜக சொன்னதா?

சனாதனம் என்பது ஒரு கருத்தியல்.  பிறப்பில் வேற்றுமை கற்பிக்கிற பிற்போக்குக் கருத்தியல், பெண்களை அடிமைகளாக அடக்கியாள துடிக்கும் கருத்தியல், மாற்று மதங்களுக்கு எதிரான கருத்தியல்.

சனாதனம் என்ற கருத்தியலை ஒழிப்போம் என்றால் அதனை சனாதனத்தை பின்பற்றுபவர்களை ஒழிப்பது என்ற புனிதமான புரிதல் உங்களுக்கு எந்த போதிமரம் கொடுத்தது?

உங்களுக்குத் தெரியுமா?

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்களின் கோட்பாடுகளை உருவாக்கிய கோல்வால்கரின் படி திரிசூலத்தின் மூன்று முனைகள் அழிக்க வேண்டியவர்கள் முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், கம்யூனிஸ்டுகள் என்று எழுதியே வைத்துள்ளார் என்று.

அவரது சடலத்தை தோண்டி எடுத்து நடவடிக்கை எடுப்பீர்களா? 

நீதிபதிக்கு மாறுதல் மட்டுமே என்று மகிழுங்கள்

 


நவம்பர் 2024 ல் உத்திர பிரதேசத்தில் சம்பல் என்ற இடத்தில் ஒரு கலவரமும் துப்பாக்கி சூடும் நடந்தது.

ஐநூறு ஆண்டு பழமையான ஒரு மசூதி, கோயிலை இடித்து கட்டப்பட்டதாக சங்கிகள் சர்ச்சை எழுப்ப, ஆதித்ய சிங் மாவட்ட நீதிபதி அந்த மசூதியை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். 

அந்த ஆய்வு செய்ய மசூதி நிர்வாகத்தினர் எதிர்த்த போது, சங்கிகள் கலவரம் செய்தனர். போலீஸ் மசூதியை பாதுகாக்க நின்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். மூன்று இஸ்லாமியர்கள் கொல்லப் பட்டனர். ஏராளமானவர்கள் காயப்பட்டனர்.

துப்பாக்கிச்சூட்டில் இறந்த ஒருவரின் தந்தை தொடுத்த வழக்கின் அடிப்படையில் மாவட்ட நீதிபதி, போலீஸாரின் வெறித்தனமான தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய அனுஜ் சவுத்ரி என்ற ஏசிபி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யச் சொல்லி மாவட்ட நீதிபதி சுதீர் என்பவர் உத்தரவிடுகிறார்.

காவல்துறை அதை ஏற்க முடியாது என்ற நிலை எடுக்கிறது. திருப்பரங்குன்றம் தீர்ப்பாளருக்காக ஒப்பாரி வைத்த சங்கிகள் இந்த விஷயத்தில் என்ன செய்தார்கள் தெரியுமா?

நீதிபதி சுதீரை இட மாற்றம் செய்து விட்டார்கள்.

நீதிபதி லோயாவிற்கு நிகழ்ந்தது இவருக்கு நடக்காதது மகிழ்ச்சியே.

மாட்டுக்குண்டர்களால் கொல்லப்பட்ட முகமது அக்லக் வழக்கில் உண்மையை பதிவு செய்த இன்ஸ்பெக்டர் போல கொல்லப்படாமல் மாறுதலோடு நிறுத்திக் கொண்டது மொட்டைச்சாமியார் ஆட்சி.

இன்னொரு செய்தி தெரியுமா?

சுதீர் இடத்திற்கு வந்தது யார் தெரியுமா?

மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்ட  அதே ஆதித்ய சிங் தான் . . .



Thursday, January 22, 2026

வடிவேலு வசனம்தானே எடப்பாடி?

 


"என்னம்மா கண்ணு" என்ற திரைப்படத்தில் ஸ்த்ரீ லோலனான சத்யராஜ், எஸ்.பி வடிவேலை புரோக்கர் வடிவேலு என்று நினைத்து அசிங்கம் அசிங்கமாக திட்டுவார், வடிவேலுவின் மனைவி கோவை சரளாவையும் அசிங்கமாக பேசுவார்.

