மஹாராஷ்டிர அரசியல் களம் சுவாரஸ்யமாகியுள்ளது. அதிக இடங்களை வென்றுள்ளதால் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்தான் அடுத்த முதலமைச்சராக வேண்டும் என்று பாஜக சொல்கிறது (ஆர்.எஸ்.எஸ் சொல்கிறதா என்று தெரியவில்லை. சொல்லும் என்றே தோன்றுகிறது). அமலாக்கப்பிரிவின் கடாட்சம் வேண்டும் என்பதால் அஜித் பவார், பட்னாவிஸ் பக்கம் சென்று விட்டார்.
சிவசேனாவை உடைத்து முதல்வரான ஷிண்டேதான் முதல்வராக வேண்டும் என்று அவரது ஆட்கள் சொல்லத்தொடங்கி விட்டார்கள். பீகாரில் நிதீஷ்குமாருக்கு எம்.எல்.ஏ க்கள் குறைவு, அவர் முதல்வராக உள்ளாரே என்று தொடங்கி நல்லவரு, வல்லவரு, இதர இதர இதர வழிபாடுகளுக்கு குறைச்சலே இல்லை.
யார் முதல்வராவார்?
மூன்று பேரும் கிரிமினல்கள், சந்தர்ப்பவாதிகள், அதிகாரத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர்கள்.
ஷிண்டேவின் ஆதரவாளர்கள் அவருக்காக மஹாராஷ்டிராவில் உள்ள எல்லா கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்து கொண்டிருக்கிறார்களாம்.
கடவுள் அருள் யாருக்கு மோடி?
உங்கள் கடவுளைச் சொல்கிறேன், நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவந்த் தான்.
No comments:
Post a Comment