Sunday, November 17, 2024

சனாதனம் சமத்துவம் என்ற சங்கிக்கு சமர்ப்பணம்.

 


ஆட்டுத்தாடி சிருங்கேரி சங்கராச்சாரியாரை சந்தித்த புகைப்படத்தை ரங்கராஜ் பாண்டே “கண்ணில் பட்டது” என்று பகிர்ந்து கொள்ள, பாஜக ஐ.டி விங் மாநிலப் பொறுப்பாளர் சின்னப்பையனோ அந்த கண்ணில் கட்ட புகைப்படத்தை “சமத்துவம் போதிக்கும் சமாதானம்” என்று புளகாங்கிதம் அடைந்துள்ளான்.

 அப்படி புளகாங்கிதம் அடைய அந்த புகைப்படத்தில் என்ன உள்ளது?

 ஆட்டுத்தாடி அமர நாற்காலி கொடுக்கப்பட்டுள்ளது. சங்கர மடத்தில் நாற்காலி கொடுத்ததால் சனாதனம் சமத்துவத்தை கடைபிடிக்கிறது என்று சங்கிகள் சொல்கிறார்கள்.  ஆட்டுத்தாடி கையில் அதிகாரமிருப்பது மட்டுமல்ல, மேட்டுக்குடியையும் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு நாற்காலி கிடைத்திருக்கலாம்.

 


ஆட்டுக்காரனும் மத்திய மந்திரியாக இருக்கும் எல்.முருகனும் காஞ்சி சங்கர மடத்தால் கொல்லைப்புறத்தில் தரையில்தான் உட்கார வைக்கப் பட்டார்கள்.

 ஆகஸ்ட் மாதத்தில் அப்போது எழுதிய பதிவு கீழே உள்ளது.

 சனாதனம் சமத்துவமானது என்று எழுதிய அந்த முட்டாள் சங்கிக்கு அப்பதிவு சமர்ப்பணம்.      

ஆட்டுக்காரனுக்கு ஜமுக்காளம். எல்.முருகனுக்கோ ????

 


விஜயேந்திர சரஸ்வதியை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதாக ஆட்டுக்காரன் புளகாங்கிதத்துடன்  பகிர்ந்து கொண்ட புகைப்படங்களை ஆட்டுக்காரனின் ட்விட்டர் பக்கத்தில் பார்த்தேன்.

 அந்த புகைப்படங்களை பார்க்கையில் ஒரு விஷயம் தெளிவாக தெரிந்தது. ஆட்டுக்காரனுக்கு சரியாசனம் தரப்படவில்லை என்பதை விட மடத்திலோ அல்லது வீட்டிற்குள்ளோ ஆட்டுக்காரனுக்கு தரிசனம் தரப்படவில்லை. கொல்லைப்புறத்தில் வைத்துத்தான் ஆட்டுக்காரனுக்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்டுள்ளது. உள்ளே நுழையும் அளவிற்குமான தகுதிகளோ, அருகதையோ  ஆட்டுக்காரனுக்கு இல்லை போல . . .

 


ஆட்டுக்காரனுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை போலவேதான் எல்.முருகனும் கொல்லைப்புறத்தில் உட்கார வைக்கப்பட்டார். அந்த புகைப்படத்தை தேடி  எடுத்து பார்த்தேன்.

 அப்போதுதான் ஒரு முக்கியமான விஷயத்தை கவனித்தேன்.

 ஆட்டுக்காரன்,எல்.முருகன் இருவரும் வீட்டிற்குள்  அனுமதிக்கப்படவில்லை. இருவரும் கொல்லைப்புறத்தில்   அமர வைக்கப்பட்டாலும்  ஆட்டுக்காரன் உட்கார ஒரு ஜமுக்காளம் போடப்ப்ட்டுள்ளது. ஆனால் பாவம் எல்.முருகனோ தரையில்தான் உட்கார்ந்துள்ளார்.



 ஒரு ஜமுக்காளத்தில்  உட்காரும் அளவிற்குக்கூட எல்.முருகனுக்கு தகுதி கிடையாதா?

 இது தீண்டாமையன்றி வேறில்லை . . .

 

No comments:

Post a Comment