சத்யராஜ் போனதும் வடிவேல் கோவை சரளாவிடம்

"அவன் என் ஃப்ரெண்டு. படிக்கற காலத்துலேயே அவன் குடும்பத்தை நான் அசிங்கமா பேசுவான். அவன் என் குடும்பத்தை அதை விட கேவலமா பேசுவான். இதை நாங்க ஒரு பொழுது போக்காவே வச்சிருக்கோம்"

உங்களோடு கூட்டணி வைப்பதை விட தூக்கில் தொங்கலாம் என்று சொன்ன டி.டி.வி.தினகரனோடும் டயர் நக்கி என்ற அன்புமணியோடும் கூட்டணி வைத்துள்ளீர்களே, அவர்கள் பேசியது உங்களை பாதிக்கவில்லையா என்று கேட்டால்

வடிவேலின் வசனத்தைத்தானே சொல்வீர்கள் வடிவேல்!

வேறு என்ன வழி உங்களுக்கு இருக்கிறது !!!!

தீர்ப்பு அபத்தமானது.

 

சனாதன ஒழிப்பு தொடர்பான் தீர்ப்பின் விபரங்களை படிக்கும் போதே மிகவும் அபத்தமாக இருப்பதாக தோன்றியது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு, இத்தீர்ப்பை அபத்தமானது என்ற வார்த்தையை பயன்படுத்தி எதிர்வினை ஆற்றிய போது மனதுக்குள் கொஞ்சம் நிறைவாகவே இருந்தது.

நீதிபதி அவர்களிடன் நானும் கொஞ்சம் கேள்விகளை கேட்க வேண்டும்.

அவை நாளை . . .




சனாதன ஒழிப்பு பேச்சு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதியின் தீர்ப்பு அபத்தமானது!


பாஜக BJP Tamilnadu தலைவர் அமித் மாளவியாவின் வன்முறை தூண்டும் பேச்சுக்கு எதிராகப் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

"சனாதன ஒழிப்பு" பற்றி தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் Udhayanidhi Stalin அவர்கள் தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் முற்போக்கு மற்றும் எழுத்தாளர் சங்க தமுஎகச மாநிலக்குழு மாநாட்டில் பேசியது குறித்து சமூக வலைதளத்தில் எதிர்வினை ஆற்றிய அமித் மாளவியா 80 சதவிகிதமான மக்களை இனப் படுகொலைக்கு ஆளாக்க சொல்கிறீர்களா? என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு எதிராகவே முதல் தகவல் அறிக்கை திருச்சி நகர காவல் துறையால் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்தது.

அந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்துள்ள மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தனி நீதிபதி அத்தீர்ப்பில் கூறியுள்ள கருத்துக்கள் நீதி சார்ந்ததாகவோ, சமூக யதார்த்தங்களை உள்வாங்கியதாகவோ, அரசியல் சாசனத்தின் விழுமியங்களுக்கு உட்பட்டதாகவோ இல்லையென்பதை அழுத்தமாக சுட்டிக்காட்டுகிறோம். மிகவும் தவறான, ஆபத்தான விளக்கத்தை நீதிபதி முன்வைத்து இருக்கிறார்.

