Friday, November 15, 2024

புல்டோசர் அராஜகத்திற்கு தடை

 



 உச்ச நீதிமன்றம் உருப்படியானதொரு தீர்ப்பை அளித்துள்ளது.

 அரசு யாரையாவது குற்றவாளி என்று கருதி கைது செய்தால் அவருடைய வீட்டை புல்டோசர் கொண்டு இடிப்பது என்பது மொட்டைச்சாமியார் துவக்கி வைத்த அராஜகச் செயல். குற்றவாளியாகவே இருந்தாலும் அந்த குற்றவாளியின் வீட்டை இடிப்பது என்பதெல்லாம் சமஸ்கிருத பெயரில் மோடி கொண்டு வந்த மூன்று சட்டங்களில் கூட இல்லாத ஒன்று. அப்படி இடிக்கப்படும் வீடுகளில் பெரும்பாலானவை இஸ்லாமியர்களுடையது என்பதை தனியாக சொல்ல வேண்டுமா என்ன!

 மொட்டைச்சாமியார் உ.பி யில் செய்யும் அராஜகத்தை பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களும்  செய்யத் தொடங்கின.

 தங்கள் குற்றச்செயலை நியாயப்படுத்த அவை அனுமதி பெறாத கட்டுமானங்கள் என்று கட்டுக்கதை சொல்லத் தொடங்கின. அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் வரை அவை அனுமதி பெறாதவை என்று தெரியாதா அல்லது இடிப்பதற்கு முன்பு நோட்டீஸ்  தர மாட்டீர்களா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தாலும் அக்கேள்விகளை சங்கி அரசுகள் புறம் தள்ளினர்.

 இப்போது உச்ச நீதிமன்றம் புல்டோஸர் அராஜகத்திற்கு பிரேக் போட்டுள்ளது. எந்த ஒரு க்லட்டுமானத்தை இடிக்கும் முன்பும் சம்பந்தப்பட்டவர்களுக்கு 15 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் தரப்பு நியாயத்தை கேட்டு பரிசீலித்த பின்புதான் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

 மொட்டைச்சாமியார் வகையறாக்களின் முரட்டு அராஜகத்திற்கு உச்ச நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டுள்ளது நல்லது.

 இதனை சங்கி அரசுகள் மதிப்பார்களா இல்லை எச்.ராசா போல உச்ச நீதிமன்றமாவது ஹைகோர்ட்டாவது என்று அராஜகத்தை தொடர்வார்களா?

No comments:

Post a Comment