அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான தலைவர் தோழர் அமானுல்லா கான், சென்ற சனிக்கிழமையன்று நடைபெற்ற எங்கள் சென்னை 1 கோட்டத்தின் மாநாட்டில் உருதுக் கவிஞர் கைஃபி ஆஸ்மி அவர்களின் கவிதை வரிகளை கூறியுள்ளார்.
அனைத்து விளக்குகளும்
அணைந்த போதும்
ஒரே ஒரு தீபம் மட்டும்
எரிந்து கொண்டிருந்தது.
அது நம்பிக்கை எனும் தீபம்.
இக்கவிதையை அடித்தளமாகக் கொண்டு ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி
தோழர் ஆர்.ரமணன் இன்னொரு கவிதையை உருவாக்கியுள்ளார்.
பேணிக்காத்த விளக்குகளெல்லாம்
அணைந்தபோதும்
எரிந்துகொண்டிருந்தது
எம் நம்பிக்கை மட்டுமே .
அரக்க கை ஒன்று
அனைத்து கதவுகளையும் அடைத்தபோது
திறந்திருந்தது
நம் நம்பிக்கை சாளரம் மட்டுமே.
ராஜ பாதைகளெல்லாம் பாழடைந்தபோது
நல்வழி காட்டியது
நம்பிக்கை எனும் நடைபாதை மட்டுமே.
உறவுகளெல்லாம் ஓய்ந்தபோது
தோள் கொடுத்தது
தோழமை எனும் நம்பிக்கை மட்டுமே.
அரச சட்டங்களெல்லாம்
அடக்கும் அரண்களானபோது
உடைக்கும் உறுதுணையானது
அறிவியல் நம்பிக்கையும்
அறவியல் நம்பிக்கையுமே .
super 👍
ReplyDelete