மத்யமர் ஆட்டுக்காரன் குழு என்ற பெயரை மத்யமர் பொய்ப்பிரச்சாரக் குழு என்று மாற்றி வைத்து விடலாம். அந்த அளவிற்கு கூசாமல் பொய்களை உலவ விடுகிறார்கள்.
அந்த குழுவில் பார்த்த பதிவொன்று கீழே.
அவர் மசூதி என்று சொல்வது இந்து அறநிலையத்துறையின் இலச்சினை. ஜெயலலிதா காலத்திலிருந்தே பயன்பாட்டில் உள்ளது. “ பக்தர்கள் இரு கை கூப்பி வணங்குவது” போல வடிவமைக்கப்பட்டுள்ள இலச்சினை சங்கிகளின் காவிக் கண்களுக்கு மசூதியாகத் தெரிகிறது.
அதே
போல பசலி ஆண்டு என்பது வருவாய்த்துறை பயன்படுத்தும் ஆண்டாகும். ஜூலை முதல் ஜுன் வரை
உள்ள காலகட்டம் இது. இந்தியா முழுதும் பின்பற்றப்பட்டு வருகின்ற ஒன்று. இதிலே எங்கே
இருந்து அரேபிய ஆண்டு வருகிறது? இஸ்லாமிய ஆண்டு ஹிஜிரி ஆண்டு என்றுதான் அழைக்கப் படுகிறது,
இவர்களாகவே ஒரு பொய்யைச் சொல்லி இஸ்லாமிய மயம், வக்ப் வாரியம், நில ஆக்கிரமிப்பு என்றெல்லாம் கதை கட்டுகிறார்கள்.
மூடச் சங்கிகள் இந்த பொய்யை பரப்புவார்கள். சங்கிகள் அல்லாத இந்துக்களையும் மூளைச்சலவை செய்வார்கள்.
இப்படி வெறுப்பை விதைத்துத்தான் மோடி வகையறாக்கள் தேர்தலில் அறுவடை செய்கிறார்கள். பொய்கள் எடுபடாத இடமாக தமிழ்நாடு இருப்பதால் மேலும் லேலும் பொய்களைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதற்காகவே இது மாதிரியான குழுக்கள்.
இந்த பதிவிற்கு முகநூலில் ரிப்போர்ட் செய்துள்ளேன், எந்த பயனும் இருக்காது என்று தெரிந்தும்…
ஏனென்றால் முகநூல் நிர்வாகமே மோடியின் பிரச்சாரகராக மாறி பல ஆண்டுகளாகி விட்டது.
No comments:
Post a Comment