“முழு வழக்கும் ‘ஒழிப்பு’ (ozhippu) என்ற சொல்லைச் சுற்றியே அமைகிறது; அந்தச் சொல் மிகவும் முக்கியமானது. ‘அழித்தல்’ (abolish) என்ற சொல், ஏற்கனவே உள்ள ஏதோ ஒன்று இருக்கக் கூடாது என்பதைக் குறிக்கிறது. இதை தற்போதைய வழக்கிற்கு பொருத்தினால், சனாதன தர்மம் இருக்கக் கூடாது என்றால், சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களும் இருக்கக் கூடாது என்பதைக் குறிக்கும். சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஒரு மக்கள்குழு இருக்கக் கூடாது என்றால், அதற்கான சரியான சொல் ‘இனப்படுகொலை’ (genocide) ஆகும். சனாதன தர்மம் ஒரு மதமாக இருந்தால், அது ‘மதப்படுகொலை’ (religicide) ஆகும். மேலும், சூழல் அழிப்பு (ecocide), உண்மையழிப்பு (factocide), பண்பாட்டு அழிப்பு, பண்பாட்டு இனப்படுகொலை (culturicide) ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு முறைகள் மற்றும் தாக்குதல்களின் மூலம் மக்களை ஒழிப்பதையும் இது குறிக்கிறது. எனவே, ‘சனாதன ஒழிப்பு’ என்ற தமிழ்ச் சொற்றொடர் தெளிவாகவே ‘இனப்படுகொலை’ அல்லது ‘பண்பாட்டு அழிப்பு’ என்பதையே குறிக்கும். இத்தகைய சூழ்நிலையில், அமைச்சரின் பேச்சை கேள்விக்குள்ளாக்கிய மனுதாரரின் பதிவை வெறுப்பு பேச்சாகக் கருத முடியாது” என்ற நீதிபதியின் மேற்கண்ட விளக்கங்கள் மிகவும் அபத்தமானது.

ஒரு பிற்போக்கு சித்தாந்தத்தை, மக்களை சாதிகளாகப் பிரித்து உயர்வு தாழ்வு கற்பிக்கும் கருத்தியலை, சமூகத்தில் மேலாதிக்கம் செலுத்துபவர்களுக்காக சமூக ஏற்பை விதைப்பதற்கான ஒரு கருத்தாக்கத்தை ஒழிப்பது என்பது, எப்படி அதைப் பின்பற்றுபவர்களை ஒழிப்பதாக மாறும்? அண்ணல் அம்பேத்கர் அவர்கள் "சாதி ஒழிப்பு" பேசினார். அதன் பொருள் என்ன? சமூகத்தில் மனிதரை மனிதர் இழிவுப்படுத்துகிற, பாகுபடுத்துகிற, வேறுபடுத்துகிற சாதி என்கிற கட்டமைப்பு உடைத்தெறியப்பட வேண்டும் என்பதுதானே. ஒழிப்பு என்பதாலேயே படுகொலைக்கான தூண்டுதல் என்று சொன்னால் ஏற்க முடியுமா? வறுமை ஒழிப்பு, லஞ்ச ஒழிப்பு என்று கூறுவதெல்லாம் சம்பந்தப்பட்ட மக்களை ஒழித்துக் கட்டுவது என்று பொருள் கொண்டால் அமைச்சர்களே இத்தகைய வார்த்தைகளை பயன்படுத்துவது குற்றம் என்றாகிவிடும்.

இப்படிக் கூறிய நீதிபதி "80 சதவிகித மக்களை இனப்படுகொலை செய்ய சொல்கிறீர்களா?" என்று அமித் மாளவியா கேட்டது குற்றமல்ல. அவர் எழுப்பியது கேள்விதான். அவர் போராட்டம் எதையும் தூண்டவில்லை என்றெல்லாம் விளக்கம் கொடுத்து இருப்பது விந்தையாக உள்ளது. சனாதன தர்மத்திற்கும் நால்வர்ண முறைக்கும் சம்பந்தம் இருக்கிறதா இல்லையா? நால்வர்ண முறை தங்களை இழிவு செய்கிறது என்று கருதுபவர்கள் அத்தகைய முறை இருக்கக் கூடாது என்று பேசக் கூடாதா? "தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது" என்று அரசியல் சாசனம் கூறியது சனாதன தர்மத்திற்கு எதிரான பிரகடனம் இல்லையா?

சனாதனம் என்றால் நித்தியமானது, அழிவற்றது என்று கூறுவதே அறிவியலுக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் தடை அல்லவா? இந்த கருத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் பெண் கல்வி சாத்தியம் ஆகி இருக்குமா? சாதாரண அலுவலக ஊழியரில் துவங்கி நீதிபதிகள் வரை பெண்கள் அமர்ந்திருப்பது சனாதன கருத்தியலை எதிர்த்த போராட்டத்தின் விளைவு தானே.

ஆகவே, இந்த தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல. நீதிபதியின் கருத்துக்கள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, திரும்பப் பெறப்பட தேவையான நடவடிக்கைகளை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி CPIM Tamilnadu கேட்டுக் கொள்கிறது.



