Friday, November 4, 2016

விற்பனையில் இந்தியாவின் வீரப் பெருமிதம்





நேற்றுதான் தொலைக்காட்சியில் அந்த விளம்பரத்தைப் பார்த்தேன்.

“ஐ.என்.எஸ் விக்ரந்தின் உறுதியோடு” என்று பஜாஜ் கம்பெனியின் புதிய பைக் விளம்பரம் சொல்கிற போது முதலில் புரியவில்லை.

இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்திற்கும் பஜாஜ் பைக்கிற்கும் என்னய்யா சம்பந்தம்? ஒரு வேளை விக்ரந்த் போர்க்கப்பல் போல இது அவ்வளவு உறுதியானதா? இல்லை கடலில்தான் ஓட்ட வேண்டுமோ என்று குழம்பிப் போனேன்.

பிறகு கொஞ்சம் இணையத்தில் தேடிய பிறகுதான் உண்மையை அறிந்து கொண்டேன்.

இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ் இங்கிலாந்து கடற்படைக்காக ஹெர்குலஸ் என்ற பெயரில் தயாரானது. அதை இந்தியா வாங்கி விக்ரந்த் என்று பெயர் சூட்டி பயன்படுத்தியது. அதன் செயல்பாட்டுக் காலம் முடிந்தது அதனை ஒரு அருங்காட்சியமாக மாற்றினார்கள். ஆனால் ஏதோ காரணம் சொல்லி அதை மூடி விட்டு அந்த போர்க்கப்பலை உடைத்து விட்டார்கள்.

அப்படி உடைக்கப்பட்ட கப்பலின் இரும்பை உருக்கித் தயாரிக்கப்பட்டதாம் அந்த பஜாஜ் பைக். அதனால் அதன் பெயர் பஜாஜ் வி யாம்.

இந்தியாவின் பெருமிதமாக இருந்த போர்க்கப்பல் இன்று பஜாஜ் கம்பெனியின் விளம்பரத்திற்கு, விற்பனைக்கு பயன்படுகிறது.

இதிலே தேச பக்தியை உசுப்பேற்றாமல் இருந்தால் சரி  

4 comments:

  1. இந்த பைக்கின் டேங்க் மூடி மட்டுமே அக் கப்பலின் இரும்பை உருக்கி செய்யப் பட்டது என்று பஜாஜ் ஷோ ரூமில் தெரிவித்தார்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆனால் விளம்பரத்தில் அவ்வாறு சொல்லப்படவில்லை. முழு வாகனமுமே தயாரிக்கப்பட்டதாகத்தான் சொல்கிறார்கள்

      Delete
  2. உருக்கிய இரும்பு தீர்ந்து போச்சுனா என்ன செய்வாங்க?

    ReplyDelete
    Replies
    1. அதானே? உற்பத்தியை நிறுத்தி விடுவார்கள் என்று நம்புவோமாக

      Delete