Sunday, November 13, 2016

மூளையை அடகு வைத்தவர்கள்
மோடியின் முட்டாள்தனமான நடவடிக்கை மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்து வருகிறது.  

வழக்கமான நிலை என்பது அவ்வளவு சீக்கிரமாக வரப்போவதில்லை என்பதை மோடியும் ஜெய்ட்லியும் தெளிவாகச் சொல்லி விட்டார்கள்.

கையில் இருக்கும் பணம் செல்லாது. வங்கியில் இருக்கும் பணம் கைக்கு அவ்வளவு சுலபமாக வரப்போவதில்லை. எத்தனையோ வேலைகள் எவ்வளவோ பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று வங்கிகளின் வாசல்களில் கருப்புப் பணத்தை பதுக்கியவர்கள் யாரும் நிற்கவில்லை. இந்தியா முழுதும் லட்சோப லட்சம் ஏழை, நடுத்தர மக்கள்தான் வங்கிகளின் முன்னால் இருக்கும் எல்லா வேலைகளையும் விட்டு விட்டு, அன்றைய கூலியையும் இழந்து விட்டு தவிக்கிறார்கள்.

அரசின் இந்த நடவடிக்கையால் அவர்கள் பீற்றிக் கொள்வது போல எதுவும் நிகழப்போவதில்லை என்ற யதார்த்தம் ஒரு புறம் இருக்க, தற்போது புழக்கத்தில் உள்ள நோட்டுக்களில் 85 % ஐநூறு நோட்டுக்கள் என்று நிதியமைச்சரே சொல்கிற போது அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்யாமல் ராவோடு ராவாக தாக்குதல் நடத்துவது என்பதை எதைக் குறிக்கிறது.

நிர்வாகத்திறன் அற்ற கையாலாகத அரசு என்பதைத்தானே!

எந்த வங்கியிலும் கூட்டம் குறையவில்லை. ஏ.டி.எம் கள் மூடப்பட்டே இருக்கிறது. கஷ்டப்பட்டு வாங்கிய 2000 ரூபாய் நோட்டை மாற்ற போதுமான சில்லறை கிடையாது. இன்றைய தேதியில் அதுவும் செல்லாத நோட்டுதான்.

அரசின் முடிவை விமர்சிப்பது பொறுப்பற்ற செயல் என்று சொன்னதன் மூலம் நான் உயிரோடுதான் இருக்கிறேன் என்பதை நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லி நிரூபித்துள்ளார். இவர்களின் பொறுப்பற்ற செயல்தான் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது என்பதை ஒப்புக் கொள்ளப் போவதில்லை.

இதிலே வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல "ஊழல் செய்தவர்கள்தான்  நாலாயிரம் ரூபாய் பணத்துக்காக வரிசையில் நிற்கிறார்கள் என்று மோடி நக்கலாக பேசுகிறார்.

ராகுல் காந்தி செய்தது அப்பட்டமான நாடகம். 56 இஞ்ச் மார்பர் நேரடியாக ராகுல் காந்தியை பேரைச் சொல்லி கண்டிக்கட்டும். ஆனால் அதற்கு தைரியமில்லாத கோழையாக கியூவில் நிற்கும் அனைத்து இந்திய மக்களையும் ஊழல் பேர்வழிகள் என்று வெட்கமே இல்லாமல் திட்டுகிறார். 

மோடிக்கு ஜால்ரா அடிப்பதையே கடந்த சில நாட்களாக பிழைப்பாக வைத்திருக்கிற அடிப்பொடிகள் சாமானிய மக்கள்தான் ஊழல்களுக்கும் கருப்புப் பணத்திற்கும் காரணம். ஆகவே அவர்கள் கியுவில் நின்று சாகட்டும் என்று செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதனை பலரும் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டும் இருக்கிறார்கள்.

மோடி மேனியா எனும் நச்சுச் சுழலில் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தங்கள் மூளையை மூடத்தனத்திற்கு அடகு வைத்து விட்டார்களா என்ற சந்தேகம்தான் எழுகிறது.

அடுத்த நாடகத்தையும் மோடி அரங்கேற்றி விட்டார். 

அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று. யாருடைய மரணமும் விருப்பமானது கிடையாது. 

ஆனால் உங்கள் டயலாக் படி உங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் உங்களுக்காக இந்திய மக்கள் கண்ணீர் விட மாட்டார்கள். உங்களது  போலி கருப்புப் பண மீட்பு நாடகத்தால் அவர்கள் ஏற்கனவே கண்ணீர் வடித்து விட்டார்கள். 

கண்ணீர் ஏற்கனவே காய்ந்து விட்டது. 

 

3 comments:

  1. similar to thuklak changed the capital from delhi to devagiri and again move back to delhi. due course only 10 lak people died.....

    ReplyDelete
  2. மக்களுக்கு கஷ்டமே இல்லை ஐயா. நீங்கதான் ஆ ஊ ன்னா பந்த கடையடப்பு ன்னூனு பழக்கி வைத்திருக்கிறிர்கள்.எப்ப ஏது ஆகுமோ என்று வைற்றில் நெருப்பை கட்டி கொண்டு வாழ பழக்கி விட்டிர்கள்.இதெல்லாம் ஒரு ஜுஜுபி.

    ReplyDelete
  3. இந்த பதிவின் தலைப்பே உங்களைப் போன்ற மூளையை அடகு வைத்தவர்களைத்தானே சொல்கிறது. கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாதவ்ர் என்று சொன்னதை நிரூபித்தமைக்கு நன்றி

    ReplyDelete