(பெ.சண்முகம்)

மாநில செயலாளர்

Wednesday, January 21, 2026

ஒடுறார், ஓடுறார், ஆரெஸெஸ் ரெவி ஓடுறாரு

 


1989 ல்  நாங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் கலந்து கொண்டோம். அப்போது பொதுத்துறை நிறுவனங்களில் மூன்று நாட்கள் வேலை நிறுத்தமும் நடைபெற்றது. வேலை நிறுத்த நாளன்று "ராஜீவ் காந்தியே ராஜினாமா செய்" என்று பாரத் பந்த் போராட்டமும் நடந்தது. 

நெய்வேலியில் என்.எல்.சி. தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த பேரணி எங்கள் எல்.ஐ.சி அலுவலகம் வழியாக சென்ற போது அப்பேரணியை வாழ்த்தி முழக்கங்கள் எழுப்பினோம். சி.ஐ.டி.யு பாலு என்று அழைக்கப் பட்ட (ஆனால் அப்போது  அவர் சி.ஐ.டி.யு வில் இல்லை) என்ற தோழர் எங்களுக்கு வித்தியாசமான முழக்கங்கள் எழுதித் தந்தார்.

அதில் நினைவில் இருந்த ஒரு முழக்கம்

ஓடுறார், ஓடுறார்

போன வாரம் டெல்லியில

இந்த வாரம் தண்டியில

அப்படியே ஓடிப் போய்

அரபிக்கடலில் குதிக்கட்டும்

அரபிக்கடல் நீச்சலடிச்சு

இத்தாலி போகட்டும்.


சட்டப்பேரவையிலிருந்து ஆரெஸெஸ் ரெவி ஓடிப்போனதை ஓவியர் தோழர் ரவி பாலெட் எழுதிய சித்திரத்தைப் பார்த்ததும் அந்த முழக்கத்தை மாற்ற வேண்டும் என்று தோன்றியது.

ஒடுறார். ஓடுறார்.

போன வருஷமும் ஓடினார்.

இந்த வருஷமும் ஓடினார்.

பொட்டி சட்டியை கட்டிக்கிட்டு

அப்படியே ஓடட்டும்.

பீகாருக்கு திரும்பிப் போக

இன்னும் வேகமாக ஓடட்டும்.


பிகு : டெல்லி மாரத்தான், தண்டி 60 ம் ஆண்டு ஓட்டம் என்று ராஜீவ் காந்தி சில ஓட்டங்களில் அந்த நேரத்தில் கலந்து கொண்டார். 

இன்றுதான் கடைசி நாள் என்பதால் . . .

 



நேற்று (20.01.2026) தான் சென்னை புத்தக விழாவிற்கு செல்ல முடிந்தது.  2006 முதல் ஒவ்வொரு வருடமும் தவறாமல் சென்று கொண்டிருக்கிறேன். முதல் வருடம் தமுஎகச வின் அன்றைய வேலூர் மாவட்டத் தலைவர் மறைந்த தோழர் பாவலர் முகில். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் தோழர் கே.கங்காதரன் ஆகியோருடன் வேறு ஒரு பணி நிமித்தம் சென்னை சென்ற போது அவர்களின் கட்டாயத்தால் சென்னை புத்தக விழாவிற்கு முதல் முறையாக சென்றேன். அப்போது பெரிதாக புத்தகங்கள் வாங்கவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் தமிழில் வரும் “கம்பன்” என்ற மென்பொருளை வாங்கி வந்தேன். அது என் சங்கப்பணிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருந்த்து. அடுத்த ஆண்டு முதல் தவறாமல் சென்று வருகிறேன். செகண்ட் ஹாண்டில்  சென்னையில் கார் வாங்கி விட்டு முதலில் சென்ற இடம் புத்தக விழாதான்.

 

நேற்று மதியம் உள்ளே நுழைந்ததும் முதலில் செய்த வேலை திருவள்ளுவர் சிலை முன்பாக புகைப்படம் எடுத்துக் கொண்டதுதான்.

