சென்னை மாநகராட்சி, எட்டு கால்பந்து மைதானங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது என்று முடிவெடுத்தது, தீர்மானம் நிறைவேற்றியது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர்கள், மாநகர மன்றத்தில் கடுமையாக எதிர்த்தார்கள். கட்சி மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது.
மார்க்சிஸ்ட் கட்சியின் பெண் கவுன்சிலர்கள் ரிப்பன் மாளிகைக்குள் கால்பந்து விளையாட, அது பரபரப்புச் செய்தியானது.
மாநகராட்சி தன் முடிவை திரும்பப் பெற்றுக் கொண்டது.
மக்களுக்காக போராடும் ஒரே இயக்கம் மார்க்சிஸ்ட் கட்சிதான் என்பது பத்து கோடியே எழுபத்தி எட்டு லட்சத்து இருபத்தி ஏழாயிரத்து முன்னூற்று எண்பதாவது முறையாக தமிழ்நாட்டில் மட்டும் நிரூபணமாகியுள்ளது.
உண்டியல் குலுக்கிகள் என்று கிண்டல் செய்யும் அற்பர்கள் யாருக்கும் இந்த பெருமிதம் கிடைக்காது.
ஆமாம்.
சென்னை மாநகராட்சியில் பாஜக கவுன்சிலர் ஒருவர் உள்ளாரே! கோட்சே புகழ் பாடும் ஜாதி வெறி பிடித்த ஒரு பெண்மணி! அவர் எதிர்த்தாரா?
"அட நீங்க வேற தோழர்! மைலாப்பூர் மைதானத்தை வாங்கி ஷாகா நடத்த ப்ளான் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க: என்று நீங்கள் மனதில் நினைத்தது காதில் விழுந்து விட்டது/