சங்கிகளின்
கூட்டங்களில் கலந்து கொள்ளும் உயர் நீதிமன்ற
நீதிபதி அவர்களின் மனைவி நடிகை கஸ்தூரி அவர்களுக்கு ஆட்டிசம் பாதிப்பு உள்ள குழந்தை இருப்பதால் அவர்களை கருணையோடு பார்த்து
ஜாமீன் தர வேண்டும் என்று பரிந்துரை கொடுத்துள்ளார். அவர் ஏதோ மாற்றுத் திறனாளி அமைப்பின்
அகில இந்திய துணைத்தலைவராம்.
நடிகை
கஸ்தூரி மீது எனக்கு எப்போதும் கருணையெல்லாம் வராது. அவரது ஆணவம் ஒரு காரணம். திராவிடர்களை
ஆபாசமாக, கொச்சையாக கூற சங்கிகள் பயன்படுத்தும் ஒரு கேவலமான வார்த்தையை உருவாக்கியவர்
அவர்தான். சிறப்புக் குழந்தையின் தாய் என்று கஸ்தூரிக்கு கருணை காட்டச் சொல்கிற நீதியரசரின்
மனைவிக்கு சாய்பாபாவை தெரியுமா?
சமீபத்தில்
மறைந்த பேராசிரியர் சாய்பாபா.
மோடியை
கொலை செய்ய திட்டமிட்டதாக சொல்லப்பட்ட பீமா கோரேகன் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட
மனித உரிமை ஆர்வலர்களில் அவரும் ஒருவர். பிறந்தது முதல் போலியோவால் பாதிக்கப்பட்டவர்.சக்கர
நாற்காலியில் இயங்கிக் கொண்டிருந்தவர். ஏராளமான உடல் உபாதைகள் கொண்டவர். ஆள் தூக்கிச்
சட்டமான UAPA சட்டத்தின் படி கைது செய்யப்பட்டாஎ. அவருக்கான மாத்திரைகளை அளிக்ககூட
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட வேண்டியிருந்தது. பல வருடங்கள் சிறையில் சித்திரவதை அனுபவித்த அவர் இறுதியில் அவர் இறந்தே போய் விட்டார்.
மாற்றுத்திறனாளியான
சாய்பாபாவிற்கு கருணை காண்பிக்கும் படி நீதியரசரின் மனைவி எப்போதாவது அறிக்கை வெளியிட்டுள்ளாரா? குறைந்தபட்சம் கடிதமாவது எழுதியிருப்பாரா>
கஸ்தூரி
மீது மட்டும் என்ன கருணை?
சிறப்புக்குழந்தையின்
தாய் என்பதெல்லாம் சும்மா சொல்லப்படும் ஒரு
சாக்கு.
சங்கி
என்பதுதான் ஒரே காரணம்.
No comments:
Post a Comment