 


வாங்க வேண்டிய நூல்களின் பட்டியலை ஸ்டால் எண் வரிசையில் போட்டு எடுத்துக் கொண்டு சென்றதால் வேலை சீக்கிரமே முடிந்தது. 31 நூல்கள் எனது பட்டியலில் இருந்த்து. அதிலே ஐந்து மட்டும் கிடைக்கவில்லை. பட்டியலில் இல்லாத நூல்களையும் வாங்கினேன்.  இன்று காலையில் நூல்களின் விபரங்களை கணிணியில் பட்டியலிட்ட போதுதான் இன்னும் மூன்று நூல்களை வாங்கியிருந்தால் அரை சதத்தை எட்டியிருக்கலாமே என்று தோன்றியது.

 

“நடந்த கதை” என்ற அற்புதமான குறும்படத்தை இயக்கியிருந்த தோழர் பொன்.சுதா “மதி மலர்” என்றொரு பதிப்பகத்தை துவக்கியுள்ளார். அவருடன் பேசிக் கொண்டிருந்த போது கரூவூலத்துறை ஊழியர் சங்கத்தில் மாநிலச் செயலாளராக இருந்த, என் வலைப்பக்கத்தில் அவ்வப்போது பின்னூட்டமிடுகிற தோழர் அவைநாயகன் அவர்களை சந்தித்தேன்.

 


இந்த முறை புறப்படும் முன்பே என் ஓட்டுனரிடம் என் சுமையை பகிர்ந்து கொள்ள நீங்கள் உள்ளே வர வேண்டும் என்று கூறியிருந்தேன். அதனால் கைகளில் வலி இல்லை. ஆனால் கால்கள் ஓய்வுக்காக கெஞ்சிய போது வெளியே வந்து விட்டேன். ஏற்கனவே நிலுவையில் உள்ள புத்தகங்கள், இப்போது வாங்கிய புத்தகங்கள் ஆகியவற்றை படித்து முடிக்கும் வரை புதிய புத்தகங்களை வாங்கக் கூடாது என்று நினைத்திருக்கிறேன். முடியுமா என்று தெரியவில்லை.   

 

சென்னை புத்தக விழா இன்று நிறைவுறுவதால் நான் வாங்கிய நூல்களின் விபரங்களை ஸ்டால் எண்ணுடன் அளித்துள்ளேன், இன்று செல்லும் யாருக்காவது உதவும் என்ற நம்பிக்கையோடு...

 

