Monday, July 17, 2023

ஒரு வாரம் சஸ்பென்ஷன்

 


சங்கிகளால் சங்கிகளுக்காக நடத்தப்படும் ஒரு சங்கி முகநூல் க்ரூப் “மத்யமர் அரசியல்” அதை நான் செல்லமாக “மத்யமர் ஆட்டுக்காரன்” க்ரூப் என்றுதான் சொல்லுவேன். அந்த அலவிற்கு ஆட்டுக்காரன் புகழ் பாடும் க்ரூப் அது, ஆனாலும் நடுநிலை போல நாடகம் போடுவார்கள். சங்கிகள் எந்த அளவிற்கு கதை விடுவார்கள் என்று தெரிந்து கொள்ளவும் அதிலிருந்து கன்டென்ட் கிடைக்கும் என்பதற்காகவே அந்த க்ரூப்பில் நீடிக்கிறேன்.

 போன மாதம் ஒரு  தோழர், அந்த க்ரூப் விஷயங்களை பகிர்ந்து கொண்டு உங்கள் தரத்தை குறைத்துக் கொள்ள வேண்டுமா என்று கேட்டார். அதற்குப் பிறகு அதிலிருந்து கன்டென்ட் எடுப்பதை நிறுத்தி விட்டேன். எப்போதாவது பொறுக்க முடியாத அளவிற்கு புளுகினால் மட்டும் பின்னூட்டம் இடுவோம்.

 ஒரே ஒரு விதி விலக்கு உண்டு. சென்னையில் ஒரு கோயிலில் தீர்த்தவாரி திருவிழாவில் ஐந்து பக்தர்கள் இறந்து போன போது “பங்குனி உத்தரத்தன்று கோயிலில் அவர்கள் இறந்து போனது அவர்கள் செய்த புண்ணியம்” என்று பதிவு போட்ட ஒருவரை மட்டும் கலாய்ப்பேன்.

 நேற்று ஒரு ஃபேக் ஐடி, முதுபெரும் பொதுவுடமையாளரும் சுதந்திரப் போராட்ட வீரரும் நூற்றாண்டை கடந்தவருமான தோழர் சங்கரய்யாவை தரக்குறைவாக எழுதிய போது கோபத்தோடு பின்னூட்டம் போட்டேன். கம்யூனிஸ்டுகளுக்கு சுதந்திரப் போராட்ட வரலாற்றை வகுப்பெடுத்த அந்த ஃபேக் ஐடி, சாவர்கார், ஹெட்கேவர், வாஜ்பாய் ஆகியோரெல்லாம் சுதந்திரப் போராட்ட தியாகி என்று கதை விட்ட போது அந்த வரலாறுக்கு பதில் சொல்லு என்று மீண்டும் மீண்டும் சொன்ன போது, நீங்கள் சொன்ன பொய்கள் எல்லாம் பதில் சொல்ல அருகதையற்றது என்று கூறி விட்டேன்.




 ஒரு ஃபேக் ஐடி இவ்வளவு மோசமாக பேசுவதா என்பதால் “யாருடைய ஃபேக் ஐடி? என்ற கேள்வியைக் கேட்டேன். இன்னொன்றையும் சொல்ல வேண்டும். இந்த குழுவில் உலாவும் பெரும்பாலான ஃபேக் ஐடிகள் பெண்களின் பெயர்களில்தான் இயங்கும். திருநர் ஆன சிகண்டியை முன் வைத்து பீஷ்மரைக் கொன்ற மகாபாரத டெக்னிக்தான். இதையும் குறிப்பிட்டேன்.

 பிறகு எந்த பின்னூட்டமும் வரவில்லை. என்னாலும் எந்த பின்னூட்டமும் இட முடியவில்லை. ஒரு வார காலத்திற்கு அந்த க்ரூப்பிலிருந்து என்னை சஸ்பென்ட் செய்துள்ளனர் என்பது  பிறகுதான் தெரிந்தது.

 குழு நடத்துபவர்களே, பொய்களையும் கட்டுக்கதைகளையும் வெறுப்புப் பிரச்சாரம் செய்ய ஃபேக் ஐடிகளை உற்பத்தி செய்து உலாவ விடுகிறார்கள்    இந்த உண்மையை கேள்வி கேட்டது  அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்களால் செய்யக்கூடிய ஒரே ஒரு நடவடிக்கை என்னை குழுவிலிருந்து வெளியே அனுப்புவது அல்லது முடக்குவது.

 ஒரு வார அவகாசம் முடிந்த பின் தீவிரமாக களமாடலாம் என்றுதான் நினைத்துள்ளேன். அநேகமாக அதுதான் என்னை  வெளியேற்ற வைக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனால் அதற்குள் அவர்கள் என் ஆட்டத்தை பார்ப்பார்கள். 


2 comments:

  1. எனக்கும் துக்ளக் முகநூல் பக்கத்தில் கிடைத்தது

    ReplyDelete
    Replies
    1. அவர்களால் உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாது.

      Delete