Tuesday, September 13, 2016

கர்னாடக அரசை கலைக்கச் சொல்வது மூடத்தனம்




கர்னாடகத்தில் நடக்கும் கலவரங்களை முன்வைத்து அங்கேயுள்ள சித்தராமய்யா அரசை கலைத்திட வேண்டும் என்ற கருத்துக்கள் பரப்பப் படுகின்றன.

கர்னாடகா தனி நாடாகவும் இந்தியா தனி நாடாகவும் பிரிந்து பன்னாட்டு விதிகள் படி பேசித் தீர்த்துக் கொள்வோம், இந்தியப் பிணத்தை சுமப்பதில் இருந்து விடுதலை பெற காவிரித்தாய் வழி வகுத்ததாக தியாகு பேசியதாக ஒரு ஆடியோ வாட்ஸப்பில் உலா வருகிறது.

இதையெல்லாம் விட மூடத்தனம் எதுவும் இருக்க முடியாது.

தமிழகமும் கர்னாடகமும் தனி நாடுகளாவது போன்ற கற்பனைகள் எதுவும் இருக்க முடியாது. 

இக்கலவரங்களின் பின்னணியில் முதன்மையாக இருப்பது பாஜக வைச் சேர்ந்த ரௌடிகள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அப்படி இருக்கையில் கர்னாடக மாநிலத்தை கவர்னர் ஆட்சிக்குக் கீழே கொண்டு வருவது என்பது கலவரத்தை கையிலெடுத்தவர்கள் கையில் கர்னாடக மாநிலத்தை ஒப்படைப்பதாகவே இருக்கும்.

கொதிக்கும் பாத்திரத்திலிருந்து தப்பிக்க எரியும் அடுப்பில் குதிக்கச் செய்யும் மூடத்தனத்தை பரிந்துரைக்காதீர்கள். திருடர்கள் கையிலே சாவியை ஒப்படைக்க முடியுமா?

காவிரியைப் பயன்படுத்தி காவிகள் ஆட்சிக்கு வர விரும்புவதற்கு ஊக்க மாத்திரை அளிக்க வேண்டாம். 

உறக்கத்தில் இருக்கும் தமிழக அரசு, கள்ள மௌனத்தை கடை பிடிக்கும் மத்தியரசு, கையாலாகத கர்னாடக அரசு ஆகியோர் செயல்பட வேண்டும் என்று ஒற்றுமையோடு குரல் கொடுப்பதுதான் உடனடித் தேவை. 

 

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. ஐயா, இந்தப் பிரச்சினை எல்லா முதல்வர்கள் காலத்திலும் தொடர்கிறது, பங்காரப்பா, எஸ் எம் கிருஷ்னா, எடியூரப்பா தற்போது சித்தாராமையா. பிரச்சினையை எல்லா அரசியல் கட்சிகளும் "அரசியல்" செய்கின்றன. தமிழ்நாட்டிலும் தான். அதற்காக அரசை கலைக்கவேண்டியதில்லை.
    நமக்கு தண்ணி குடுத்தாமட்டும் நாம என்ன ஒழுங்கா வச்சுக்குவோமா.
    முதல்ல எல்லா ஆத்தங்கரையோரம் இருக்கிற தண்ணி கம்பனி காரங்களை தொரத்தினாலே போதும். அவங்கதான் "எல்லாத்தையும்" உறிஞ்சிடரானுங்களே
    விஜயன்

    ReplyDelete
  3. தமிழகமும் கர்னாடகமும் தனி நாடுகளாவது போன்ற கற்பனைகள் எதுவும் இருக்க முடியாது.

    சிலர் தனிநாடு எடுப்பதெல்லாம் வடை சுடுவது போன்றது என்று நம்பி கொண்டிருக்கிறார்கள்.
    அப்புறம் கனடாவில் இருந்து தமிழர் படை அணி ஒன்று பெங்களூரை நோக்கி தயார் நிலையில் உள்ளதாமே :)

    ReplyDelete