எண்

நூல்

ஆசிரியர்

அரங்கம் பெயர்

ஸ்டால் எண்

1

ரகசிய விதிகள்

சுபா

சூரியன் பதிப்பகம்

13

2

ஆர்ட்டிக்கிள் 29

முஹமது யூசுப்

யாவரும்

42

3

நுழை வாயில்

முஹமது யூசுப்

யாவரும்

42

4

பறதி

அமிர்தம் சூர்யா

யாவரும்

42

5

நீதித்துறை சுதந்திரம்

நீதிபதி கே.சந்துரு

மணற்கேணி

86

6

பேச்சு சுதந்திரம்

நீதிபதி ஏ.பி.ஷா

மணற்கேணி

86

7

நீர்த்துப்போன தொழிலாளர்சட்டங்கள்

நீதிபதி கே.சந்துரு

மணற்கேணி

86

8

திரையில் மலர்ந்த சிறுகதைகள்

அவை நாயகன்

மதி மலர் பதிப்பகம்

197

9

மனைவியை விற்றவன்

ஆண்டன் செகாவ் தமிழில் அவைநாயகன்

மதி மலர் பதிப்பகம்

197

10

தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

பிரபஞ்சன்

மதி மலர் பதிப்பகம்

197

11

ஆகச்சிறந்த 50 மலையாள சினிமா கதைகள்

   பொன்.சுதா

மதி மலர் பதிப்பகம்

197

12

சிற்றகல்

டிகே.கலாபிரியா

சந்தியா பதிப்பகம்

205

13

கடவுளின் கனி

சா.கந்தசாமி

சந்தியா பதிப்பகம்

205

14

கனிவு

வண்ணதாசன்

சந்தியா பதிப்பகம்

205

15

நான் பிழை

ரவிசந்திரன் அரவிந்தன்

வம்சி

228

16

காற்றடிக்கும் திசையில் ஊர் இல்லை

பா.செயப்பிரகாசம்

வம்சி

228

17

இறுதி யாத்திரை

எம்.டி.வாசுதேவன் நாயர் தமிழில் கே.வி.ஷைலஜா

வம்சி

228

18

பண்பில் ஆண்மை

புதிய மாதவி

நாற்கரம்

408

19

விசில்

நிவேதிதா லூயிஸ்

ஹெர் ஸ்டோரிஸ்

512

20

ரசூலின் மனைவியாகிய நான்

புதிய மாதவி

ஹெர் ஸ்டோரிஸ்

512

21

அரசியல் அரசி சத்தியவாணி முத்து

நிவேதிதா லூயிஸ்

ஹெர் ஸ்டோரிஸ்

512

22

காலத்தின் மீது எரிகின்ற கல்

சு.வெங்கடேசன்

விகடன் பிரசுரம்

F  02

23

வேட்டை நாய்கள் பாகம் 1

நரன்

விகடன் பிரசுரம்

F  02

24

திரையெல்லாம் செண்பகப்பூ

ஜா.தீபா

விகடன் பிரசுரம்

F  02

25

சம்படி ஆட்டம்

மாரி செல்வராஜ்

விகடன் பிரசுரம்

F  02

26

நீதித்திரைக்குப் பின்னே

நீதிபதி கே.சந்துரு

விகடன் பிரசுரம்

F  02

27

கைதி எண் 968

சி.மகேந்திரன்

நக்கீரன்

F  05

28

மலங்காடு

பிரபாஹரன் கே மூணாறு

நியூ செஞ்சுரி புக்ஹவுஸ்

F  07

29

தோழர் பொதியவெற்பன் அரைநூற்றாண்டுப் பயணம்

வீ.அரசு

நியூ செஞ்சுரி புக்ஹவுஸ்

F  07

30

தஞ்சை மாவட்ட்த்தில் ரத்தம் சிந்திய கம்யூனிஸ்டுகள்

எஸ்.ஜி.முருகையன்

நியூ செஞ்சுரி புக்ஹவுஸ்

F  07

31

மாதர் திரையுலகு

ஜா.தீபா

ஸீரோ டிகிரி

F  19

32

பன்றி வேட்டை

லஷ்மி சரவணகுமார்

ஸீரோ டிகிரி

F  19

33

சொட்டாங்கல்

எஸ்.அர்ஷியா

எதிர் 

F  40

34

சைலன்ஸ்

அ.கரீம்

எதிர் 

F  40

35

கெரில்லா போர் முறை

எர்னஸ்டோ சே குவாரா

எதிர் 

F  40

36

மீதெழல்

சாத்திரி

பாரதி புத்தகாலயம்

F  43

37

திருப்பரங்குன்றம் - முழு வரலாற்று ஆய்வு

சூர்யா சேவியர்

பாரதி புத்தகாலயம்

F  43

38

தமிழ் சிறுகதையின் தடங்கள்

ச.தமிழ்ச்செல்வன்

பாரதி புத்தகாலயம்

F  43

39

அருகில் பயணிக்கும் நிழல்

மதிமகள்

பாரதி புத்தகாலயம்

F  43

40

இஸ்ரேலிய இந்துத்துவ சினிமா

இ.பா.சிந்தன்

பாரதி புத்தகாலயம்

F  43

41

தீ பரவட்டும்

அண்ணாதுரை

பனுவல்

F 13

42

கடலும் கிழவனும்

எர்னெஸ்ட் ஹெமிங்வே

பனுவல்

F 13

43

ஒற்றன்

அசோகமித்திரன்

பனுவல்

F 13

44

மூமின்

ஷோபா சக்தி

பனுவல்

F 13

45

உதடுகள் சொல்லும் கதை

ச.சுப்பாராவ்

உயிர்மை

F 46

46

மதிகெட்டான் சோலை

சரவணன் சந்திரன்

உயிர்மை

F 46

47

கடைசி தேநீர்

உமா ஷக்தி

உயிர்மை

F 46